விஷால் எனக்கு ப்ரொபோஸ் பண்ணுனாரா? வதந்தி பரப்ப காரணம் இதுதான்! பணி பட நடிகை அபிநயா விளக்கம்
சென்னை: நடிகை அபிநயாவை விஷால் கல்யாணம் செய்யப்போவதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் பரவி வந்தது. அது குறித்து நடிகை அபிநயா முதல் முறை விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் விஷால் என்னுடைய நண்பர் மட்டும் தான். ஆனால் அவர் எனக்கு ப்ரொபோஸ் பண்ணவே இல்லை. சிலர் வதந்தி பரப்புகிறார்கள் என்று கூறி இருக்கிறார்.
நாடோடிகள் படம் மூலமாக தமிழில் அறிமுகமான நடிகை அபிநயா தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு காது கேட்காது, வாய் பேச முடியாமல் இருந்தாலும் தன்னுடைய நடிப்பு திறமையால் அனைவரையும் அசத்திக் கொண்டிருக்கிறார்.

நாடோடிகள் படத்தை தொடர்ந்து ஈசன், மார்க் ஆண்டனி போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நடிகை அபிநயாவுக்கு விஷால் ப்ரபோஸ் செய்தார் என்றும், அபிநயாவை விஷால் காதலித்து வருவதால் விரைவில் இவர்களுக்கு கல்யாணம் என்றெல்லாம் செய்திகள் பரவி வந்தது.
அது குறித்து அபிநயா விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் நான் ஒருவரை காதலிக்கிறேன். 15 வருடமாக ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன். அவர் சின்ன வயதில் இருந்தே பிரண்டு தான் என்னுடைய பாய் பிரண்டு. அவர் என்னுடைய ஃபிரண்ட் என்பதால் அவரிடம் என்னால் என்ன வேணாலும் பேச முடியும். எந்த விதமான ஜட்ஜ்மெண்ட்டும் இருக்காது.
நாடோடிகள் பட நடிகை.. பாலியல் கொடுமை காட்சியில் அபிநயாவை மோசமாக காட்டிய இயக்குனர்! இவ்வளவு ஆபாசமா?
நாங்க எங்களுடைய கல்யாணம் பத்தி இன்னும் பிளான் பண்ணிக்கல. அதுக்கு டைம் இருக்கு. நான் இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. அதுபோல விஷால் ரொம்ப தங்கமான மனுஷன். அவரு ரொம்ப பாசிட்டிவான ஆளு. என்கிட்ட சைன் லாங்குவேஜ் எல்லாம் கத்துக்க சொல்லுவாரு. நாங்க எல்லாம் ஒண்ணா தான் உட்கார்ந்து சாப்பிடுவோம்.
அவர் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட். அவரு என்னோட மெமரியில் எப்பவுமே இருப்பாரு. எங்களை சுத்தி வர வதந்திகள் எல்லாம் ரொம்ப முட்டாள்தனமானது. எனக்கு விஷால் ப்ரொபோஸ் பண்ணுனாரு... எங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகப்போகுதுன்னு வர்ற செய்தி எல்லாம் நம்பாதீங்க.
அவங்க வயித்து பொழப்புக்காக எதையாவது பேசுவாங்க. நான் அதையெல்லாம் கண்டுக்காம போய் விடுவேன். என்னமோ சொல்லுங்க நீங்க சந்தோசமா இருந்தா ஓகே தானு நான் போய் விடுவேன் என்று வதந்தி பரப்புபவர்களுக்கு அபிநயா பதிலடி கொடுத்து இருக்கிறார்.
அபிநயாவால் பேச முடியவில்லை என்பதால் அவர் சைகை மொழியில் பேச, ஒருவர் அவர் பேசுவதை மொழிப்பெயர்த்து அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அபிநயாவை பலரும் பாராட்டி வருகிறார்கள். அபிநயா தற்போது மலையாளத்தில் பணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் அவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications