Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் விவேக் இறந்தது எப்படி? கொரோனா தடுப்பூசி போட்டதும் என்ன நடந்தது? மனைவி அருட்செல்வி உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா தடுப்பூசி போட்ட நடிகர் விவேக்கிற்கு என்ன நடந்தது என்பது குறித்து மனம் திறந்துள்ளார். அவருடைய மனைவி அருட்செல்வி! மேலும் விவேக்குடனான திருமணம் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.

சின்னக் கலைவாணர், ஜனங்களின் கலைஞர் விவேக் என்பவர் காமெடியனாக மட்டும் இல்லாமல் முற்போக்கு சிந்தனையாளர், பகுத்தறிவாளர், எழுத்தாளர், குணாளன், சமூக ஆர்வலர், இயற்கை ஆர்வலர் உள்ளிட்ட பன்முகத் திறமைகளை கொண்டவர். இவர் 300- க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

vivek

மேலும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சிஷ்யனும் கூட! மரம் வளர்ப்பதை நிறையவே விவேக் ஊக்கப்படுத்தினார். அது போல் கலாமின் சிந்தனைகளையும் மாணவர்கள், பொதுமக்களிடையே விதைத்தார்.

இப்படிப்பட்ட விவேக் தான் எத்தனை பணம் சம்பாதித்தாலும் அதைவிட அவருடன் பணியாற்றுவோரின் மனங்களை சம்பாதித்துள்ளார். மயில்சாமி உள்ளிட்டோருக்கு ஆரம்ப கட்டத்தில் உதவியிருக்கிறார். இதை மயில்சாமியே பல மேடைகளில் தெரிவித்துள்ளார்.

அது போல் தன்னை சுற்றியிருக்கும் கலைஞர்களின் குடும்பம் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வார். இந்த நிலையில் தனது 59 ஆவது வயதில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி இந்த மண்ணை விட்டு மறைந்தார். இவரது மறைவால் அவரது குடும்பம் உள்பட திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்தது.

கொரோனா காலகட்டத்தில் அந்த கொரோனா தடுப்பூசியை போடுமாறு அரசு அறிவுறுத்தியது. ஆனால் பலர் அதை போட்டுக் கொள்ள தயக்கம் காட்டினர். எங்கோ ஒரு சில இடங்களில் நடந்த எதிர்மறையான விஷயங்களை நினைத்து அஞ்சினர். அப்போதுதான் விவேக் ஒரு முன்னுதாரணமாக இருக்கட்டும் என்ற நினைப்பில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இவரை பார்த்து நிறைய பேர் ஊசி போட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அவருக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அவர் உயிரிழந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு அவர் இறந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் கொரோனா ஊசி போட்டதால் விவேக் இறக்கவில்லை என தமிழக அரசும் தெளிவுப்படுத்தியது. இந்த நிலையில் அவரது இறப்பு குறித்தும் அவரை பற்றியும் அவருடைய மனைவி அருட்செல்வி அவள் விகடன் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அருட்செல்வி கூறுகையில், "விவேக் சார் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டதற்கு முன்பு யோசித்தார். அவருடைய நண்பர்களிடம் கேட்டார். அப்போது "போட்டுக் கொள்ளலாம், நாங்கள் எல்லாம் போட்டிருக்கோம்" என்றனர். மேலும் அவருக்கு வெளிநாட்டில் நிறைய ஷூட்டிங் இருந்தது.

இதனால் விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதிப்பார்கள் என்பதால் விவேக் போட்டுக் கொண்டார். அதிலும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்து லைவாக எல்லார் முன்பும் போட்டுக் கொண்டார்.

அவருக்கு எதனால் மரணம் ஏற்பட்டது என இன்று வரை எங்களுக்கு தெரியவில்லை. கொரோனா ஊசியை நிறைய பேர் போட்டுக் கொண்டனர். அவர்கள் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறார்கள். இவர் ஊசி போட்டதும் நல்லாதான் இருந்தார். எப்படி இறந்தார் என தெரியவில்லை. எனவே நாம் ஊசியை குறை சொல்லக் கூடாது. மேலும் அவர் உடல்நலனை பேணிக் காப்பதில் சிறப்பானவர்.

தினமும் நடைபயிற்சி மேற்கொள்வார். வீட்டின் மாடியில் உள்ள ஜிம்மில் திரெட்மில்லில் நடப்பார். எப்போதும் உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்வார். எனவே அவருடைய இறப்புக்கு என்ன காரணம் என எனக்கு தெரியவில்லை. நானும் விவேக்கும் மதுரைக்காரர்கள்தான். எங்களுக்கு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான் நடந்தது.

விவேக், சினிமாவில் அப்போது பிரபலம் இல்லை. பார்ட் டைமாகத்தான் சினிமாவில் நடித்து வந்தார். அவர் தலைமைச் செயலகத்தில் நிதித் துறையில் பணியாற்றி வந்தார். பின்பு பாலசந்தரிடம் நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமானார். மனதில் உறுதி வேண்டும் படத்திற்காக எழுத்தாளராக பணிக்கு சேர்ந்தார்.

அப்போது அந்த படத்தில் சுகாசினியின் உடன் பிறந்தவர்கள் குறித்து விவரித்து எழுதிவருமாறு கேபி சார் சொன்னதும், இவர் இரவு முழுக்க தூங்காமல் கொள்ளாமல் எழுதி கொண்டு போய் கே.பி.சார் வீட்டிற்கு போய் கொடுத்ததும் அவரே ஆச்சரியப்பட்டார். பிறகு இந்த கேரக்டரில் நீ நடிக்கிறாயா என கேட்டார். அப்படி கிடைத்ததுதான் சினிமா வாய்ப்பு. கணவனை இழந்த பெண்கள் யாராக இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வாருங்கள். நம் குழந்தைகளுக்காக நாம் வாழ வேண்டும். நான் அப்படித்தான் மீண்டுள்ளேன். இவ்வாறு விவேக் மனைவி அருட்செல்வி தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+