கையில் குழந்தையுடன் விஜயகுமார் பேத்தி வெளியிட்ட பதிவு.. மொத்த குடும்பமும் சேர்ந்தாச்சு!குவியும் வாழ்த்து
சென்னை: தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பயணித்து, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகுமார். வில்லன், குணச்சித்திரம், அப்பா, தாத்தா என பல்வேறு கதாபாத்திரங்களில் முத்திரை பதித்தவர் விஜயகுமார். இன்றும் அவரது பெயர் சொன்னாலே ஒரு கம்பீரம், ஒரு மரியாதை தானாக வந்து சேரும்.
இந்நிலையில், நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சந்தோஷமான செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜயகுமாரின் பேத்தி தியா, கையில் குழந்தையுடன் எடுத்துக் கொண்டுள்ள சில புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது லண்டனில் வசித்து வரும் தியா, குழந்தையுடன் இருக்கும் அந்த அழகான தருணங்களை பகிர்ந்ததை தொடர்ந்து, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜயகுமாரின் குடும்பம் என்பது தமிழ் திரையுலகில் பலருக்கும் பரீட்சையமானது தான். அவரது இரண்டு மனைவிகளுக்கும் பிறந்த குழந்தைகள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் மக்கள் கவனத்தை பெற்றவர்கள். விஜயகுமாரின் குழந்தைகளில் நடிகர் அருண் விஜய், நடிகை வனிதா விஜயகுமார், கவிதா விஜயகுமார், பிரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் சினிமா மற்றும் ஊடக உலகில் பரிச்சயமான பெயர்கள். இவர்களில், அனிதா விஜயகுமார் மட்டும் நடிப்புத் துறையை விட்டு விலகி, மருத்துவராக தன்னுடைய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார்.

மருத்துவரான அனிதா விஜயகுமார், கோகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா மற்றும் ஸ்ரீஜெய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகளான தியா, பெற்றோரின் வழியைப் பின்பற்றி மருத்துவம் படித்து, தற்போது மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
தியா, கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணம் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், குடும்ப நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு பிறகு, தியா தன்னுடைய கணவருடன் லண்டனில் செட்டிலாகி வாழ்க்கையை தொடங்கினார்.

சமீபத்தில், லண்டனில் புதிய வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. அந்த சந்தோஷமான தருணங்கள் இன்னும் மனதில் இருந்து போகாத நிலையில், தற்போது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை இன்னும் அதிகமாக நெகிழ வைத்திருக்கிறது. ஆனால் அது யார் குழந்தை என்று தியா அந்த பதிவில் தெளிவாக சொல்லவில்லை. தங்களுடைய குடும்பத்திற்கு வந்த புது வரவு என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பயணிக்கும் விஜயகுமார் குடும்பத்தின் இந்த சந்தோஷமான தருணங்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. "விஜயகுமார் குடும்பத்தில் இன்னொரு மகிழ்ச்சி" என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தியா வீட்டில் நடந்த பங்க்ஷனில் நடிகர் அருண் விஜய் உட்பட மொத்த குடும்பத்தினரும் ஒன்றாக சேர்ந்து இருக்கின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications