"விருமாண்டி” பட அபிராமியை நினைவிருக்கா? மடியில் குழந்தையோடு உருக்கமாக வெளியிட்ட பதிவு
சென்னை: நடிகை அபிராமி பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
அன்னையர் தினத்தில் தான் ஒரு அம்மாவாக மாறிய தருணத்தை அபிராமி உணர்வுபூர்வமாக தெரிவித்திருக்கிறார்.

13 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது குழந்தை குறித்து உருக்கமாக பல தகவல்களை அபிராமி பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவராக நடிகை அபிராமி இப்ப வரைக்கும் இருக்கிறார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதாவது ஒரு பெண் குழந்தை ஒன்றே தத்தெடுத்து இருப்பதாக அதில் தெரிவித்திருக்கிறார்.
ஒரு சிலர் மட்டும் தான் சிரித்தாலும், முறைத்தாலும், கோவப்பட்டாலும் அழகு என்று சொல்வார்கள். அந்த மாதிரி தான் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் நடிகை அபிராமி மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், சார்லி சாப்ளின் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
கிராமத்து கேரக்டராக இருந்தாலும் சரி, நகரத்து கேரக்டராக இருந்தாலும் சரி இவருடைய தனித்துவமான சிரிப்பாலே அந்த கேரக்டரில் நிறைந்திருக்கும் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இவர் கமலுக்கு ஜோடியாக விருமாண்டி படத்தில் நடித்ததை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.
அதுவரைக்கும் அமைதியாகவும் காதல் காட்சிகளிலும் நடித்து வந்த அபிராமி விருமாண்டி திரைப்படத்தில் ஒரு திமிர் ஆன கேரக்டர் மூலமாக அனைவருடைய மனதிலும் நிறைந்து இருந்தார். அந்த நேரத்தில் இவர் இனி சினிமாவில் பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் சினிமாவிற்கு கேப் விட்டு விட்டார்.
பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு மாதவனின் மாறா திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்றி கொடுத்தார். அதைத் தொடர்ந்து கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் வெப் சீரிஸ்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சின்ன திரையில் சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் நானும் தன்னுடைய கணவராகிய பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருவதாக பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அது குறித்து அவர் பகிர்ந்துள்ள பதிவில் நண்பர்களை நானும் ராகுலும் இதனை அறிவிப்பதில் சிலிர்க்கிறோம். நாங்கள் ஒரு பெண் குழந்தைக்கு தாய் தந்தையாக மாறி இருக்கிறோம்.

கடந்த வருடம் இவளை நாங்கள் தத்து எடுத்துக் கொண்டோம். இது எல்லா விதத்திலும் எங்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டது. தாயாக இந்த அன்னையர் தினத்தை கொண்டாடுவதில் மகிழ்கிறேன். எங்கள் குழந்தைக்கு கல்கி என பெயர் வைத்திருக்கிறோம் என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது..
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications