விஜய் மாநாடு.. தொகுப்பாளர் பற்றி பாதியில் தகவல் வந்தது! ஏன் இப்படி பண்ணுறாங்க? ஜேம்ஸ் வசந்தன் பதிவு
சென்னை: நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்றைய தினம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல் பலரும் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் இது பற்றி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் விஜய் தனக்கு இருக்கும் பெயரையும், புகழையும், சம்பளத்தையும் விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலில் நுழைகிறேன் என்ற முடிவெடுத்து இருக்கிறார். இது அரசியல் தலைவர்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. நேற்று தன்னுடைய முதல் மாநாட்டில் அவருடைய கொள்கைகள், செயல் திட்டங்கள் என்ன என்பன பற்றி விரிவாக மக்களுக்கு எடுத்து சொல்லி இருந்தார்.

இதை பலர் பாராட்டினாலும் சில விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த விஜய்யின் கட்சியை சார்ந்த பெண் தான். ஆனால் இவருடைய குரல் கீச்சு என்று இருக்கிறது, ஒரு நல்ல தொகுப்பாளரை வைத்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கலாம் என்றெல்லாம் அதிகமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
அதே நேரத்தில் இது பற்றி ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய facebook பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் நேற்று மாநாடு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரை பற்றி அந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கும்போது என்னிடம் சிலர் சொன்னார்கள். கீச்சுக் கீச்சென்று ஒரு பெண் கத்திக் கொண்டிருக்கிறார். வேறு யாரையாவது ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளரை அமர்த்தி நேர்த்தியாக செய்திருக்கலாம் என்பது போன்ற கருத்துக்கள் என்னிடம் சொன்னார்கள்.
நான் வேறொரு அலுவலகத்தில் இருந்ததால் அதை உடனே காண முடியவில்லை. சற்று நேரம் கழித்து ஒரு இடைவெளி கிடைத்த போது நேரடி ஒளிபரப்பை கொஞ்சம் எட்டி பார்த்தேன். அந்தப் பெண் பேசிக் கொண்டிருந்தார், எனக்கு அவர்தான் சரியான தேர்வு என்று தெரிந்தது. அவர்தான் என்பதை விட அவரை போல அந்த இயக்கத்தின் உறுப்பினராகவும் அந்த கொள்கைகளை ஏற்றுக் கொண்டவராகவும் இருந்தால்தான் இது போன்ற அரசியல் கொள்கை விளக்க கூட்டத்திற்கு பொருத்தமாய் இருக்கும்.
அவர் வெறுமனே எழுதி வைத்ததை உதட்டில் இருந்து படிக்காமல் உணர்வுகளோடு உச்சஸ்தாயியில் முழங்கி கொண்டிருந்தார். இது தொழில் ரீதியான தொகுப்பாளரிடம் கிடைக்காது. அதனால் இவர்தான் சரி. ஆனால் அவர் 'ல'கரத்தை சிதைத்து கொண்டு இருந்தார் என்பதையும் கண்டேன்.
தமிழ்நாட்டில் ஏன் இந்த அவலம்? இங்கிலீஷிலை கொலை செய்கிற இங்கிலீஷ் பேச்சாளர்களை மேலை நாடுகளில் கண்டதே இல்லை. மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் அவரவர் மொழியை கொலை செய்கிற தொகுப்பாளர்களை கேள்விப்பட்டதில்லை. ஏன் தமிழுக்கு மட்டும் இந்த கொடுமை? எங்கு பிரச்சனை எப்போது இந்த நிலை மாறும் என்று அந்த பதிவில் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications