விஷாலோட நிலைமைக்கு காரணம்? ஒழுக்கம் தவறினால் "உதறல்" எடுக்கும்.. பாலா காரணமே கிடையாது: பிரபலம் நச்
சென்னை: நடிகர் விஷாலின் உடல்நிலை குறைவுக்கு காரணம் அவரது பழக்கவழக்கங்கள்தானே தவிர, டைரக்டர் பாலா கிடையாது என்றும், தவறான தகவல்களை மக்களிடம் பரப்பக்கூடாது என்றும் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு சேகுவேரா தந்துள்ள பேட்டியில், "நடிகர் விஷாலின் இந்த படபடப்புக்கு காரணம், தொகுப்பாளர் டிடி சொன்னதுபோல் வைரல் ஜூரம் கிடையாது. அது உண்மையும் கிடையாது. விஷாலின் வைரல் ஜூரத்தைவிட, உதறல்தான் இப்போது அதிகமாக வைரலாகிவிட்டது.

வைரல் ஜூரம் என்றால் இந்த நிகழ்ச்சிக்கு, முதலில் அவர் வந்திருக்கவே கூடாது. நன்றாக குளித்துவிட்டு, பட்டு வேட்டை சட்டையுடன் விபூதியுடன் பவ்யமாக வந்திருந்தார். அதுமட்டுமல்ல, வைரல் ஜூரம் என்றால், வெறும் கைகள் மட்டுமே உதறல் எடுக்காது. உடலும் மெலிந்து காணப்படும்.
டைரக்டர் பாலா: அதேபோல, விஷாலின் இந்த நிலைமைக்கு காரணம், டைரக்டர் பாலாதான் என்றும், அவன் இவன் படத்திற்காக கண்களை தைத்துவிட்டார்கள் என்றும் வலைப்பேச்சு அந்தணன் போன்றோர் சொல்கிறார்கள். இதெல்லாம் முட்டாள்தனமான வார்த்தை.. உருட்டுறதுக்கு ஒரு அளவு வேணாமா?
13 வருஷத்துக்கு பிறகு விஷால் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார்.. சமீபத்தில்கூட திடகாத்திரமாக இருந்தார்.. நடந்து முடிந்த தேர்தலின்போதுகூட ஓட்டு போடுவதற்காக சைக்கிள் ஓட்டிச் சென்றதை எல்லாருமே பார்த்தார்கள்.. ஐந்தாறு மாதங்களாக மட்டுமே இந்த உடல்நிலை பிரச்சனை விஷாலுக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்.. உடல்நோயால் இப்பிரச்சனை வந்திருந்தால், இந்நேரம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பார்.. அந்த தகவல் வெளியே தெரிந்திருக்கும்.
பழக்கவழக்கம்: "வணங்கான்" படம் விளம்பரம் கிடைக்காததால், இப்படியெல்லாம் பாலா மீது அவதூறு கிளப்புகிறார்கள். முழுக்க முழுக்க தவறான பழக்கவழக்கங்கள்தான், விஷாலின் இந்த நிலைமைக்கு காரணம்.
மது, மாது இது இரண்டிலும் அடிமையாகியிருந்தால்தான், இப்படியான உதறல் எடுக்கும்.. நரம்பு மண்டலம் பாதிக்கப்பட காரணம், சரக்குதான்.. அதேபோல அதிகமான சக்தி விரயமானாலும் இப்படி நடக்கும். இதுக்குதான் காலகாலத்திலேயே கல்யாணம் நடந்திருக்கணும். குடும்பம் என்று வந்தால் எல்லாமே கன்ட்ரோல் ஆக இருக்கும்.
ஒழுக்கம் இல்லாமல் போனால், இதுபோன்ற உதறல், கதறல் எல்லாமே நடக்கும். இது நோயால் வந்தது கிடையாது, அவரது பழக்கவழக்கங்களால் ஏற்பட்டுள்ளது.. இதுபோக விஷாலுக்கு கடன் பிரச்சனையும் இருக்கிறது.. சிலர் 85 கோடி என்கிறார்கள், சிலர் 150 கோடி என்கிறார்கள்.. ஆனால் பெரிய கடனில் உள்ளார்..
கொடூரமான கடன்: வறுமை கொடுமையானது, கடன் கொடூரமானது என்பார்கள்.. ஆனால் கடன் எதனால் வந்தது? மது, மாது இரண்டிலும் இறங்கிவிட்டால் எவ்வளவு பணம் இருந்தாலும் போயிடும்.. எப்படியும் கடந்த 6 மாத காலத்தில்தான் விஷாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்குமே தவிர, டைரக்டர் பாலாவால்தான் இப்படி நேர்ந்தது என்று சொல்வது அபத்தமானது. பொதுமக்களை இப்படியெல்லாம் அவதூறாக சொல்லி ஏமாற்றக்கூடாது" என்றெல்லாம் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications