மஞ்சுளாவை பார்த்ததும் அருண் விஜய் ரியாக்ஷன்.. ஸ்ரீதேவி அழுதுட்டாங்க! கண் கலங்கிய விஜயகுமார்-பிரபலம் ஓப்பன்
சென்னை: நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அது குறித்த புகைப்படங்களும் செய்திகளும் இணையத்தில் அதிகமாக காணப்படும் நிலையில் விஜயகுமாரின் பேத்தி தியாவிற்கு மேக்கப் செய்த பெண் திருமண பங்க்ஷனில் நடந்த பல நிகழ்வுகள் குறித்து பேசி இருக்கிறார்.
அதோடு திருமணத்திற்கு முந்தைய மெஹந்தி பங்க்ஷனில் மெஹந்தி போட்ட பின் பிரித்தாவின் கையில் மஞ்சுளாவின் புகைப்படத்தை வரைந்ததால் அங்கு என்ன மாதிரி ரியாக்ஷன் எல்லோரும் கொடுத்தார்கள் என்பது பற்றியும் அந்த பெண் மனம் திறந்து பேசி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

பொதுவாக பிரபலங்கள் வீட்டு திருமணங்கள் என்றால் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். சாதாரணமாக எல்லார் வீட்டை போல அவர்களுடைய பங்க்ஷன் இல்லை என்றாலும் அங்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காக மக்களின் மத்தியில் ஒரு விருப்பம் இருக்கும் அந்த மாதிரி தான் இப்போது கூட சமீபத்தில் முடிவடைந்த விஜயகுமாரின் பேத்தி திருமணம் குறித்த பேச்சு இணையத்தில் அதிகமாக இருந்து வருகிறது.
விஜயகுமார் பேத்திக்கு மேக்கப் செய்த பெண் ஒருவர் அந்த பங்க்ஷனில் என்ன நடந்தது என்பது பற்றி பேசி இருக்கிறார். அதுபோல திருமணத்திற்கு முந்தைய நாள் நடந்த மெஹந்தி பங்க்ஷனிலும் சில நெகழ்ச்சியான சம்பவங்கள் நடந்தது. பற்றி அங்கு மெஹந்தி போட்ட பெண்ணும் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் ஏற்கனவே பல பிரபலங்களுக்கு மெஹந்தி போட்டு இருக்கிறேன்.. அதுவும் எனக்கு முதல் முதலில் பிரபலங்களின் அறிமுகம் கிடைத்தது நடிகர் தனுஷின் தங்கச்சியின் மூலமாகத்தான்.

அவர் மூலமாகத்தான் எனக்கு நடிகை சினேகாவிற்கு மெஹந்தி போட வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் சினேகாவிற்கு நான் போட்டுவிட்ட மெஹந்தி வீடியோ பெரிய அளவில் ரீச் ஆனது அதைத் தொடர்ந்து எனக்கு தியாவின் மெஹந்தி ஃபங்ஷனில் மெஹந்தி போடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. விஜயகுமார் பேத்தியான தியாவின் திருமணத்தில் இரண்டு நாள் மெஹந்தி பங்க்ஷன் நடந்தது. ஒரு நாள் அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் பங்க்ஷன் நடந்தது அதிலேயே குறைந்தது 100 பேராவது கலந்து கொண்டு இருப்பார்கள்.

அதுபோல இன்னொரு நாள் தெரிந்தவர்கள் நண்பர்கள் அனைவருக்கும் மெஹந்தி பங்க்ஷன் நடைபெற்றது. அப்போது என்னை புக் பண்ணது விஜயகுமாரின் மகள் ப்ரீத்தாவிற்காக தான். பிரீத்தாவிற்கு நான் மெஹந்தி போட்டுக் கொண்டிருக்கும்போது அவரிடம் உங்களுடைய அம்மாவின் புகைப்படத்தை நான் வரையவா என்று கேட்டேன். அவர் உங்களால் முடியுமா? என்று அதிசயமாக கேட்டார். முடியும் என்று சொன்னேன்.

அப்போது ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தை காட்டி அதை வரைய சொன்னார். நான் அவருடைய கைகளில் படத்தை வரைந்து கொண்டிருக்கும் போது அந்த பக்கமாக வந்த ஸ்ரீதேவி அந்த போட்டோவை பார்த்ததும் கண் கலங்கி அழுது விட்டார். அதோடு பிரீத்தா தன்னுடைய கையில் மஞ்சுளாவின் புகைப்படம் வரைந்து முடித்ததும் அங்கிருந்த அருண் விஜய் இடம் காட்டி இருந்தார் அவர் அம்மாவின் போட்டோவை வரைஞ்சுட்டீங்களா? என்று ஆச்சரியமாக கேட்டார்.
அப்போது விஜயகுமார் அங்கு வந்தார் அவரிடமும் கைகளை காட்டி அம்மா எப்படி இருக்காங்க என்று கேட்டபோது விஜயகுமார் கண்கலங்கியபடியே அருமையாக இருக்கிறது என்று ஒரு நிமிடம் அந்த கைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அதுபோல விஜயகுமார் பேத்தியின் திருமணம் மற்ற வீட்டு திருமணங்களைப் போல நடைபெறவில்லை. ஒரு வாரமாக பங்க்ஷன் நடைபெற்று வந்தாலும் பிரம்மாண்டமாக இருந்தது.
பொதுவா திருமணம் என்றால் எல்லா வீட்டிலும் கொஞ்சம் டென்ஷன் இருக்கும் ஆனால் விஜயகுமார் வீட்டில் திருமணத்தில் எந்த டென்ஷனும் இல்லை. எல்லோரும் ரொம்பவே ஹாப்பியாக இருந்தனர். அடுத்தடுத்து சுமூகமாக எல்லா வேலைகளும் போய்க்கொண்டிருந்தது. திருமணத்திற்கான வேலைகளை அவர்கள் குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்பே இருந்தே பார்க்க தொடங்கி விட்டார்கள் என்று நான் கேள்விப்பட்டேன் என்று அந்த பேட்டியில் மெஹந்தி போட்ட பெண் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications