நடிகர் விஜயகுமார் மகள் வீட்டில் திடீர் பங்க்ஷன்.. பக்கத்தில் பிக் பாஸ் பிரபலம்.. விஷயம் இதுதானா?
சென்னை: நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகளான அனிதா தன்னுடைய தோழிகளோடு உகாதி பண்டிகையை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.
சமீபத்தில் தான் அனிதாவின் மகள் தியாவின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. இந்த நிலையில் அதை தொடர்ந்து தன்னுடைய தோழிகளோடு அனிதா புகைப்படம் வெளியிட்டிருக்கும் நிலையில் அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை சுஜா வருணியும் கலந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் விஜயகுமார் ஆரம்பத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகி பிறகு குணசித்திர வேடங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்கள். வெள்ளிதிரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அதிகமாக இவர் நடிக்கும் கேரக்டர்கள் பெருமை வாய்ந்த கேரக்டர்களாக தான் இருக்கிறது. அதிலும் நாட்டாமை, நட்புக்காக போன்ற திரைப்படத்தில் இவருடைய நடிப்பு வேற லெவலில் இருக்கும்.

அதனாலேயே இவருக்கு நாட்டாமை என்ற செல்ல பெயரும் மக்கள் மத்தியில் உண்டு. அதை வைத்தே விஜயகுமார் சீரியல்களிலும் குணச்சித்திர வேடங்களிலேயே நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் விஜயகுமாருக்கு முத்து கண்ணு என்ற மனைவி இருக்கிறார். அவருக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.
ஆனால் முத்துக்கண்ணுவோடு ஆரம்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்திருந்தார். அந்த நேரத்தில் நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். மஞ்சுளாவுக்கு வனிதா, பிரித்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். இதில் நடிகை வனிதா மட்டும் குடும்ப பிரச்சனை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறார். ஆனால் மீதமுள்ள எல்லோருமே ஒரே குடும்பமாக சந்தோஷமாக இருக்கின்றனர்.

அடிக்கடி புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா மட்டும் தனக்கு பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தாலும் அதை விட்டுவிட்டு மருத்துவம் படித்து டாக்டராகி இருக்கிறார். அதுபோல அனிதாவின் கணவர் கோகுலும் டாக்டர்தான். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களை தொடர்ந்து அனிதாவின் மகள் மற்றும் மகனும் டாக்டராக மாறி இருக்கின்றனர். இந்த நிலையில் அனிதாவின் மகள் தியாவிற்கு சமீபத்தில் திருமணம் முடிவடைந்தது. அந்த செய்தி இணையத்தில் அதிகமாக பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னுடைய மகள் திருமணத்திற்கு பிறகு இப்போது அனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தோழிகளோடு யுகாதி பண்டிகையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அவருடைய தோழிகள் உட்பட எல்லோரும் புடவையில் இருக்கின்றனர். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகை சுஜாவும் கலந்து கொண்டிருக்கிறார். அவரும் விஜயகுமாரின் மகளான அனிதாவோடு எடுத்த புகைப்படங்களும் இணையதில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே விஜயகுமார் வீட்டு பங்க்ஷனில் நடிகை சினேகா, சுஜா, மீனா உட்பட பல நடிகைகள் அடிக்கடி கலந்து கொள்வது வாடிக்கை தான். இந்த முறை சுஜா மட்டும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications