என் முகத்தைப் பார்த்து ராதிகா சொன்ன வார்த்தை.. இப்பவும் அதை மறக்கல.. நடிகை அமலா ஓப்பன் அப்
சென்னை: நடிகை அமலா சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை ராதிகா சரத்குமார் தனக்கு செய்த உதவி குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் தான் நடிக்க வந்தபோது ராதிகா தனக்கு கொடுத்த அட்வைஸை தான் இப்போதும் பின்பற்றி வருவதாக அதில் அமலா பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகை அமலாவை அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்கள் மறந்து இருக்க முடியாது. மெல்ல திறந்தது கதவு திரைப்படத்தில் முகத்தை காட்டாமல் கண்ணை மட்டும் காட்டி "வா வெண்ணிலா.. உன்னைத்தானே வானம் தேடுது"பாட்டு மூலமாக பல ரசிகர்களின் மனதை கவர்ந்த அமலா தமிழ் சினிமாவில் அறிமுகமானது என்னவோ டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான "மைதிலி என்னை காதலி" திரைப்படம் தான்.

அந்த திரைப்படத்தில் வெற்றிக்குப் பிறகு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது. அதே நேரத்தில் தமிழில் மட்டுமெல்லாம் அந்த நேரத்திலேயே கனடா, மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் பிஸியாக இருந்தார். பிறகு 1990 ஆம் ஆண்டு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நாக சைதன்யா, அகில் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இப்போது அமலா அதிகமாக தமிழ் திரைப்படங்களில் இல்லை என்றாலும் பிற மொழிகளில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அதுபோல விலங்குகள் மீது தீவிர அன்பு கொண்ட அமலா ப்ளூ கிராஸில் மெம்பராகவும் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அமலா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத பல நிகழ்வுகள் குறித்து பேசி இருக்கிறார். அப்போது நடிகை ராதிகா சரத்குமார் குறிப்பு பேசி இருக்கிறார்.
அதாவது ஒருமுறை ஒரு திரைப்படத்திற்காக அமலா மேக்கப் போட்டு மேக்கப் ரூமில் ரெடியா இருந்தாராம். அந்த நேரத்தில் அங்கு ராதிகா வந்திருக்கிறார். ராதிகா அமலாவை பார்த்ததும் யார் உனக்கு மேக்கப் போட்டது? என்று கேட்க அமலா அங்கிருந்த மேக்கப் ஆர்டிஸை சொல்லி இருக்கிறார். அப்போது ராதிகா முன்னணி நடிகையாக அதிகமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரமாம்.
ஆனால் திடீரென்று ராதிகா அமலாவிடம் மேக்கப் குறித்து கேட்டதும் அமலாவுக்கு என்னவென்று புரியாமல் முழித்துக் கொண்டு இருந்திருக்கிறார். பிறகு இவ்வளவு அழகான முகத்துக்கு ஏன் இவ்வளவு அசிங்கமா மேக்கப் போட்டு இருக்கு என்று சொல்லி அந்த மேக்கப்பை உடனே அழிக்க சொல்லி ராதிகாவே மேக்கப் போட்டு விட்டாராம். அதையெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்லை என்று அமலா சொல்லி இருக்கிறார்.
அதுபோல அதற்குப் பிறகு நான் இப்ப வரைக்கும் எனக்கு எந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட்களையும் வைத்துக் கொள்வது கிடையாது. எனக்கு நானே மேக்கப் போட்டு விடுகிறேன். அதற்கு காரணம் ராதிகா மேடம் அன்னைக்கு சொன்னது வார்த்தை தான். அவர் எனக்கு மேக்கப் போட்டுவிட்டதை பார்த்து நானே அசந்து போய்விட்டேன். இப்போதும் அதை நினைச்சா எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
டாப் கதாநாயகியாக இருக்கிறோமோ என்ற ஈகோ கொஞ்சம் கூட இல்லாமல் அவர் அன்னைக்கு என்னிடம் பழகினார். நான் அதற்கு முன்பு ராதிகாவிடம் அவ்வளவு நெருக்கமாக பேசி பழகியதும் கிடையாது. ஆனாலும் அவர் எனக்கு டிப்ஸ்கள் கொடுத்து விட்டு போயிருந்தார் என்று ராதிகா சரத்குமார் குறித்து அமலா பேசிய வீடியோ இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications