திடீரென முடிக்கப்பட்ட சீரியல்.. கோபத்தில் சீரியல் நடிகை ரேஷ்மா போட்ட கமெண்ட்.. இவ்ளோ பிரச்சனையா?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் திடீரென முடிவுக்கு வந்துவிட்டது. இதற்கு கதாநாயகன் ஜெய் ஆகாஷ் ஹெல்த் பிரச்சனை தான் காரணம் என்று கூறப்படும் நிலையில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை ரேஷ்மா தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து கமெண்ட் கொடுத்திருக்கிறார்.
ஜீ தமிழில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ஒளிபரப்பான நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் சில மாதங்களுக்குள்ளேயே முடிவுக்கு வந்துவிட்டது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. இந்த நிலையில் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த நடிகர் ஜெய் ஆகாஷ் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், தனக்கு காலில் அடிபட்டு இருந்ததால் தன்னால் தொடர்ந்து இந்த சீரியலில் நடிக்க முடியவில்லை.

இத்தனை நாட்களாக வலியோடு நடித்து விட்டேன். ஆனால் இப்போது ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழ்நிலை இருப்பதால் நான் சீரியலில் இருந்து விலகுவதாக முடிவு எடுத்து அதற்கு சேனல் தரப்பினர்கள் முடியாது என்று சீரியலை முடித்து விட்டார்கள் என்பதுபோல அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
இதனால் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த ரேஷ்மா முரளிதரனின் ரசிகர்கள் நீங்கள் ஹீரோவை பற்றி யோசித்த போது ஏன் ஹீரோயினி பற்றி யோசிக்கவில்லை என்று பஞ்சாயத்து செய்து வருகிறார்கள்.
நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் கதாநாயகனாக ஜெய் ஆகாஷும், ரேஷ்மா முரளிதரன் அவருக்கு ஜோடியாகவும் நடித்து வந்தனர். இந்த சீரியல் ஹிந்தியில் இருந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாக தொடங்கியது. சமீபத்தில் இந்த சீரியல் 148 எபிசோடு முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த சீரியலின் திடீர் முடிவை ஏற்றுக் கொள்ளாத ரசிகர் ஒருவர் ஜீ தமிழ் மற்றும் ரேஷ்மாவை டேக் செய்து ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் ரேஷ்மாவும் சீரியல் ரசிகர்களிடையே பிரபலமான ஹீரோயின் தான். அப்படி இருக்கும்போது ஹீரோவை மாற்றி விட்டு இந்த சீரியலை கொண்டு போய் இருக்கலாம்.

ஜெய் ஆகாஷ் ஒருவர் விலகியதற்காக ரேஷ்மாவை பொருட்படுத்தாமல் நீங்கள் எப்படி சீரியலை நிறுத்தலாம் என்று கேட்டிருக்கிறார். இதனால் ஜெய் ஆகாஷ் மற்றும் ரேஷ்மாவின் ரசிகர்கள் இணையத்தில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் ரேஷ்மாவும் ஜீ தமிழ் சேனலுக்கு எதிராக கருத்துக்கள் பதிவிடுபவர்களுக்கு லைக் கொடுத்து இருக்கிறார்.

அதுபோல ரேஷ்மாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிடும் ரசிகர்களை ஜெய் ஆகாஷ் ரசிகர்கள் திட்டி கமெண்ட் கொடுத்து வரும் நிலையில் அதற்கு ரேஷ்மா முரளிதரன் ஒரு கமெண்ட் கொடுத்து இருக்கிறார். அதில், என்ன நடந்தது என்று சரியான உண்மை உங்களுக்கு தெரியாவிட்டால் பொய்யான கதைகளை பரப்புவதையும், எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் ஒருவரை கண்மூடித்தனமாக ஆதரிப்பதையும் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நெஞ்சத்தை கிள்ளாதே நிகழ்ச்சியை ஏன் முடிக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். அது என்னுடையது தவறு அல்ல. எனது குழுவின் எந்த தவறும் இல்லை. எனது ரசிகர் பக்கங்களை தாக்கி புகார் அளிப்பது உண்மையை மாற்ற போவதில்லை.
எனது ரசிகர்கள் என்னை அன்புடனும் மரியாதையுடனும் ஆதரித்துள்ளனர். அவர்கள் அநியாயமாக குறி வைக்கப்படுவதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். நீங்கள் உண்மையிலேயே உங்கள் ஹீரோவுக்கு ஆதரவாக இருந்தால் அவருடைய தொழில் வளர்ச்சிக்கு உறுதியாக இருங்கள். டாக்ஸியாக யாருக்கும் சப்போர்ட் செய்யாதீர்கள் என்று காட்டமாக பதில் கொடுத்து இருக்கிறார். இந்த கமெண்டுக்கு ரேஷ்மாவின் தோழியான நடிகை நக்ஷத்திரா ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications