உங்க வீட்டுக்கு எல்லாரும் வருவாங்களா? அப்போ நீங்க? விஷால் பற்றி பேசிய சுசித்ராவிற்கு சார்மிளா பதில்
சென்னை: நடிகர் விஷால் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது குறித்து பாடகி சுசித்ரா ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதற்கு நடிகை சார்மிளா கோபமாக பதில் கொடுத்திருக்கிறார்.
கடந்த சில தினங்களாகவே நடிகர் விஷாலுடைய உடல்நிலை பற்றிய பேச்சு தான் இணையத்தில் அதிகமாக இருக்கிறது. கம்பீரமாக இருந்த விஷால் இப்போது வயதான தோற்றத்தில் உடல் நடுக்கத்தோடு நிற்க கூட முடியாத நிலையில் இருப்பதை பார்த்ததும் பலர் பதறிப் போய் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பாடகி சுசித்ரா விஷால் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். விஷாலுக்காக இணையத்தில் பலர் கடவுளிடம் வேண்டுவதை பார்க்கும் போது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. இவனுக்காக ஏன் நீங்க வேண்டுகிறீர்கள். விஷால் எப்படிப்பட்டவன்னு தெரியுமா?
சில வருஷத்திற்கு முன்பு என் வீட்டில் கார்த்திக்ன்னு (சுசித்ராவின் முன்னாள் கணவர்) ஒரு நாய் இருந்தது. அந்த நாய் திடீர்னு சொல்லாமல் எங்கேயாவது போய்விடும். அப்போதான் ஒரு நாள் ராத்திரி கையில் பாட்டிலோடு விஷால் என் வீட்டு கதவை தட்டினான். கார்த்திக் எங்கே என்று கேட்டான். கார்த்திக் வெளியே போயிருக்கான் என்று சொன்னேன்.
கையில் பாட்டிலோடு கண்ணெல்லாம் மஞ்சளாகவும், பல்லெல்லாம் மஞ்சையாகவும் இருந்தது. நான் விஷாலை பார்த்ததும் கெட்ட வார்த்தையில் பேசினேன். அதற்கு விஷால் என்னவென்று கேட்டதற்கு இங்க ஒரு பூனை அடிக்கடி வந்து ஆள் இல்லாத நேரத்தில் அசிங்கம் பண்ணுது அதை தான் திட்டுனேன் நீ கார்த்திக்கை பார்ககணும் என்றால் அவனுக்கு போன் பண்ணி கேட்டு எங்க இருக்கானோ அங்க போய் பாரு என்று அனுப்பி வைத்தேன்.

அந்த அளவிற்கு மோசமான ஆளு தான் விஷால். அவனுக்காக இப்போ எல்லாரும் வேண்டுகிறாங்க. அன்னைக்கு கையில் பாட்டிலோடு என் கண்ணு முன்னாடி நின்ன விஷால் இன்று மைக் பிடிக்க முடியாமல் திணறுகிறான். இதை பார்க்கும்போது எனக்கு சந்தோசமா இருக்கு என்று பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகை சுசித்ராவிற்கு பதிலளிக்கும் வகையில் நடிகை சார்மிளா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் சுசித்ரா டிரெண்டிங்கில் இருக்கும் எல்லா நடிகர்கள் பற்றியும் பேசி விடுகிறார். எந்த நடிகைகளாக இருந்தாலும், சரி நடிகர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறது அல்லது எனக்கும் அவர்களுக்கும் பிரச்சனை என்பது போல எதையாவது ஒரு கதையை பேசிக் கொண்டிருக்கிறார்.
இதற்கு முன்பு தனுஷ், விஜய், சூர்யா, வைரமுத்து என்று பலர் குறித்து பேசிக்கொண்டே இருந்தார். நான் அதை பற்றி எல்லாம் இப்போ பேசல நான் இப்போ விஷாலை பற்றி பேசுவதற்கு மட்டும் சொல்றேன். விஷால் எத்தனை பேருக்கு உதவி செஞ்சிருக்காருன்னு தெரியுமா? ஏன் பிள்ளைக்கு கூட விஷால் படிப்புக்கு பீஸ் கட்டுறாரு.
இதுபோல நடிகர் சங்கத்தில் இருக்கிற பலருக்கும் விஷால் உதவி செய்தார். ஆனால் விஷாலுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் கடவுளிடம் ஏன் வேண்டுறீங்கன்னு இவங்க எப்படி கேட்கலாம். இவங்க என்ன பெரிய உலக அழகியா? உலக அழகி ஐஸ்வர்யா வீட்டுக்கெல்லாம் யாரும் போகணும்னு முயற்சி செய்யல, இவங்க வீட்டுக்கு மட்டும் எல்லாரும் வந்தாங்க?
என்கிட்ட மட்டும் எல்லாரும் வழிஞ்சாங்கன்னு சொல்லுறாங்க இது என்ன அர்த்தம்னு யாருக்குமே தெரியல. இவங்கள பொருத்த வரையில் இப்போதைக்கு எந்த படங்களிலும் பாடல் பாடவில்லை. அதனால் ட்ரெண்டிங்கில் இருப்பவர்கள் எல்லாரையும் இவர்களோடு தொடர்பு படுத்தி எதையாவது பேசி பரபரப்பு ஏற்படுத்தணும்னு செய்யறாங்க என்று அந்த பேட்டியில் சார்மிளா பேசியிருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications