விஷால் காதலிக்கும் நடிகை இவரா? ஜோடி பொருத்தம் நல்லா தான் இருக்கு! ஆனால், இந்த பிரச்சனையும் இருக்கே!
சென்னை: நடிகர் விஷால் தனக்கு இன்னும் நான்கு மாதத்தில் திருமணம் நடைபெறப்போகிறது, நான் ஒரு வருடமாக ஒருவரை காதலித்துக் கொண்டிருக்கிறேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் விஷால் காதலிக்கும் நபர் யார் என்ற கேள்வி இணையத்தில் எழுந்து வரும் நிலையில் தற்போது நடிகை ஒருவரை விஷால் காதலிப்பதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பொதுவாக சினிமாவில் ஒரு சில நடிகர்கள் பற்றி அடிக்கடி சர்ச்சை செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும், அந்த வரிசையில் நடிகர் விஷாலும் ஒருவர். நடிகர் விஷாலுக்கு சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட ப்ரமோஷனில் கலந்து கொண்டபோது கை கால் நடுக்கம் இருந்ததை பார்த்து பலர் பதறி போயிருந்தனர். சிலர் அந்த விஷயத்தை வைத்து பெரிய பூதாகரமாக பிரச்சனையாக்கி கொண்டிருந்தனர்.

விஷால் பற்றிய வதந்தி
விஷாலுக்கு அந்த நோய் இருக்கிறது, இந்த நோய் இருக்கிறது, அவருடைய நிலைமை இப்படி ஆகிவிட்டது, அப்படி ஆகிவிட்டது, இனி அவ்வளவுதான் அவருடைய வாழ்க்கை முடிந்தது என்றெல்லாம் கதைக்கட்டி வந்தனர். ஆனால் ஒரே வாரத்தில் விஷால் பழைய நிலைக்கு திரும்பி வந்தார். அதற்குப் பிறகு சமீபத்தில் கூத்தாண்டவர் கோவிலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
உடல்நல பிரச்சனை
கூத்தாண்டவர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் விஷாலுக்கு திடீர் உடல்நிலை குறை ஏற்பாடால் மயக்கம் வந்தது. அதுவும் பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு பிறகு ஒரு பேட்டியில் விஷால் கலந்து கொண்டு இருந்தார் அப்போதுதான் தனக்கு விரைவில் திருமணம் நடக்க போகிறது, நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த உடனே என்னுடைய திருமணம் நடக்கும் என்று சொல்லி இருந்தார். இதை ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு அவர் சொல்லியிருந்தாலும் இப்போது நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழாவிற்கு அடுத்த நாள் என்னுடைய திருமணம் நடக்கப்போகிறது என்று கூறி இருக்கிறார்.
விஷால் பேட்டி
மேலும் விஷால் பேசும்போது, தான் ஒரு வருடமாக ஒருவரை காதலித்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார். இதனால் யார் அவர் என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் வெளியாகி பரவி வருகிறது. அதாவது விஷாலுக்கு நடிகை சாய் தன்ஷிகாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறது என்று கூறப்படுகிறது.

புதிய தகவல்
தன்ஷிகா பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் பேராண்மை, பரதேசி உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். காலா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மகளாக நடித்திருந்தார். தன்ஷிகா தன்னுடைய தனித்துவமான கேரக்டரில் நடித்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருடைய கேரக்டர் கெத்தாகவே இருந்து வருகிறது. விஷால் மற்றும் தன்ஷிகா இருவருக்கும் ஜோடி பொருத்தம் அருமையாக இருந்தாலும் இது உண்மையான செய்தியா? அல்லது இதுவும் சர்ச்சையா? என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

எதிர்பார்ப்பு
காதல் பற்றி தன்ஷிகா மற்றும் விஷால் இருவருமே எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஏற்கனவே விஷால் அந்த நடிகையை காதலிக்கிறார், இந்த நடிகை காதலிக்கிறார் என்று பல்வேறு வதந்திகள் பரவி வந்திருக்கிறது. அதேபோல இதுவும் கட்டுக்கதையா? அல்லது உண்மையா என்று விஷால் விரைவில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications