நடிகை ஆயிஷா காதலரை பிரிந்து விட்டாரா..? இதை கவனிச்சீங்களா.? காரணம் இதுதானா..?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஆயிஷா தன்னுடைய காதலரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் ஆயிஷாவும் அவருடைய காதலன் லோகேஷும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் அதற்கான காரணம் என்ன என்பது பற்றி கேள்விகள் எழுந்து வரும் நிலையில் ஆயிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூசகமாக சில குறிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 பிரபலமான ஆயிஷா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய காதலர் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது நான் ஒருவரை காதலிக்கிறேன். விரைவில் மகிழ்ச்சியான செய்தியை கூறுவேன் என்று சூசகமாக ஆயிஷா கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் ஆயிஷா பற்றி அவருடைய முன்னாள் காதலன் பல தகவல்களை பல பேட்டிகளில் பேசிக் கொண்டிருந்தார். ஏற்கனவே ஆயிஷாவுக்கு திருமணம் ஆகி விட்டது என்றும், எப்படி சினிமா பீல்டுக்குள் வந்தார் என்பது பற்றியும் பல்வேறு தகவல்களை கூறியிருந்தார். ஆனால் ஆயிஷா பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு இதைப் பற்றி எந்த பேட்டிகளிலும் விளக்கம் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் லோகேஷ் என்பவரை காதலிப்பதாகவும் அவரோடு எங்கேஜ்மென்ட் நடைபெற்றது போன்ற புகைப்படங்களையும் ஆயிஷா வெளியிட்டு இருந்தார். ஆனால் திடீரென்று தன்னுடைய instagram பக்கத்தில் அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்திருக்கிறார். இது ரசிகர்களுக்கு சந்தேகத்தை கொடுத்திருக்கிறது.
பிரம்மாண்டமாக நடைபெற்ற இவருடைய எங்கேஜ்மென்ட் மற்றும் போட்டோ சூட் புகைப்படங்கள் ஒன்று கூட இல்லையே என்ன ஆச்சு? இவர்களுக்குள் ஏதேனும் பிரச்சனையா? என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே சமீபத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் திருமணத்திற்கு பிறகு அடுத்தடுத்து விவாகரத்து மற்றும் குடும்ப பிரச்சனைகளை இணையத்தில் கொண்டு வந்து இருக்கும் நிலையில் தற்போது ஆயிஷா செய்திருக்கும் செயலும் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனாலும் ஆயிஷா தன்னுடைய காதலர் பற்றி எந்த தகவலையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.. அவருடைய புகைப்படங்களை மட்டும் டெலிட் செய்திருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தன்னுடைய வீடியோக்களையும் புகைப்படங்களையும் மட்டுமே அப்லோட் செய்து கொண்டிருக்கிறார். லேட்டஸ்டாக அவர் ஸ்டோரியில் கூட மாமன்னன் திரைப்படம் பற்றி வெளியிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் ஆயிஷாவிற்கு பிரேக் அப் ஏற்பட்டு விட்டதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கும் நிலையில் தற்போது இது குறித்து ஆயிஷா எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்து வருகிறார். சமீபத்தில் தான் பிக் பாஸ் பிரபலமான ரட்சிதா மகாலட்சுமி மற்றும் அவருடைய கணவர் தினேஷ் கார்த்திக் பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் சென்ற நிலையில் ஆயிஷா அந்த மாதிரி தானும் ஆக வேண்டாம் என்று சுமூகமாக பேசி முடித்து விட்டாரா? என்றும் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இது பற்றிய கேள்விகளுக்கு எல்லாம் ஆயிஷா பதில் கூறினால் தான் என்ன நடந்தது என்பது பற்றி விளக்கமாக அனைவருக்கும் தெரியும் என்பதால் அனைவரும் ஆயிஷாவின் பதிலுக்காக காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications