வதந்திகளுக்கு விஷால் பதிலடி! ஒரு நாளைக்கு 20 சிகரெட்! எல்லாத்தையும் நிறுத்தி 5 வருஷம் ஆகிடுச்சு!
சென்னை: நடிகர் விஷால் உடல்நிலை குறித்த பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் தான் ஐந்து வருடங்களுக்கு முன்பே சிகரெட் மற்றும் மது போன்ற கெட்ட பழக்கங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டேன் என்று பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
சில தினங்களாகவே நடிகர் விஷால் பற்றிய செய்திகள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்குப் பிறகு வெளியாக இருக்கும் மதகஜராஜா திரைப்படத்தின் ஃப்ரீ ரிலீஸின் போது பேசிய விஷாலை பார்த்ததும் ரசிகர்கள் பதறிப் போய் இருந்தனர். விஷாலுக்கு என்ன ஆச்சு என்பதுதான் பலருடைய கேள்வி.

இதுவரைக்கும் கம்பீரமாக எந்த இடத்திலும் கெத்தாக இருக்கும் விஷால் இப்போது வயதான தோற்றத்திலும் உடல் நடுங்கி பேச முடியாமல் அவர் தவித்ததை பார்த்து பலர் அவருக்காக பீல் பண்ணி வருகிறார்கள். அதே நேரத்தில் விஷால் பற்றி சிலர் வதந்திகளையும் பரப்பி வருகிறார்கள். ஒரு சிலர் விஷாலுக்கு அந்த பழக்கத்தால் இப்படி ஆகிவிட்டது, இந்த பழக்கத்தால் இப்படி ஆகிவிட்டது என்று youtube சேனல்களில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் பாடகி சுசித்ரா விஷால் அதிகமாக குடித்தது தான் இப்போதைய நிலை வந்துவிட்டது. ஒரு நாள் என்னுடைய வீட்டின் கதவை இரவு வந்து விஷால் தட்டினார். அப்போது அவர் கையில் மது பாட்டிலோடு வந்து நின்றார். அப்போ என் கண் முன்பு மது பாட்டிலோடு நின்ற விஷால் இப்போது மைக் கூட பிடிக்க முடியாமல் கை ஆடுவதை பார்த்து எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உங்க வீட்டுக்கு எல்லாரும் வருவாங்களா? அப்போ நீங்க? விஷால் பற்றி பேசிய சுசித்ராவிற்கு சார்மிளா பதில்
அதுபோல ஒரு சிலர் பாலா இயக்கத்தில் அவன் இவன் திரைப்படத்தில் விஷால் நடிக்கும் போது பாலா விஷாலின் கண் பகுதியை பிடித்து தைத்து வைத்ததால் விஷால் ஒரு தலைவலியால் துடித்தார். அதற்கு பிறகு விஷால் மது பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். அதனால் தான் இப்போது அவருடைய கைகள் நடுங்குகிறது என்றெல்லாம் கண்ட மேணிக்கு பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஷால் சில மாதங்களுக்கு முன்பு பேசிய பேட்டி ஒன்றை அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அந்த பேட்டியில் விஷால் மது மற்றும் புகைப்பழக்கம் எப்படி விட்டேன் என்று பேசியிருக்கிறார்.
அதில் நான் அதிகமாக சிகரெட் பிடிப்பேன். ஒரு நாளைக்கு 20 சிகரெட் வரைக்கும் பிடிப்பேன். அதனால் எனக்கு ஒரு கட்டத்தில் வெறுப்பு ஏற்பட்டது. ஒரு நாள் நான் ஷூட்டிங்கில் இருக்கும்போது இந்த பழக்கத்தை இன்றோடு விட்டுவிட வேண்டும் என்று நினைத்தேன். சிலர் ஏதாவது பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால், அதை உடனே விட முடியாது.
கொஞ்சம் கொஞ்சமாக விட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நான் இன்று விடவேண்டும் என்று என் கையில் இருந்த எல்லா சிகரெட்டையும் பிடித்து முடித்தேன். இருபதாவது சிகரெட் பிடிக்கும் போது இதுதான் நான் உன்னை என் கையில் பிடிக்கும் கடைசியாக இருக்கும் என்று தூக்கிப்போட்டேன்.
இப்போ அஞ்சு வருஷம் ஆகிறது எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. எல்லா கெட்ட பழக்கத்தையும் விட்டுவிட்டால் உண்மையில் ரொம்பவே நல்லா தான் இருக்கிறது என்று அந்த பேட்டியில் விஷால் பேசி இருக்கிறார். இதை பகிர்ந்து வரும் ரசிகர்கள் விஷால் பற்றி தேவையில்லாத வதந்திகளை பரப்புபவர்களுக்கு இதுதான் சரியான பதிலடி என்று கூறி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications