11 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன்.. பீரியட்ஸ் பற்றி மோசமாக பேசினார்.. நடிகை அனுபமா உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது காதல் வாழ்க்கை குறித்து பேசியது மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகி உள்ளது. கடந்த 2 வருஷங்களில் தான் பட்ட வலி, வேதனை குறித்து அவர் கண்கலங்க பேசியிருந்தார். அப்போது தான் 11 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் ஒரு டாக்ஸிக் காதலால், எனக்கு இப்போ கல்யாணம் பண்ணுற ஆசையே போய்விட்டது என்று பேசி இருக்கிறார்.

அனுபமா 2வது பேட்டி

அனுபமா கொடுத்த முதல் பேட்டி பெரிய அளவில் வைரல் ஆனது. அதைத் தொடர்ந்து இப்போது 2வது பேட்டியும் வெளியாகி இருக்கிறது. அதில் அவர் யாரை காதலித்தார்? என்று சொல்லவில்லை என்றாலும் அந்த நபர் மீது பல குற்றச்சாட்டுகள் சொல்லி இருக்கிறார். முதல் பாகத்தில் பேசும்போது தான் காதலித்த நபர் ஒருநாள் அதிகமான காதலை கொட்டுவார், இரண்டாவது நாள் அன்னியன் மாதிரி முரட்டுத்தனமாக நடந்து கொள்வார், அடுத்த சில நாட்கள் கழித்து வந்து அம்பி போல மன்னிப்பு கேட்பார் அவரை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

Anupama

11 குழந்தைக்கு ஆசை

இரண்டு வருடங்களாக மன அழுத்தத்தில் இருந்தேன். அதனால் உடல் அளவிலும், மனதளவிலும் நான் ரொம்பவும் கஷ்டப்பட்டேன். ஆரம்பத்தில் எல்லாம் எனக்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும் என்பதால் 11 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் அந்த உறவில் இருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் கஷ்டம் எல்லாம் பார்த்து இப்போ கல்யாணம் பண்ணவே பயமாக இருக்கு, பிடிக்கவே இல்லை என்று கண் கலங்க பேசி இருக்கிறார்.

நான் பர்தா படத்தின் ப்ரமோஷனுக்கு போகும்போது அந்த நபர் என்னை போக வேண்டாம் என்று சொன்னாரு. பீரியட்ஸ் பற்றிய மோசமாக பேசினார். அவரையும் மீறி தான் நான் அந்த பட ப்ரொமோஷனில் கலந்து கொண்டேன். அதனால அதிகமாக சண்டை போட்டாரு. அப்ப கூட செய்தியாளர்கள் கேட்கும்போது என்னால் பேச முடியாமல் தான் நான் அழுதுவிட்டேன்.

இரவு எல்லாம் அழுகை

நான் எப்போதும் சந்தோஷமாக ரொம்பவும் சிரித்தபடி இருப்பேன். ஆனால் அந்த உறவில் இருந்த சமயத்தில் எப்போதும் பதட்டத்துடனே இருப்பேன். அடுத்து என்ன நடக்குமோ ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று பயந்து கொண்டே இருப்பேன். அதனாலேயே எனக்கு சிரிக்கவே மறந்து விட்டது. இரவெல்லாம் அழுது கொண்டிருப்பேன். அடுத்த நாள் சூட்டிங் போன இடத்தில் சாப்பிட கூட முடியாமல் அழுது இருக்கிறேன். இப்படி கசப்பான நினைவுகளில் இருந்து இப்போது நாம் வெளியே வந்து என்னுடைய பழைய நிலைக்கு வந்திருக்கிறேன் என்று அனுபமா பேசி இருக்கிறார்.

யார் அந்த நபர்

முதல் பாகம் வெளியானதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல இப்போதும் அதிகமான விமர்சனங்களை சந்தித்து இரக்கிறது. அனுபமா அந்த பேட்டி முழுக்க யாரை காதலித்தார் என்று சொல்லவில்லை என்றாலும் அவர் சொல்லும் விஷயங்கள் எல்லாமே நடிகர் விக்ரமின் மகன் துருவ்வை தான் என்று பலரும் கூறி வருகின்றனர். காரணம் துருவ் பைசன் படத்தில் அனுபவமா நடிக்கும் போது இருவரும் காதலித்ததாக செய்திகள் வெளியானது.

அதை இருவரும் மறுக்கவில்லை. அப்போது துருவ் வெளியிடும் பதிவுகளுக்கெல்லாம் அனுபமா பதில் கொடுத்துக் கொண்டிருப்பார். அதுபோல அனுபவமா பதிவுக்கு துருவ் முதல் ஆளாக லைக் கொடுத்து வருவார். ஆனால் இப்போது அனுபமா துருவ் விக்ரமை அன்பாலோ செய்து இருக்கிறார். இதுதான் இப்போ இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+