கடைசி 5 நிமிஷம் ரிதன்யா எப்படி கஷ்டப்பட்டிருப்பாளோ! நெனச்சாலே பதறுது! நேரில் போய் அம்பிகா ஆறுதல்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணைக் கொடுமையாலும், கணவரின் உடல்ரீதியிலான கொடூரத் தாக்குதலாலும் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாவின் குடும்பத்தை நடிகை அம்பிகா சந்தித்து ஆறுதல் கூறினார்.
ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோருக்கு தண்டனை கிடைக்கும் வரை உணவு உட்கொள்ள மாட்டேன் என அவருடைய தாய் ஜெயசுதா சபதம் எடுத்திருந்தார். அதன்படி அவர் உணவு உண்ணாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டுத் தளர்ந்து காணப்பட்டார். உறவினர்கள் உணவு உட்கொள்ளுமாறு வற்புறுத்தியும் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில், நடிகை அம்பிகா வந்ததும், அவர் கையால் நீராகாரம் (கஞ்சி) கொடுத்தார்.

நடிகை அம்பிகாவின் ஆதங்கமான பேட்டி
ரிதன்யாவின் குடும்பத்தினரைச் சந்தித்த பிறகு, நடிகை அம்பிகா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
"கணவன் மனைவிக்குள் நடக்கும் விஷயங்களை எல்லாம் வெளியே சொல்லலாமா என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுடைய வீட்டில் இதுபோல ஒரு சம்பவம் நடந்திருந்தால் அவர்கள் வெளியே சொல்லாமல் இருந்துவிடுவார்களா?
கோயிலுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு காரில் உட்கார்ந்துகொண்டு, கடைசி ஐந்து நிமிடங்கள் அந்தப் பெண்ணின் மனதிலும், இதயத்திலும் வந்த விஷயங்களை யோசித்துப் பாருங்கள். அந்த இடத்தில் உங்கள் மகளை வைத்துப் பாருங்கள். ஒருவருடைய கண்ணீரைப் பார்த்து சந்தோஷப்படுவதற்காகவே நம் ஊரில் சில ஆட்கள் இருக்கிறார்கள்.
இந்தக் கொடுமைக்கு ஏன் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? கல்லால் அடித்துக் கொல்வது, பொது இடத்தில் தலையை வெட்டுவது போன்ற கொடூரத் தண்டனைகளை கொடுத்தால்தான் ஒரு உயிரையாவது நம்மால் காப்பாற்ற முடியும்.
ஒரு பெண் தனது கணவர் வீட்டிலிருந்து திரும்பி வந்தால் உடனே மற்றவர்கள், 'அப்படியெல்லாம் தாய் வீட்டிற்கு உடனே வந்துவிடக் கூடாது. உங்கள் அப்பா, அம்மாவுக்கு அவமானமாகிவிடும். ஏன் உங்கள் பொண்ணு வீட்டோடு இருக்கு என்று கேட்டு நிறைய பேர் அப்பா, அம்மாவுக்குக் கவலையை ஏற்படுத்துவார்கள். உன் தம்பிக்குக் கல்யாணம் நடக்காது' என பெண்களை அச்சுறுத்துவதை இந்தச் சமூகமும் நிறுத்துங்கள்.
நடந்த கொடுமைக்குக் கணவர் வீட்டாருக்கு எதிராக வலிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொலைக்காட்சிச் செய்தியைப் பார்த்தாலே பெண்களுக்கு எதிராக எத்தனையோ விஷயங்கள் நடப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கிறது. அந்தப் பெண் அந்த ஐந்து நிமிடம் என்ன நினைத்திருப்பாள்? நினைக்கவே பதறுகிறது!
தயவுசெய்து தவறு செய்தவர்களுக்கு ஆதரவாக யாரும் இருக்காதீர்கள். அந்தக் குழந்தை பிறக்க வேண்டும் என நினைத்து அவருடைய அப்பா, அம்மா எத்தனை கோயிலுக்குச் சென்றிருப்பார்கள்! 48 மணி நேரம், 52 மணி நேரம் எனப் பிரசவ வலியை அனுபவித்திருப்பார்கள். இத்தனை கஷ்டமெல்லாம் இப்படி 27 வயதில் அந்தப் பெண்ணைக் காவு கொடுப்பதற்காகவா? 'எனக்கு இறுதிச் சடங்கு செய்யும் குழந்தைக்கு நான் செய்கிறேனே' என்ற வலியும் வேதனையும் அவர்கள் மனதைக் கொல்லும். என்ன சொல்வதென்றே தெரியவில்லை," என அம்பிகா கண்ணீருடன் தெரிவித்தார்.
ரிதன்யா தற்கொலைக்குக் காரணமான கொடூரம்
திருப்பூர் அவிநாசியை அடுத்த கைகாட்டிப்புதூரைச் சேர்ந்த அண்ணாதுரை - ஜெயசுதா தம்பதியின் மகள் ரிதன்யா (27). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கவின்குமாருக்கும் ஏப்ரல் 11ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 300 பவுன் நகை, வால்வோ கார் உள்ளிட்டவை வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டன.
ஆனால் அவை போதாது என்றும், கூடுதலாக 200 பவுன் நகை வாங்கி வருமாறும், கவினுக்குத் தொழில் அமைக்கப் பணம் கேட்டு வருமாறும் ரிதன்யாவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சித்ரவதையை அனுபவித்த ரிதன்யா, திருமணமாகி 78 நாட்களில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications