மஞ்சும்மெல் பாய்ஸ் ப்ரொடியூசரை கரம் பிடிக்கும் நடிகை அர்ச்சனா ரவி.. நெகிழ்ச்சியான பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாள திரை உலகில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனிக்கும், நடிகையையும் மாடலுமான அர்ச்சனா ரவிக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. இவர்களுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் அந்த அழகான தருணங்களில் புகைப்படங்களை அர்ச்சனா‌ரவி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை அர்ச்சனா ரவி பதிவு

நிச்சயதார்த்த போட்டோக்களை வெளியிட்டு அர்ச்சனா ரவி, தங்களுடைய உறவு குறித்து மிகவும் அழகாக பதிவிட்டு இருக்கிறார். வாழ்க்கையில் நல்ல நேரம் வந்தாலும் சரி, மோசமான சூழ்நிலை வந்தாலும் சரி, இருவரும் ஒருவர் ஒருவர் துணையாக இருப்போம்.. எதுவாக இருந்தாலும் ஒருவர் மற்றொருவரை விட்டு விலக மாட்டோம் என்ற வகையில் அவர் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

Archana Manjummel Boys Engagement

அர்ச்சனா ரவி ஆரம்ப காலம்

அர்ச்சனா ரவி யார் என்றால், இவர் வெறும் நடிகை மட்டுமல்ல, மாடலிங் மற்றும் அழகி போட்டிகள் மூலம் கவனம் பெற்றவர். கேரளாவை சேர்ந்த அர்ச்சனா 2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா போட்டியில் முதல் ரன்னர் அப் பட்டம் பெற்றவர். பின்னர் பல்வேறு அழகி போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். தமிழில் "அட்டு" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ரிஷி ரித்விக் ஹீரோவாக நடித்த அந்த படத்தில் அர்ச்சனா ரவி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். 2017 ஆம் ஆண்டு வெளியான அந்த படத்தை ரத்தன் லிங்கா இயக்கி இருந்தார்.

Archana Manjummel Boys Engagement

இப்போது அவரது வாழ்க்கையில் இன்னொரு முக்கியமான அத்தியாயம் தொடங்கி இருக்கிறது அது ஷான் ஆண்டனியுடனான திருமணம் தான். ஷான் ஆண்டனி என்ற பெயர் மலையாள சினிமா ரசிகர்களுக்கு கடந்த சில ஆண்டுகளில் மிகவும் பரிச்சயமான பெயர். காரணம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர். சௌபின் ஷாஹிர், பாபு ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி இணைந்து பாராவா ஃபிலிம்ஸ் சார்பில் மஞ்சமல் பாய்ஸ் படத்தை தயாரித்தனர்.

VJ Archana:
சிதம்பரம் இயக்கிய இந்த படம் குணா குகையை பின்னணியாக கொண்டு உருவான சர்வைவல் திரில்லராக ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. குறிப்பாக மஞ்சும்மல் பாய்ஸ் தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் சென்றதற்கு கண்மணி அன்போடு காதலன் பாடலில் பயன்பாடும் ஒரு முக்கிய காரணம். அந்த படத்தில் இந்த பாடல் வரும்போது தமிழ் ரசிகர்கள் ஆரவாரம் செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது. கமலஹாசனின் குணா படத்துடன் தொடர்புடைய அந்த பாடல் புதிய தலைமுறை ரசிகர்களிடம் மீண்டும் பேசப்பட்டது.

Archana Manjummel Boys Engagement

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்

மஞ்சும்மல் பாய்ஸ் வெற்றிக்கு பிறகு சிறந்த படத்திற்கான விருதுகளில் பரவா ஃபிலிம்ஸ் பெயர் இடம் பெற்றிருந்தது. இப்படிப்பட்ட சினிமா பின்னணி கொண்ட ஷான் ஆண்டனிக்கும் மாடல் மற்றும் நடிகையான தனது சினிமா பயணத்தை தொடர்ந்து வரும் அர்ச்சனா ரவிக்கும் தற்போது நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. இருவரும் காதலை அறிவித்த விதமும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+