Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மலையாள சினிமாவில் “இந்த” மாதிரி நடிகைகளிடம் தான் தப்பா நடந்துக்கிறாங்க.. லட்சுமி ராமகிருஷ்ணன் பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாள சினிமா உலகில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் குறித்து நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்ட பிறகு பல நடிகைகள் மலையாள சினிமாவில் என்ன நடக்கிறது என்று வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அதில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய கருத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அறிமுகமே தேவை இல்லை. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை, தொகுப்பாளர் என்று பல முகங்கள் வேலை வைத்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் இவர் பலருடைய குடும்பப் பிரச்சனைகளுக்கு கருத்து கூறி தீர்வு கண்டிருக்கிறார். அதனால் பல விமர்சனங்களையும் சந்தித்து இருக்கிறார். இந்த நிலையில் தற்போது மலையாள சினிமாவில் நடக்கும் அவலங்கள் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

television lakshmi ramakrishnan

அதில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசுகையில் மலையாள சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்மெண்ட் பிரச்சனைகள் குறித்து ஹேமா கமிட்டி வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இது ஐந்து வருடங்களாக நடத்தப்பட்ட விசாரணையில் வெளிவந்த தகவலாக இருந்தாலும் இது இணையத்தில் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை மலையாள சினிமா உலகில் மட்டும் அல்ல எல்லா இடங்களிலும் இருக்கிறது.

சினிமா என்றால் இப்படித்தான் இருக்கும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லா இயக்குனர்களும், நடிகர்களும் இதுபோல தவறாக நடக்கிறார்களா? என்று சொன்னால் இல்லை என்று சொல்லலாம். ஒரு சிலர் நடிகைகளுக்கு நல்ல மரியாதையை கொடுத்து அவர்கள் தங்களுடைய வேலைக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சிலர் தான் இந்த மாதிரி தவறான முறையில்
நடந்து கொள்கிறார்கள்.

அதே நேரத்தில் மலையாள சினிமா மட்டும் அல்லாமல் எல்லா சினிமாக்களிலும் சில நடிகைகளிடம் மட்டும் சிலர் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைக்கு கூப்பிடுவதற்கு காரணம் அவர்களுடைய குடும்ப பிரச்சனை தான். பொதுவாக யாரிடமெல்லாம் இந்த மாதிரி அட்ஜஸ்மென்ட் பிரச்சனைக்கு கூப்பிடுகிறார்கள் என்றால் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமாவில் அறிமுகமானவர்கள், அதுபோல குடும்ப சூழ்நிலை காரணமாக சிலர் வேறு வழியில்லாமல் சினிமாவை நம்பி இருப்பார்கள் அவர்களைத்தான் இந்த மாதிரி பட்டவர்கள் டார்கெட் செய்கிறார்கள்.

ஏற்கனவே புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகைகளுக்கு இந்த மாதிரி தொல்லைகள் பெரிய அளவில் இருக்காது. ஆனால் சின்ன சின்ன கேரக்டரில் நடிப்பதற்காக வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கும் அதே நேரத்தில் இவர்களுக்கு நடிப்பை தாண்டி வேறு எதுவும் தெரியாது என்று ஒரு நிலை இருக்கும்போது தைரியமாக சிலர் அவர்களிடம் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனையை செய்கிறார்கள்.

பொதுவாக நடிகைகள் ஒரு தொழில் இல்லை என்றால் இன்னொரு தொழில் என்று கைவசம் தங்களுடைய வருமானத்திற்கு வேறு ஒரு வேலை இருக்கிறது என்று தெரிந்தால் இந்த மாதிரி அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைக்கு அவர்களை கூப்பிடுவது குறைவாக இருக்கிறது. இவர்கள் கூப்பிட்டாலும் நம்மோடு வர மாட்டார்கள் என்று சினிமா துறையில் இருப்பவர்களுக்கு தெரிந்து விடுகிறது.

அதே நேரத்தில் பாலியல் தொல்லைகள் மட்டும் நடிகைகளுக்கு நடக்கவில்லை கழிப்பட வசதிகள் இல்லாமலும், சம்பளம் முறையாக வழங்கப்படாமலும் இருக்கிறது. நான் சினிமாவில் இளமையான காலத்தில் நடிக்க வரவில்லை. நான் 40 வயதிற்கு மேலே தான் நடிக்க வந்தேன். ஆனால் நான் சினிமாவில் வரும்போது எனக்கு என்னுடைய கணவருடைய முழு ஒத்துழைப்பு இருந்தது.

television lakshmi ramakrishnan

சினிமாவில் நடிக்க வேண்டும் என்று மட்டுமல்லாமல் பல திறமைகள் எனக்கு இருந்ததால் தைரியமாக எதையும் எதிர்கொள்ளலாம் என்று இருந்தேன். அந்த நேரத்தில் கூட சினிமா என்றால் இப்படித்தான் என்று ஒரு முத்திரை இருந்தது. ஆனாலும் எனக்கு இருக்கிற தைரியத்தால் என்னைப் பற்றி அவர்களுடைய சிந்தனையை மாற்றிவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நடப்பதை பார்க்கும்போது சினிமா என்றால் இப்படித்தான் இருக்கும் என்று எல்லோரும் சொல்லுவது போல தான் இருக்கிறது என தோன்றுகிறது.

ஆனால் சினிமாவில் மட்டும் இந்த பிரச்சனை இருக்கவில்லை. ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்த பயிற்சி மருத்துவருக்கு நடந்த கொடுமை உலகத்திற்கே தெரிந்ததுதான். அதனால் சினிமாவில் மட்டும் இந்த மாதிரி பிரச்சனை இல்லை. டாக்டர்களுக்கும் இருக்கிறது, மாணவர்களுக்கும் இருக்கிறது. ஏன் வீட்டிற்குள்ளேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமலும் இருக்கிறது என்று அந்த பேட்டியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய கருத்தை கூறி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+