நாடோடிகள் பட நடிகை.. பாலியல் கொடுமை காட்சியில் அபிநயாவை மோசமாக காட்டிய இயக்குனர்! இவ்வளவு ஆபாசமா?
சென்னை: "நாடோடிகள்" திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அபிநயா சமீபத்தில் "பணி" என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவது போல காட்சிகள் இருக்கிறது. அதில் பாலியல் வன்புணர்வு செய்யும் காட்சி கொடுமையாக படமாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பலரும் அந்த படத்தின் இயக்குனர் ஜோஜூ சார்ஜ் மீது அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் நடிகை அபிநயா பலருக்கும் தெரிந்தவர் தான். இவர் நாடோடிகள் திரைப்படத்தில் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் சசிகுமாருக்கு தங்கையாகவும் விஜய் வசந்தின் ஜோடியாகவும் நடித்திருப்பார். ஆனால் நிஜத்தில் அபிநயாவிற்கு வாய் பேச முடியாது, காதும் கேட்காது. ஆனால் சைகை மொழியின் மூலம் வசனங்களை உள்வாங்கி நடித்து வருகிறார்.

நாடோடிகள் திரைப்படத்திற்கு முன்பு கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடி சின்னத்திரையில் பிரபலம் அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் இவருடைய டான்ஸை பார்த்த ராகவா லாரன்ஸ் இவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
அதுபோல நாடோடிகள் படத்திற்கு பிறகு ஈசன், ஏழாம் அறிவு, வீரம், தனி ஒருவன் போன்ற பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பலமொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அபிநயாவின் நடிப்பில் சமீபத்தில் பணி எனும் ஒரு மலையாள படம் வெளியானது.
இந்த படத்தில் ஹீரோவுக்கு மனைவியாக அபிநயா நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தது இயக்குனர் ஜோஜூ ஜார்ஜ். இவர் தான் இந்த திரைப்படத்தை இயக்கி இருப்பார். கதையின்படி ஹீரோ ஜோஜூ பெரிய ரவுடியாக இருப்பார். ஒரு நாள் தன்னுடைய மனைவி அபிநயாவுடன் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருப்பார்.

அப்போது அந்த ஊரில் பணத்திற்கு கொலை செய்யும் இரண்டு இளைஞர்கள் சூப்பர் மார்க்கெட் வந்திருப்பார்கள். அவர்கள் அபிநயாவிடம் தவறாக நடப்பார்கள். அதை தெரிந்து கொண்ட அபிநயாவின் கணவர் ஜோஜூ சூப்பர் மார்க்கெட்டில் வைத்து இரண்டு பேரையும் அடித்து துவைத்து எடுப்பார். இதனால் அவமானம் அடைந்த அந்த இரண்டு பேரும் கதாநாயகன் குடும்பத்தை பழி வாங்க துடிப்பார்கள்.
திடீரென முடிக்கப்பட்ட சீரியல்.. கோபத்தில் சீரியல் நடிகை ரேஷ்மா போட்ட கமெண்ட்.. இவ்ளோ பிரச்சனையா?
ஒரு நாள் அபிநயா வீட்டில் தனியாக இருக்கும்போது வீட்டிற்குள் வந்த இரண்டு பேரும் அபிநயாவை பலாத்காரம் செய்து அதை வீடியோவாகவும் எடுத்து வைத்திருப்பார்கள். பிறகு கதாநாயகன் எப்படி அந்த இரண்டு பேரையும் பழி வாங்கினார் என்பதுதான் கதை.
ஆனால் இதில் அபிநயா பலாத்காரம் செய்யப்படும் காட்சி எடுத்திருப்பது அனைவரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. அபிநயாவின் உதட்டை வில்லன் கடித்து இழுப்பது போன்றும், புடவையை உருவி அபிநயாவை சித்திரவதை செய்யும் காட்சிகளை படமாக்கி வைத்திருக்கிறார்கள். இந்த காட்சிகள் மோசமான முன்னுதாரணம்.
உண்மையில் அந்த காட்சிகளில் அபிநயா ஆபாசமாக நடிக்கவில்லை... அவரை பாலியல் கொடுமை செய்யும் காட்சி உண்மையிலேயே இயக்குனரால் கொடுமையாக படமாக்கப்பட்டுள்ளது. கதைக்கு விறுவிறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக இவ்வளவு மோசமாகவா காட்சி எடுக்க வேண்டும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் பவ்யமாக நடித்த அபிநயாவை இந்த காட்சியில் இவ்வளவு ஆபாசமாக காட்டி இருப்பதற்கு பலரும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். இது போன்ற காட்சியில் இவர் நடித்திருக்கக் கூடாது என்றும் அபிநயாவை பலரும் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் இது குறித்து ஒரு பேட்டி ஒன்றில் அபிநயா செய்கை மொழியில் விளக்கம் கொடுத்திருந்தார். அதில், “அந்த காட்சி படத்தில் இடம்பெற வேண்டும் என்பதும், அதில் நான் எப்படி நடிக்க வேண்டும் என்பது முழுக்க முழுக்க இயக்குனர் எடுத்த முடிவு” என்று அபிநயா கூறியிருக்கிறார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications