Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயகுமார் வீட்டில் திடீர் பங்க்ஷன்.. அருண் விஜய் பொண்ணு இவ்ளோ வளர்ந்துட்டாங்களே? குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்பட்டது. அப்போது சாதாரண மக்கள் போலவே பல பிரபலங்களும் இந்த விரதத்தை கொண்டாடி இருக்கிறார்கள். அதில் நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தினர் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது. அதில் நடிகர் அருண் விஜய்யின் மகள் மற்றும் மகனை பார்த்ததும் அருண் விஜய்யின் குழந்தைகள் இவ்வளவு வளர்ந்து விட்டார்களே என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் விஜயகுமார் பல வருடங்களாகவே சினிமாவில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வந்த இவர் தற்போது வரை கெத்தான கேரக்டரில் நடித்து வருகிறார். விஜயகுமாரின் குடும்பத்தில் அவருடைய ஒரே ஒரு மகளை தவிர மற்ற எல்லோருமே நடிகர்களாக தான் இருக்கின்றனர்.

Television Vijayakumar Anitha

விஜயகுமாருக்கு 2 மனைவிகள் என்பது சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரியும். அவருடைய மூத்த மனைவி முத்துக்கண்ணுக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என மூன்று குழந்தைகள். அதோடு இரண்டாவது மனைவியான மஞ்சுளாவிற்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். இதில் வனிதா மட்டும் குடும்பத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். மற்ற எல்லோரும் ஏதாவது பங்க்ஷன் என்றால் ஒன்றாக கூடி விடுகிறார்கள்.

அதிலும் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதாவின் மகள் திருமணத்தில் மொத்த குடும்பத்தினரும் சேர்ந்து திருமணத்தை சிறப்பாக முடித்து இருந்தனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டன. அதற்கு பிறகு சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் விஜயகுமாரின் பேத்தி ரிசப்ஷன் நடைபெற்றது. அப்போது அங்கு அவருடைய முதல் மனைவியின் குழந்தைகள் மட்டுமே அதில் கலந்து கொண்டனர்.

ஆனால் மஞ்சுளாவின் மகள்கள் இருவரும் அந்த பங்க்ஷனில் கலந்து கொள்ளவில்லை. இது பற்றி பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் நேற்று வரலட்சுமி விரதம் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது. இதுவரைக்கும் அரைகுறை உடையோடு போட்டோ சூட் நடத்திய நடிகைகள் கூட நேற்று பாரம்பரிய உடை அணிந்து ட்ரடிஷனலாக பல புகைப்படங்களையும் எடுத்து நேற்று இணையத்தை தெறிக்க விட்டார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தினரும் தாங்கள் வரலட்சுமி விரதம் கொண்டாடிய போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றனர். அப்போது நடிகை சினேகா, சங்கீதா உட்பட பல நடிகைகள் இவர்களுடைய கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர். அதோடு விஜயகுமாரின் குடும்பத்தினரும் அதில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

Television Vijayakumar Anitha

ஆனால் அவருடைய இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் மகள்கள் மட்டும் அந்த படங்களில் அதிகமாக காணப்படவில்லை. ஆனாலும் அருண் விஜய் அவருடைய குடும்பத்தோடு எடுத்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகள் மற்றும் மகன் வளர்ந்து விட்டார்களா? என்று வியப்போடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஆரம்பத்தில் அருண் விஜய் சினிமாக்களில் சாப்டான கேரக்டரில் நடித்து வந்தாலும் இப்போது வில்லனாகவும் அதிரடியான கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் அருண் விஜயின் மகள் இன்னும் ஒரு சில வருடங்களில் சினிமாவில் கதாநாயகியாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+