பிரம்மாண்டமாக நடந்த விஜயகுமார் பேத்தி வளைகாப்பு.. சொந்தங்கள் சூழ நெகிழ்ந்த அருண் விஜய் குடும்பம்
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமார் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அவரது பேத்தி தியா கர்ப்பமாக இருப்பதை அறிவித்ததைத் தொடர்ந்து, சமீபத்தில் குடும்பத்தினரால் வளைகாப்பு விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

வளைகாப்பு விழா
தியா-திலன் தம்பதிக்காக நடத்தப்பட்ட இந்த வளைகாப்பு விழாவில், விஜயகுமாரின் குடும்பத்தினர் பெருமளவில் கலந்து கொண்டனர். அவரது மகள்களான அனிதா, கவிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் தியாவுக்கு பாரம்பரிய முறையில் வளையல் அணிவித்து ஆசீர்வதித்தனர். அதேபோல், விஜயகுமாரின் மகனும் நடிகருமான அருண் விஜய் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
இந்த பங்கஷனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
விஜயகுமார் குடும்பம்
விஜயகுமார் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து இருக்கிறார். சினிமாவில் இவர்தான் நாட்டாமை என்றால் சின்னத்திரையிலும் கெஸ்ட் ஆக கலந்து கொள்ளும் சீரியல்களிலும் அடிக்கடி நாட்டாமை போன்ற கெத்தான கேரக்டரிலேயே நடித்து வருகிறார். தனது நீண்டகால திரைபயணத்தில் கதாநாயகன் முதல் குணச்சித்திர வேடங்கள் வரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர்.

அவரது குடும்ப வாழ்க்கையும் சினிமா உலகில் அடிக்கடி பேசப்படும் ஒன்று. விஜயகுமார் முதலில் முத்துக்கண்ணுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனிதா, கவிதா மற்றும் அருண் விஜய் ஆகியோர் பிறந்தனர். பின்னர் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.
இந்த குடும்பத்தில் அனிதா மருத்துவராக பணியாற்றி வருகிறார். மற்றவர்கள் பலரும் திரைப்படத் துறையுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். குறிப்பாக அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார்.
சமூக வலைதளங்களில் கவனம்
தியாவின் கர்ப்பம் மற்றும் வளைகாப்பு விழா தொடர்பான தகவல்கள் வெளியாகியதையடுத்து, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. விஜயகுமார் விரைவில் கொள்ளு தாத்தாவாக மாற உள்ளார் என்பது இந்த செய்தியில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த புதிய தலைமுறை வருகையை அவரது குடும்பம் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications