நடிகர் விஷ்வேஸ்வர ராவ் திடீர் மரணம்.. இத்தனை திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்திருக்கிறாரா?
சென்னை: பல படங்களில் துணை நடிகராகவும் காமெடி கேரக்டர்களிலும் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் விஷ்வேஸ்வர ராவ் திடீர் மரணம் அடைந்துள்ளதாக வெளியான தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் விஷ்வேஸ்வர ராவ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார். அதிலும் விஸ்வேஷ்வர ராவ் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் நடிகை லைலாவின் அப்பாவாக நடித்திருந்தார்.

சமீபத்தில் திரையுலகில் சில பிரபலங்களின் மரணம் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு தான் நடிகர் டேனியல் பாலாஜி யாரும் எதிர்பார்க்காத வகையில் மரணம் அடைந்தார். அதற்கு முன்பு லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த சேஷு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அதைத் தொடர்ந்து இப்போது நகைச்சுவை நடிகரான விஷ்வேஸ்வர ராவ் உயிரிழந்த செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது..துணை நடிகராகவும், காமெடி கேரக்டரிலும் நடித்து பிரபலம் அடந்த விஷ்வேஸ்வர ராவ் இன்று ஏப்ரல் இரண்டாம் தேதி
காலை காலமானார்.
விஷ்வேஸ்வர ரா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை கேரக்டராகவும், குணசித்திர நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அவர் ஆறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டாராம். அதிலும் குழந்தை நட்சத்திரமாக மட்டுமே 150 படங்களுக்கு மேலே நடித்திருக்கிறாராம்.
வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சில சீரியல்களில் நடித்திருக்கிறார். தன்னுடைய வாழ்நாளில் 350 படங்களுக்கு மேலே நடித்துள்ள நடிகர் விஷ்வேஸ்வர ராவ் விற்கு இப்போது 62 வயது ஆகிறதாம். இவருக்கு உடல்நிலை பிரச்சினை காரணமாக காலமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருடைய உடல் நாளை தகனம் செய்யப்பட உள்ள நிலையில் இன்று சிறுசேரியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலக நண்பர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications