பிக் பாஸ் மணிகண்டனும் மனைவி சோபியாவும் பிரிந்து விட்டார்களா? இன்ஸ்ட்டாவில் இதை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த மணிகண்டன் சீரியல் நடிகை சோபியாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். ஆனால் இப்போது இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் பரவி வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.

இந்த வருடம் சினிமா மற்றும் சீரியல் பிரபலங்களுக்கு போதாத வருடம் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்தடுத்து பல பிரபலங்கள் தங்களுடைய விவாகரத்து செய்தியை அறிவித்து வருகிறார்கள். சினிமா துறையில் பலரையும் கவர்ந்த பிரபலங்கள் கூட திடீரென்று தாங்கள் பிரிவதை அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

television manikandan aishwarya rajesh

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த மணிகண்டனும் அவருடைய மனைவியும் பிரிந்து விட்டதாக செய்திகள் பரவி வருகிறது. இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பே விவாகரத்து நடந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவரும் இது பற்றி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இணையத்தில் டெலிட் செய்திருக்கிறார்கள்.

television manikandan aishwarya rajesh

மணிகண்டன் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக வேலு நாச்சியார் என்ற சீரியலில் விஜே சித்துவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியிலும் அதிக நாட்கள் இருந்தார்.

அதுபோல மணிகண்டன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது தன்னுடைய மனைவி குழந்தை பிறக்கும் போது பட்ட கஷ்டங்கள் குறித்து கண்கலங்கி பேசியிருந்தார். தனக்காக தன்னுடைய மனைவி செய்த தியாகங்கள் குறித்தும் பேசி இருந்தார். அதோடு தன்னுடைய மகன் மீது தனக்கு இருக்கும் பாசத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.

அதுபோல மணிகண்டனின் மனைவியான சோபியாவும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் கூட சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல ஜீ தமிழில் சந்தியாராகம் சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் தான் மணிகண்டன். ஐஸ்வர்யா ராஜேஷ் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்தார். அப்போதுதான் அட்டகத்தி திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். அதே திரைப்படத்தில் தான் மணிகண்டனின் மனைவியான சோபியாவும் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுபோல மணிகண்டன் மற்றும் சோபியா இருவருக்கும் சில நாட்களுக்கும் முன்பு விவாகரத்து ஆகிவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது. இது குறித்து இருவரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. நாம் இது பற்றி தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். இதுவரைக்கும் பதில் கிடைக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+