மதுரையில் நடந்த “அந்த” சங்கதி தெரியுமா? ஆனால் இப்போ? நடிகர் சங்கத்தை வெளுத்து வாங்கிய தேவயானி
சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு தமிழ் திரைப்பட சங்கத்தினர் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தி வைத்திருந்தனர். அதில் பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு விஜயகாந்த் பற்றி நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தனர். அப்போது நடிகை தேவயானி விஜயகாந்த் பற்றிய நினைவுகளை பகிர்ந்து அவர் தலைவராக இருக்கும்போது நடிகர் சங்கம் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டது என்பதை பற்றி சுட்டிக்காட்டி இப்போது உள்ள நிலைமையையும் மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார்.
நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருக்கும்போது தங்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு இருந்தது என்பது பற்றி பல நடிகர் நடிகைகள் பேசி இருக்கும் நிலையில் தேவயானி சில வருடங்களுக்கு முன்பு நடிகர் நடிகைகள் அனைவரையும் விஜயகாந்த் மதுரைக்கு கூட்டிட்டு போய் கார்கில் போரில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக நிதி திரட்டியது பற்றி உருக்கமாக பேசியிருந்தார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகரும், அரசியல் பிரமுகராகவும் இருந்த விஜயகாந்த் சில வாரங்களுக்கு முன்பு உடல் நல குறைவினால் காலமானார். அவருடைய மறைவுவால் அவருடைய குடும்பத்தினரும், அவருடைய நண்பர்களும் இப்பவும் அந்த துயரத்தில் இருந்து மீளாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் மறைந்த விஜயகாந்த்காக நடிகர் சங்கத்தினர் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தி இருந்தனர்.
அதில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் தேவயானியும் கலந்து கொண்டிருந்தார். அவர் நடிகர் விஜயகாந்த் பற்றி உருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த காலகட்டத்தை யாராலும் மறக்க முடியாது. விஜயகாந்த் அந்த நேரத்தில் முக்கிய நடிகராக இருந்த போது ஒரு முறை எனக்கு போன் பண்ணி தேவயானி நீங்க நடிகர் சங்கத்தில் சேர்ந்துருங்கன்னு சொன்னார்.
அவரே எனக்கு போன் பண்ணி என்னை சேர்த்தும் விட்டார். இப்படி எந்த தலைவராவது செய்வார்களா? அதுபோல கார்கில் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் மதுரையில் கார்கில் பன்ஸ் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் எல்லா நடிகர் நடிகைகளும் அதில் கலந்து கொண்டோம். சின்ன நடிகர்கள் மட்டுமல்லாமல் பெரிய நடிகர் நடிகைகள் எல்லோரும் ஒன்றாக சமமாக ஒரே டிரெயினில் சென்னையில் இருந்து மதுரைக்கு போய் கலந்து கொண்டோம்.
பிறகு அங்கிருந்து சென்னைக்கு வந்தோம். அந்த நேரத்தில் எல்லாரையும் ஒரே இடத்திற்கு வரவைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை எல்லாவற்றையும் விஜயகாந்த் சார் தான் செஞ்சி முடிச்சாரு. அது மட்டுமா மலேசியா, சிங்கப்பூர் என்று கலை நிகழ்ச்சிகளுக்கு எல்லா நடிகர் நடிகைகளையும் கூட்டிட்டு போய் இருந்தாரே? அந்த மாதிரி ஒரு தலைமை பண்பு யாருக்காவது இருக்குமா?

நடிகர் சங்கத்தில் தலைவராக விஜயகாந்த் இருந்த நேரத்தில் எவ்வளவு சிறப்பாக இருந்தது... எல்லா நடிகர்களுக்கும் அந்த நேரத்தில் பாதுகாப்பு இருந்தது என்று சொல்லி சீக்கிரமா நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிங்க. இது நம்ம இந்த இடத்தில் வந்திருக்கும் போது விஜயகாந்த் சாரே சொல்ற மாதிரி இருக்கு.
அவர் அங்க இருந்து சொல்றாரு நீங்க சீக்கிரமா அந்த கட்டடத்தை கட்டி முடிங்கன்னு, அது போல தான் தோணுது. நம்ம சீக்கிரமா அந்த கட்டிடத்தை கட்டி முடிச்சு அங்க அவர் ஆசைப்பட்ட மாதிரி எல்லா நிகழ்ச்சிகளையும் பண்ணனும் என்று அந்த நிகழ்ச்சியில் தேவயானி பேசி இருந்தார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications