விஜய்க்கு ஜோடியா நடிக்க விரும்பல! கருப்பா இருந்தாரு! அவங்க அப்பா முன்னாடி! நடிகை பாலாம்பிகா வருத்தம்
சென்னை: நடிகர் விஜய் நடித்த "நாளைய தீர்ப்பு" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தபோது விஜய் கருப்பாக இருக்கிறார் என்று அவரோடு நடிப்பதற்கு விருப்பப்படவில்லை என்று நடிகை பாலாம்பிகா மனம் திறந்து பேசி இருக்கும் நிலையில் இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக பல திரைப்படங்களில் ஆரம்பத்தில் ஒருவரிடம் கதை சொல்லப்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்காத போது தான் இன்னொருவர் அந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்கள். அந்த திரைப்படம் வெற்றி பெற்று விட்டால் சில வருடங்கள் கழித்து முதலில் திரைப்படத்தை மிஸ் பண்ணியவர்கள் நாங்கள் இதை மிஸ் பண்ணி விட்டோமே என்று வருத்தம் தெரிவிப்பார்கள்.

அதுபோலத்தான் நடிகை பாலாம்பிகா பல வருடங்கள் இது தனக்கு சினிமா துறையில் மிஸ் ஆன படம் குறித்து வேதனையோடு பேசி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த பாலாம்பிகா வேறு யாரும் இல்லை பழம்பெறும் இயக்குனரான கே எஸ் கோபாலகிருஷ்ணரிடம் உதவியாளராக இருந்த ராமகிருஷ்ண சாமி என்பவரின் மகள் தான்.
அதுபோல பாலாம்பிகா நடிகர் முரளி நடித்த பாலம் என்ற திரைப்படத்தில் முரளிக்கு தங்கை கேரக்டரில் நடித்துதான் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். அந்த திரைப்படத்தில் கண் தெரியாத கேரக்டரில் நடித்திருப்பார். அதற்கு பிறகு பாட்டுக்கு ஒரு தலைவன், திருமதி பழனிச்சாமி போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

திரைப்பட வாய்ப்பு குறைய தொடங்கியதும் சீரியல்களில் நடிக்க சென்று விட்டார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த தி கோட் திரைப்படம் வெளியானதும் அந்த திரைப்படத்தை பற்றி தான் இணையத்தில் அதிகமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் இவர் விஜய் குறித்து பேட்டி ஒன்றில் பேசியதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது விஜய்க்கு பிரபலம் கொடுத்த நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு முதலில் பாலாம்பிகை இடம் தான் வாய்ப்பு வந்ததாம்.
ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு கொடுத்து வைக்கல.. சில விஷயங்களுக்காக எல்லாவற்றுக்குமே நாம் ஒத்துக்கொண்டு போக முடியாது. இப்போது நினைத்துப் பார்த்தால் அந்த படத்தில் நானே நடித்திருக்கலாமே என்று தோன்றுகிறது. ஆனால் நாளைய தீர்ப்பு படத்தில் விஜய்யுடன் நடிப்பதற்காக என்னை அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் கூப்பிட்டு இருந்தார். நானும் ரொம்ப சந்தோஷமாகத்தான் அவருடைய ஆபீசுக்கு போனேன்.

அப்போது அவர் விஜயை எனக்கு முதல் முதலாக அறிமுகம் செய்து வைத்தார். இவர் தான் என்னுடைய மகன் என்னுடைய இந்த படத்தில் இவர்தான் ஹீரோ என்று சொன்னார். அப்போது நான் ரொம்ப வெள்ளையாக க்யூட்டாக இருந்தேன். விஜய் கருப்பாக இருந்தார். அவரை பார்த்து இவரா நமக்கு ஜோடி என்று நினைத்தேன். இருந்தும் பரவாயில்லை எஸ்.ஏ. சந்திரசேகர் சார் படத்தில் நடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனாலும் விஜய் இப்போ இருக்கிற மாதிரி அப்போ சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அழகு கிடையாது. பங்க் வைத்திருப்பார். கருப்பா ஒரு மாதிரி மாநிறமாக தான் இருந்தார். இவருடன் நடிக்க வேண்டுமா? என் தலையெழுத்து... என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அது தவறு என்று இப்போ வருத்தப்படுகிறேன். அவருடன் அந்த படத்தில் நான் நடித்திருந்தால் எவ்வளவு பிரபலமாகி இருப்பேன் என்று இப்போதும் பீல் பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று அவர் வருத்தமாக அந்த பேட்டியில் பேசியிருக்கும் நிலையில் இந்த பேட்டி இணையத்தில் அதிகமாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
-
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா? -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள்.. விஜயிடம் கடனாளிகள் ஆனது எப்படி? உண்மையான காரணம் என்ன? -
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
விஜய்யின் சொத்து விவரம் வெளியானது.. ரூ.400+ கோடி சொத்து, வங்கிக் கணக்குகளில் ரூ.370+ கோடி சேமிப்பு












Click it and Unblock the Notifications