நேத்ரனை சின்ன வயசுல இருந்தே தெரியும்.. ஷூட்டிங் ஸ்பாட்டில், அலட்சியத்தால் வந்த பிரச்சனை! ஸ்ரீ வேதனை
சென்னை: நடிகர் நேத்ரன் கடந்த செவ்வாய்க்கிழமை உடல்நல குறைபாட்டால் காலமானார். அவர் பற்றி நடிகர் ஸ்ரீகுமார் பல தகவல்களை எமோஷனலாக பேசி இருக்கிறார். அதில் நேத்ரனை தனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும், அவருடைய உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் இதுதான்! என்று சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்.
சீரியல் நடிகர் நேத்ரன் சின்னத்திரை மற்றும் சினிமாவில் 22 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி இருந்தார். அவருடைய மனைவி தீபா நேத்ரனும் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் போன்ற பல சேனல்களில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த தம்பதிக்கு அபிநயா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் அபிநயா தன்னுடைய தந்தையோடு கேர்ள்ஸ் Vs பாய்ஸ் டான்ஸ், ஜோடி நம்பர் ஒன் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

அதுபோல அபிநயா கனா காணும் காலங்கள் வெப் சீரிஸின் இரண்டாவது பாகத்திலும் நடித்திருந்தார். இப்போது திரைப்படங்களுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் நேத்ரனுக்கு சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
தொடர்ச்சியாக அதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார். இது குறித்து அவருடைய நெருங்கிய நண்பர் நக்ஷ நடிகர் ஸ்ரீ வேதனையோடு சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் நேத்திரனின் உண்மையான பெயர் முருகன் தான். அவரை சின்ன வயசுல இருந்து எனக்கு தெரியும். எங்க அப்பா இசை கச்சேரி நடத்தும் போது டான்ஸ் ஆட வருவான். நானும் அந்த நேரத்தில் அவனோடு சேர்ந்து மேடைகளில் டான்ஸ் ஆடி இருக்கிறேன். அப்போ இருந்து நாங்கள் பழகிக் கொண்டிருக்கிறோம். அதற்கு பிறகு பல வருடங்களாக அவன் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறான்.
யாரையும் கோபமாக ஒரு வார்த்தை திட்ட மாட்டான். எப்போதும் சிரித்த முகமாக இருப்பான். உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருப்பான். அடிக்கடி ஜிம் ஒர்க் அவுட் எல்லாம் செய்வான். ஆனால் அவனுக்கு புற்றுநோய் பாதிப்பு என்பது அதிர்ச்சியாக தான் இருந்தது. சாப்பாடு சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்திருக்கிறார்.
வேலை பளு என்பது எல்லா வேலையிலும் இருக்கும். ஆனால் நம்முடைய உடலையும் நாம்தான் கவனித்துக் கொள்ள வேண்டும். அவனுக்கு வயிறு வலி வந்த போது சாப்பிடாமல் இருந்ததால் வயிறு வலிக்கிறது என்று முதலில் நினைத்திருக்கிறான். அதற்குப் பிறகு வயிறு வலி அதிகமான பிறகு தான் ஹாஸ்பிடலுக்கு செக்கப் பண்ண போயிருக்கிறார்.
அங்கு கேன்சர் பாசிட்டிவ் என்று வந்ததும் அதற்காக சிகிச்சை எடுத்திருக்கிறார். அரசு மருத்துவமனையில் தான் நேத்ரன் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். நான் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அரசு மருத்துவமனைக்கு போகும்போது நேத்ரனை பார்ப்பேன். அதிலும் சில மாதங்களுக்கு முன்பு அவனை பார்க்கும்போது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. அவன் வாட்ட சாட்டமாக இருப்பான், ஆனால் அங்கு இருக்கும் போது ஆள் பாதியாக ஆகிவிட்டான்.
உடலெல்லாம் கருத்து போய்விட்டது. பார்க்கவே வருத்தமாக இருந்தது. நம்ம நேத்ரனா இது என்று எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதை அவனிடம் காட்டிக்கொள்ளாமல் நான் பேசிவிட்டு வெளியே வந்தேன். அவருடைய மனைவியை பார்த்ததும் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. ஆனாலும் அவரிடம் சமாளித்து விட்டு வந்து விட்டேன்.
அவ்வளவு நல்ல மனுஷனுக்கு இந்த நிலைமையா என்பதுதான் என்னுடைய மண்டையில் ஓடிக்கொண்டே இருந்தது. யாரைப் பற்றியும் குறை சொல்ல மாட்டான், யாரையும் கெடுத்து பேச மாட்டான். அவன் உண்டு அவனுடைய வேலை உண்டுன்னு இருப்பான். ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டான். இப்பதான் கொஞ்சம் முன்னேறி வந்து கொண்டிருந்தான். அதற்குள் இப்படி ஆகிவிட்டது.. என்று நடிகர் ஸ்ரீ, நேத்ரன் பற்றி எமோஷனலாக பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications