Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யோகி பாபுவுக்கு யோகம்.. அவர் பண்றது காமெடியா? யாராவது சிரிக்கிறாங்களா? சந்தானம் வரவேண்டும்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் காமெடி நடிகராக சந்தானம் நடிக்க வருவதாக சொல்கிறார்கள்.. அப்படி அவர் நடிக்க வந்தால், இன்னொரு உயரத்தை நிச்சயம் சந்தானம் தொடுவார் என்று, பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியிருக்கிறார். அத்துடன் யோகிபாபு குறித்தும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

AramNaadu யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "சந்தானம் மீண்டும் காமெடியில் நடிக்க வருவது நல்லது.. அவர் ஏற்கனவே காமெடி நடிகர்தான். சிம்பு சந்தானத்தை அறிமுகப்படுத்தினார்.. சந்தானத்தின் காமெடியை மக்களும் ரசிக்க துவங்கினார்கள்..

Television Yogi Babu santhanam

வடிவேலு, கவுண்டமணி

வடிவேலு தன்னுடைய பாடி லேங்குவேஜில் மக்களை இழுத்தவர் என்றால், சந்தானம் ஜாலியாக சின்ன சின்ன காமெடிகளை சொல்லி, சொல்லியே மக்கள் மனதில் நின்றார்.. சந்தானத்தின் காமெடி சூப்பராகவே இருக்கும்.. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்குள் நுழைந்த சந்தானம், ஏகப்பட்ட காமெடி படங்களை தந்து கொண்டிருக்கும்போது, சிவகார்த்திகேயனும் விஜய் டிவியிலிருந்து திடீரென சினிமாவுக்கு உள்ளே வந்தார்.. ஆனால், சிவகார்த்திகேயன் காமெடி ஹீரோவாக நடிக்க வந்தவர்.. மெரினாவில் இருந்து அடுத்தடுத்த படங்கள் சிவகார்த்திகேயனுக்கு குவிய ஆரம்பித்துவிட்டது.

இதைப்பார்த்ததுமே சந்தானத்துக்கும் ஆசை வந்துவிட்டது. டிவியிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் ஃபேமஸ் ஆகிக்கொண்டிருப்பதால், தாமும் சிவகார்த்திகேயன் போலவே ஹீரோவாக வேண்டும் என்று நினைத்தார்.. சந்தானத்தின் மீதான ஈகா காரணமாகவே, காமெடி ஹீரோவாக இனி நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

யோகிபாபுவுக்கு வந்த ஆசை

இந்த ஆசை எல்லாருக்குமே வரத்தான் செய்யும். ஏன், காமெடியே நடிக்காத யோகிபாபுவுக்கும் அந்த ஆசை வந்தாச்சு.. ஆரம்பத்தில் கவுண்டமணிக்கும் இப்படி ஹீரோ ஆசை வந்தது. அருமையான காமெடி நடிகரான வடிவேலுவால் கூட, ஹீரோவாக தன்னை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் இந்த நூற்றாண்டின் சிறந்த காமெடி நடிகர் வடிவேலு என்றுதான் நாம் பார்க்க அவரை வேண்டும்.. அதுபோலவே சந்தானமும் அதற்கு குறைந்தவர் இல்லை.

ஹீரோக்கள் படங்களில், இவர்கள் எல்லாம் காமெடியாகவே நடித்து கொண்டிருந்தால் பிரச்சனையில்லை. அதுதான் மக்களுக்கும் இவர்களை பிடிக்கும். இவர்களுக்கும் காமெடி ஹீரோ ஆசை வந்துவிடுவதால், ஒன்றிரண்டு படங்கள் சக்ஸஸ் ஆனாலும், அதற்கு பிறகு சோர்வு நிலை வந்துவிடுகிறது..

பெரிய பெரிய ஹீரோக்களுக்கே படங்கள் தோல்வியை தழுவும்போது, வெறும் காமெடி ஹீரோவாக இவர்கள் நடித்து கொண்டிருந்தால், எத்தனை நாள் அதை மக்கள் பார்ப்பார்கள்?

12 வருடங்களுக்கு பிறகு

மற்ற ஹீரோக்கள் போல டான்ஸ், ஃபைட்,, டூயட் இது எதுவுமே இவர்களால் செய்ய முடியாது.. இதெல்லாம் தெரிந்தும் நடிக்க வந்து, தங்களது மார்க்கெட்டையே அழித்து கொள்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், மும்பையிலிருந்து ஹீரோயின்களை அழைத்து வருகிறார். படத்தில் நல்ல ஹீரோயின்கள் இல்லாததும் சந்தானத்துக்கு மைனஸ்தான்.

அதனால் சந்தானம் தன்னுடைய பேட்டர்னை மாற்றி கொள்வது நல்லது. 12 வருடங்களுக்கு முன்பு நடித்திருந்த மதகஜராஜா படத்தில் சந்தானத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.. ஓகே ஓகே படத்தின் வெற்றிக்கு சந்தானம்தான் முக்கிய காரணம்.. உதயநிதியை பட்டிதொங்கும் கொணடு போய் சேர்த்ததே சந்தானம் என்று சொல்லலாம்.. அப்படியிருக்கும்போது, தன்னுடைய உயரத்தையும் சந்தானம் தெரிந்து கொள்ள வேண்டும்..

யோகிபாபு பண்றது காமெடியா

யோகிபாபு பண்றதெல்லாம் காமெடியா? ஒரு டைரக்டர் யோகிபாபுவிடம், ஒரு சீனில் சிரித்து நடிக்கும்படி சொன்னாராம்.. அதற்கு யோகிபாபு, "நான் பண்றதுதான் காமெடி.. அப்படியே ஷூட் பண்ணு" என்றாராம்..

இப்படி யோகிபாபு சொல்றதெ காமெடியா இருக்கு.. இதுவரை யோகிபாபு நடித்து எந்த படத்திலும் யாருமே காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்ததாக சரித்திரமே இல்லை.. ஆனால் இன்றைக்கு நம்பர் 1 காமெடி யார் என்றால் யோகிபாபுதான். இதற்கு காரணம் என்ன?

சூரி காமெடிக்கு சிரித்ததே இல்லை

அதனால்தான் தமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் இருக்கிறது. கவுண்டமணி வயது மூப்பால் ரிடையர் ஆகிவிட்டார்.. வடிவேலு நடிக்கவில்லை.. சந்தானம் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று போய்விட்டார்..

அதேபோல சூரி செய்யும் காமெடிக்கு இதுவரை நான் சிரித்தது இல்லை.. பரோட்டா காமெடி மட்டும்தான் அவரை உயரத்துக்கு கொண்டுவந்தது. விடுதலை உள்ளிட்ட படங்களில் சூரியை மக்கள் ரசிக்க காரணம், இதுவரை சூரியை யாருமே காமெடியான பார்த்ததில்லை.. எனவே, சந்தானம் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு, மறுபடியும் எல்லாருடனும் நடிக்கணும். அப்படி நடித்தால் இன்னொரு உயரத்தை நிச்சயம் தொடுவார்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+