செந்தில் நல்லவர்.. ஆனால் கவுண்டமணி அப்படி கிடையாது! சூட்டிங்கில் மோசமான பேச்சு! அனுஜா ரெட்டி பேட்டி
சென்னை: நடிகை அனுஜா ரெட்டி சினிமா வாழ்க்கையில் தன்னோடு நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் நடிகர் செந்தில் குறித்தும் கவுண்டமணி குறித்தும் பேசியிருக்கிறார். அப்போது கவுண்டமணி சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்பவும் திமிராக பேசுவார், அடுத்தவர்களை பற்றி மோசமாக பேசுவார் என்று பயங்கரமாக குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
ஒரு சில நடிகைகள் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் பதிந்து போய்விடுவார்கள். அந்த வகையில் நடிகை அனுஜா ரெட்டியும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் குத்து பாடல்களுக்கு டான்ஸ் ஆடி இருந்த நிலையில் பிறகு நடிகர் செந்தில் கவுண்டமணி போன்ற நடிகர்களோடு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் கவுண்டமணி மற்றும் செந்தில் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

அனுஜா பேசுகையில், சினிமாவில் நான் அறிமுகமான புதியதில் முதலில் கவர்ச்சியான பாடல்களுக்கு தான் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு ஒரு சின்ன இடைவெளி விட்டு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தேன். நான் கவர்ச்சியான பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவது குறித்து எங்கள் வீட்டில் எதுவுமே கூறவில்லை. காரணம் அவர்களுக்கு சினிமா பற்றி பெரிய அளவில் எதுவும் தெரியாது.
அதனால் அவர்கள் என்னுடைய நடிப்பை கண்டுக்கொள்ளவில்லை. அதுபோல நான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் என்னுடைய சூட்டிங் ஸ்பாட்டிற்கு என்னுடைய அப்பா, அம்மா வந்ததே கிடையாது. எப்போதும் என்னுடைய அக்கா தான் வருவாங்க. நான் கவுண்டமணி, செந்தில் போன்ற நடிகர்களோடு நடித்திருக்கிறேன். அதில் கவுண்டமணி சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் கிண்டல் செய்வதுபோல என்னையும் ஆரம்பத்தில் அதிகமாக கிண்டல் செய்வாரு.
அவரு பொதுவாக எந்த நபர் பக்கத்தில் இல்லையோ அவரைப்பற்றி தான் அதிகமாக இன்னொருவரிடம் பேசுவார். ஆனால் செந்தில் அப்படி கிடையாது. செந்தில் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தால் இருக்கிறவர்களை பற்றி மட்டும் பேசுவார். அவர்களிடம் பாசமாக பேசுவார் அவ்வளவுதான். ஆனால் கவுண்டமணிக்கு கொஞ்சம் அகம்பாவம் அதிகம். ஒரு கட்டத்தில் என்னிடம் அதிகாரமாக பேசுவது போல நானும் அவரிடம் திருப்பி பேச ஆரம்பித்து விட்டேன்.
ஒரு நாள் சூட்டிங் ஸ்பாட்டில் இல்லாத ஒரு நடிகர் பற்றி கவுண்டமணி பேச எனக்கு கோபம் வந்துவிட்டது. அதற்கு அவரிடம் நேரடியாகவே அப்போ நீங்க மட்டும் எப்படி என்று கேட்டு விட்டேன். காரணம் என்னவென்றால் அவர் எல்லா நடிகர்களை பற்றியும் மட்டம் தட்டி தான் பேசுவார். தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்று அவர் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் அவருக்கும் முகத்துக்கு நேராகவே அவரை திட்டிவிட்டேன்.
மலையாள சினிமாவில் "இந்த" மாதிரி நடிகைகளிடம் தான் தப்பா நடந்துக்கிறாங்க.. லட்சுமி ராமகிருஷ்ணன் பகீர்
அதற்குப் பிறகு அவரோடு நடிப்பது எனக்கு நின்றுவிட்டது. ஆனாலும் அவர் நடிக்கும் படங்களில் நான் டான்ஸ் ஆடி இருக்கிறேன். அப்போ கூட அவரிடம் நான் பேசவே இல்ல. அதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து தான் வாசு இயக்கிய உடன்பிறப்பே படத்தில் அவரோடு நான் நடித்தேன். வாசு சார் படம் என்பதால் அவரால் என்னை வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை என்று நினைக்கிறேன் என்று அனுஜா ரெட்டி பேசி இருக்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications