ஆடம்பரம் இல்லை.. மீன் சந்தையில் மகனோடு அருண் விஜய் செய்த சம்பவம்.. ஆட்டோவில் பக்கத்தில் யார் அது?
சென்னை: பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் தன்னுடைய மகனோடு மீன் சந்தையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் நிலையில் அது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
சில பிரபலங்கள் வெளியே போனால் வீண் ஆடம்பரங்கள் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கும் நிலையில் நடிகர் அருண் விஜய் தன்னுடைய மகனோடு மீன் சந்தையில் தெருவில் வைத்திருக்கும் மீனை வாங்கி ஆட்டோவில் பயணித்திருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் அதிக பகிரப்பட்டு வருகிறது.

பழம் பெரும் நடிகரான விஜயகுமார் வீட்டில் அவருடைய மகள் மற்றும் மகன் என பலரும் நடிகர்களாக பலருக்கும் பரீட்சைய மாணவர்கள்தான். அந்த வகையில் நடிகர் அருண் விஜய் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பாஞ்சாலக்குறிச்சி திரைப்படம் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது.
அந்த திரைப்படத்தில் ஒரு க்யூட்டான கேரக்டரில் அறிமுகமாகி பல காலேஜ் பெண்களின் மனதை கவர்ந்திருந்தார். அதிலும் "தோழா தோழா தோள் கொடு கொஞ்சம்" எனும் பாடலில் இவருடைய எக்ஸ்பிரஷன் வேற லெவலில் ரசிகர்களை கவர்ந்தது. அதற்குப் பிறகு இவருடைய இன்னொரு முகத்தை "என்னை அறிந்தால்" திரைப்படத்தில் பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த திரைப்படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் இவர் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார்.
சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் "மிஷன்" எனும் சீரிஸ் வெளியாகி வெற்றி நடை போடுகிறது. இந்த நிலையில் அருண் விஜய் செய்த செயல் ஒன்று இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது அருண் விஜய்க்கு, அர்ணவ் விஜய் என்ற ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். தற்போது தன்னுடைய மகனுடன் இணைந்து ஆட்டோவில் சென்று மீன் சந்தையில் அங்கு இருக்கும் மக்களிடம் சகஜமாக பழகி மீன் வாங்கி இருக்கிறார்.
அது குறித்து தன்னுடைய இன்ஸ்டா மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அருண் விஜய் "எளிமையான வாழ்க்கை, எளிமையான மக்கள்... இவர்களிடம் இருந்து அதிக அன்பும், அக்கறையும் கிடைக்கிறது" என்று அதில் கூறி இருக்கிறார். அதே நேரத்தில் ஒரு சில நடிகர் நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து கொஞ்சம் மக்கள் மத்தியில் பெயர் கிடைத்ததும் பெரிய அளவில் பிகு செய்து ஆர்ப்பாட்டம் செய்வதை பார்த்து வந்த ரசிகர்களுக்கு அருண் விஜய் ஆட்டோவில் பயணித்து சாதாரண மக்களிடம் சகஜமாக பேசியது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
இது குறித்து அருண் விஜய் வெளியிட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே இதற்கு அதிகமான லைக்குகள் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் அருண் விஜயின் அக்கா அனிதாவின் மகள் திருமணத்தின் போது இவர்களுடைய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக வைரல் ஆனது. அப்போது அருண் விஜயின் மகள் மற்றும் மகன் எவ்வளவு பெரியதாக வளர்ந்து விட்டார்களா? என்று ரசிகர்கள் வியப்போடு கேள்வி எழுப்பி வந்தனர். இப்போது அருண் விஜய் தன்னுடைய மகனோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டதும் அடுத்த கதாநாயகன் ரெடியாகிவிட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications