ஐஸ்வர்யாவுக்கு வந்த தேவர் மகன் வாய்ப்பு.. கடுப்பான பாக்கியராஜ்.. இப்ப நினைச்சாலும் கண்ணீர் வருதாம்
சென்னை: நடிகை லட்சுமியின் மகளான நடிகை ஐஸ்வர்யா தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் தனக்கு நூல் இலையில் தவறி போன பல ஹிட்டான திரைப்படங்கள் பற்றி பல தகவல்களை கூறியிருக்கிறார்.

அந்த வகையில் தேவர்மகன் திரைப்படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தும் கடைசி நிமிடங்களில் அது தவறி போய் விட்டது. அதற்கு காரணம் பாக்யராஜும் தான் என்று ஐஸ்வர்யா கூறி இருக்கிறார்.
பொதுவாக பல திரைப்படங்கள் தொடங்கப்படுவதற்கு முன்பே அதற்கான கதை சில குறிப்பிட்ட நடிகர்களை மனதில் வைத்து தான் எடுக்கப்பட்டு வருவது வழக்கம். ஆனால் பல நேரங்களில் தாங்கள் நினைத்த நடிகர்கள் கிடைக்காமல் வேறு நடிகர்கள் மாற்றப்படுவதும் உண்டு. அது பல முன்னணி நடிகர்களின் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது.
அதுபோலத்தான் நடிகை ஐஸ்வர்யாவின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது என்று சமீபத்தில் அவர உருக்கமாக பேசியிருக்கிறார். அதற்கு காரணம் கமல் நடிப்பில் பெரிய அளவில் ஹிட் கொடுத்த திரைப்படங்கள் பல இருந்தாலும் தேவர் மகன் திரைப்படம் முக்கியமானதாக இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தின் கதை திரைக்கதை வசனத்தை கமலஹாசனே எழுதி இருப்பார்..
அதோடு மலையாள பட இயக்குனர் பரதன் தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். கிராமத்தில் இருக்கும் அப்பாவை பார்க்க வரும் கமல்ஹாசன் சாதி பிரச்சனை மற்றும் பரம்பரை பிரச்சனையில் சிக்கி இருக்கும் கிராமத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. கமலின் அப்பாவாக சிவாஜியும் வில்லனாக நாசரும் நடித்திருப்பார்கள்.
அதுபோல கமலின் காதலியாக கௌதமியும், மனைவியாக ரேவதியும் நடித்திருப்பார்கள். ஆனால் கௌதமி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது ஐஸ்வர்யா தானாம். இது பற்றி தான் சமீபத்தில் அவர் பேசியிருக்கிறார். தேவர் மகன் திரைப்படத்தில் ரேவதி வேடத்தில் மீனாவும் கௌதமி வேடத்தில் நானும் தான் நடிக்க இருந்தோம். அப்போதுதான் பாக்யராஜ் ராசுக்குட்டி திரைப்படத்தை எடுத்தார்.
அந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக என்னிடம் கால் ஷீட் கேட்டார்கள்.. நான் இல்லை என்று சொன்னதால் அவர் கடுப்பாகிவிட்டார். ஏற்கனவே இரண்டு முறை அவர் என்னிடம் கால் ஷீட் கேட்டு வந்தபோது அது கொடுக்க முடியாமல் ஆகிவிட்டது. அதனால் எப்ப கேட்டாலும் இந்த பெண்ணிடம் கால் ஷீட் இல்லை என்று சொல்லிவிட்டு இருக்குனு, வேற நடிகையை பார்க்க தொடங்கினார்கள்.
ஆனால் தேவர் மகனில் மீனாவுக்கு பதிலாக ரேவதியும் எனக்கு பதிலாக கௌதமியும் நடிப்பதாக பிறகு தான் எனக்கு செய்திகள் கிடைத்தது. எனவே நான் பாக்கியராஜ் சாருக்கு ஜோடியாக ராசுக்குட்டி திரைப்படத்தில் நடித்தேன் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தில் மதுபாலா நடித்த வேடத்திலும் முதலில் ஐஸ்வர்யாவுக்கு தான் வாய்ப்பு வந்ததாம்.
அந்தப் படத்தில் நடிப்பதற்கும் கால்ஷீட் இல்லாததால் அதையும் மிஸ் பண்ணி விட்டேன். அந்த நேரத்தில் கால் ஷீட் பிரச்சினையால் நல்ல படங்களில் நல்ல வேடத்தை எல்லாம் மிஸ் பண்ணி விட்டேன் என்று இப்போது வருத்தத்தோடு பீல் பண்ணி ஐஸ்வர்யா பேசியிருக்கிறார்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications