நடிகை நயன்தாராவுடன் நடிகர் விஜயகுமார் மகள் “அனிதா”.. பட்டு வேஷ்டியில் மகன்.. விஷயம் இதுதானா?
சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா நடிகை நயன்தாராவோடு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதுபோல அந்த புகைப்படத்தில் அனிதாவின் மகன் மற்றும் அப்பா எல்லோருமே ட்ரெடிஷனல் உடையில் இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை வெளியிட்ட அனிதா அது குறித்த காரணத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.
அது வேறு ஒன்றும் இல்லை இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் கலந்து கொண்ட விஜயகுமார் குடும்பத்தினர் அங்கு வந்திருந்த பல பிரபலங்களோடு புகைப்படங்களை எடுத்து இருக்கின்றனர். அதுதான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு பெயர் வாங்கிய இயக்குனர் சங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கும் நிலையில் அதில் நடிகர் ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, விக்ரம், நயன்தாரா, நடிகை சுகாசினி என பல பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக காணப்படும் இயக்குனர் ஸங்கர் ஜென்டில்மேன் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதற்குப் பிறகு இந்தியன், ஜீன்ஸ், காதலன், பாய்ஸ், முதல்வன், சிவாஜி, அந்நியன், நண்பன், எந்திரன் 2.0 என ஏகப்பட்ட ஹிட் திரைப்படங்களை இயக்கி ஒட்டுமொத்த சினிமா உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்திருந்தார்.

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் திருமணம் பிரம்மாண்டமாக இன்றைய தினம் நடைபெற்று இருக்கிறது. அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தி உள்ளார். அதுபோல இயக்குனர் சங்கருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இவரின் இளைய மகள் அதிதி சங்கர் விருமன் படத்தில் மூலம் சினிமாவில் நுழைந்தவர். அதைத் தொடர்ந்து மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது நடிகர் அதர்வாவின் தம்பி நடிக்கும் படத்தில் ஹீரோயினியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல இயக்குனர் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா சில ஆண்டுகளுக்கு முன்பு ரோஹித் என்பவரை திருமணம் செய்தார்.
ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுவிட்டார். அதற்கு பிறகு இரண்டாவது திருமணம் ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. இந்த நிலையில் உதவி இயக்குனராக இருக்கும் தருண் கார்த்திக்கை தன்னுடைய மருமகனாக ஷங்கர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். தருண் மற்றும் ஐஸ்வர்யாவின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்த பங்க்ஷனில் கலந்து கொண்ட நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா அங்கு தன்னுடைய தந்தை மற்றும் தன்னுடைய சகோதரி பிரீத்தா, நடிகை நயன்தாரா, தன்னுடைய மகன் மற்றும் நடிகை நளினி போன்றவர்களோடு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
-
பிரேம்ஜியுடன் காதலா? 40 வயது வரை அவர் கல்யாணம் பண்ணாத காரணம்.. ஓபனாக பேசிய சோனா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications