பூர்ணிமா கூட நான் பேசவே இல்ல.. பிக் பாஸ்க்குள்ள இதுதான் நடந்துச்சு.. பல ரகசியத்தை உடைத்த விஷ்ணு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அந்த நிகழ்ச்சி பற்றி பல விஷயங்களை பேட்டிகளில் பேசிக்கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் இப்போது முதல்முறையாக விஷ்ணு பேசியிருக்கிறார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் தனக்கு பிடித்த மற்றும் பிடிக்காத போட்டியாளர்கள் குறித்து பேசி இருக்கிறார்.

அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது நடந்த நிகழ்வுகளுக்கும் விஷ்ணு இப்போது விளக்கமும் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் பிக் பாஸ்க்கு பிறகு தான் பூர்ணிமாவோடு பேசவே இல்லை. அவர் ஒரு பச்சோந்தி என்கிற ரீதியில் விஷ்ணு பேசியிருக்கும் வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Actor vishnu after bigg boss tamil season 7 first interview

அந்த வகையில் சின்னத்திரையில் பல சீரியல் நடித்திருந்த விஷ்ணு பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று முதல் பைனலிஸ்டாக தேர்வாகியிருந்தார். பிறகு இறுதியில் ஆறு போட்டியாளர்களில் ஒருவராக இருந்த இவர் ஐந்தாவது ரன்னராக வெற்றி பெற்று இருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நேரலையில் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.

அதில் பிக்பாஸுக்கு வந்தது எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இந்த நிகழ்ச்சிக்கு போறதுக்கு முன்பு நாம ஏதாவது செஞ்சு மக்கள் மனதில் இடம் பிடிக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா போயிட்டு வந்த பிறகு நான் செஞ்ச நிறைய விஷயம் வித்தியாசமா இருக்கு என்று மக்கள் சொல்றாங்க அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுவும் என்னை பார்க்கிற ரசிகர்கள் விஷ்ணு விஷ்ணு னு கூப்பிடுறது எனக்கு பெருமையாகவும் இருக்கு.

இதற்கு முன்பு நான் நடிக்கும் சீரியல்களின் பெயரை வைத்து தான் மக்கள் என்னை அடையாளப்படுத்தி கூப்பிடுவாங்க. அதுபோல நான் அங்கு இருக்கும் போட்டியாளர்களோடு ஜாலியாக "ஏன்டா டேய்" என்று பேசியது இப்போது பலர் சொல்லிக் கொண்டிருப்பது எனக்கு ரொம்பவே ஹேப்பி, அதுபோல இந்த வீட்டுக்குள்ள யாரு உண்மையா இருந்தாங்கன்னு கேட்கிறாங்க, அதுக்கு எல்லோரும் உண்மையா தான் இருந்தாங்க. யாரும் பொய்யாக இருந்தார்கள் என்று சொல்ல முடியாது.

Actor vishnu after bigg boss tamil season 7 first interview

அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான் இன்னும் ஒரு சிலரோடு பேசவே இல்ல. அதில் பூர்ணிமாவும் இருக்கிறாங்க, ஏன்னா உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் உள்ளே நடந்த பல முரண்பாடுகள் வெளியே வந்து பேசி பார்க்கிறதுக்கு நல்லா இல்ல. அதனால நான் அவங்க கிட்ட பேசுறது இல்ல, அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் பார்த்த அளவில் ஸ்ட்ராங்கான போட்டியாளர் என்றால் அது பிரதீப் தான்.

அதற்குப் பிறகு மாயாவை பார்த்தேன். அதுபோல தினேஷ், விசித்ரா, அர்ச்சனா இவங்களும் ஸ்ட்ராங்கான போட்டியாளர்தான். அதுபோல எனக்கு பிடித்த போட்டியாளர்கள் என்றால் மணி, ரவீனா, அர்ச்சனா, தினேஷ், கூல் சுரேஷ் அண்ணா அவ்வளவுதான். நான் இப்ப எல்லாம் பிக் பாஸ்க்குள் இருந்த மாதிரி கோவப்படுவதே கிடையாது.

நானே அந்த நிகழ்ச்சியை இப்போ பார்த்த பிறகு நானா இப்படி எல்லாம் உள்ள கோபப்பட்டு இருக்கேன்னு எனக்கே தோணுச்சு. அதுபோல நான் பிக் பாஸுக்குள் இருக்கிறப்ப சொன்ன மாதிரியே வெளியே வந்து அர்ச்சனா ஜெயித்ததுக்காக பட்டாசு எல்லாம் வெடிச்சிட்டேன். மக்களும் அதை பாத்து ஹாப்பியா தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன். நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சிலரோடு பேசி இருக்கிறேன்.

அதில் தினேஷ், ரவீனா, மணி போன்ற ஒரு சிலரிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன். பிராவோடுதான் வெளியே அடிக்கடி சுத்திக்கிட்டு இருக்கிறேன். அதுபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து நான் நிறைய கத்துக்கிட்டேன். எனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறதுக்கு சப்போர்ட் செய்த அனைவருக்கும் ரொம்பவே நன்றி என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+