Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல நடிகை பானுப்பிரியாவை தூண்டிவிட்ட நடிகர்.. நவரச நாயகன் கார்த்திக் இது மாதிரியா? பிரபலம் பளிச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "இயல்பாகவே நடிகர் கார்த்திக் குழந்தைத்தனமானவர்.. லவ்வபிள் கேரக்டர்.. ரொம்ப ஜாலியா இருப்பார். ஆனால், இந்த ஜாலியே கொஞ்சம் ஓவராகிவிட்டால் ஜோலியை முடிச்சிவிடும்" என்று பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

ஆஸ்கார் மூவிஸ் எம்.பாஸ்கர் அவர்களின் மகன் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றை தந்துள்ளார். கார்த்திக்-பானுப்பிரியாவை வைத்து, சக்கரவரத்தி என்ற படத்தை தாங்கள் தயாரித்தபோது, அதில், ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை Media circle என்ற சேனலுக்கு பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் பேட்டியின் சுருக்கம்தான் இது:

television bhanupriya karthik banupriya


சக்கரவர்த்தி:
"சக்ரவர்த்தி படத்துக்கு கார்த்திக் தேதி தந்துவிட்டார்.. முதல் ஷெட்யூலுக்கு அக்ரிமென்ட்டும் போட்டாச்சு. அதன்படியே முதல்நாள் ஷூட்டிங் துவங்கும்போது கார்த்திக் வரவில்லை. அவருக்கு போன் செய்தாலும், எந்த பதிலும் வரவில்லை. உடனே என் அப்பா கோபப்பட்டு கார்த்திக்கின் மேனேஜருக்கு போன் செய்து கேட்டார். அதற்கு மேனேஜர், "அவர் எங்கே இருக்காருன்னே தெரியல" என்றார்.

உடனே கார்த்திக் எங்கே இருக்கிறார் என்று என்னுடைய அப்பா விசாரித்தார்.. அப்போதுதான், அடையாரில் உள்ள பிரபல மருத்துவமனையில் கார்த்திக் உள் நோயாளியாக அட்மிட் ஆகியிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அந்த ஆஸ்பத்திரிக்கு நானும், என் அப்பாவும் சென்று, ரிசப்ஷனில் கார்த்திக் தங்கியிருந்த ரூம் எது? என்று விசாரித்தோம்.

குளிர் ஜூரம்: அதற்குள் ரூமில் இருந்த கார்த்திக்குக்கு, ரிசப்ஷனிலிருந்து நாங்கள் தேடிவருவதாக தகவல் சொல்லிவிட்டார்கள்.. உடனே கார்த்திக், அங்கிருந்த நர்ஸிடம், குளிர் ஜூரத்துக்காக தனக்கு டிரிப்ஸ் ஏற்ற சொல்லியிருக்கிறார். நானும், அப்பாவும் ரூமுக்குள் சென்றதுமே, "ஏன்ப்பா, நேற்று சாயங்காலம்வரை நல்லா இருந்தியே?" என்றார்.. நைட் எனக்கு ஸ்டாபெர்ரி ஐஸ்கிரீம் தந்துட்டாங்க.. அதனால்தான் ஜூரம் வந்தது என்றார் கார்த்திக்,.

உடனே என் அப்பா, அப்படினா குளிர்ஜூரத்துக்கு ஏன் ரூமில் ஏசி போட்டிருக்கே? என்று கேட்டார். ஏசி போடலேன்னா இன்னும் குளிருதுன்னு சொன்னார் கார்த்திக். பிறகு என்அப்பா, "படத்துக்கு 5 லட்சம் அட்வான்ஸ் வாங்கியிருக்கே.. இன்னைக்கு ஷூட்டிங் தெரியுமா?" என்று கேட்டார்.. இல்லப்பா, ஜூரம் அதிகமாக இருக்கு என்று சொல்லிக்கொண்டே நடுங்கினார்.

தயாரிப்பாளர்கள்:
பொதுவாகவே ஷூட்டிங் போகாமல் இருக்க, தயாரிப்பாளர்களிடம் டிமிக்கி தருவதற்காக கார்த்திக் இப்படித்தான் செய்வார்.. இதுக்காகவே, சென்னையில் அந்த ஆஸ்பத்திரியில், ஸ்பெஷல் டீலக்ஸ் ரூம் ரெடியாக இருக்கும். எப்போ வேணும்னாலும் போய் படுத்துப்பாரு. இதுக்கு டாக்டர், நர்சுக்கெல்லாம் டிரெயின்ங் தந்திருப்பார்.

கார்த்திக் அப்பவே பிரபலமாயிட்டாரு. அதனால நிறைய பேர் இவர்கிட்ட நடிக்கறதுக்காக அட்வான்ஸ் பணம் தருவாங்க. கார்த்திக்குக்கு நடிக்கணும்னும் ஆசை, நடிக்க போகக்கூடாதுன்னும் ஆசை. அத்துடன், சில பழக்கவழக்கங்களுக்கு அடிமையாயிட்டாரு. எதுக்குமே ஒருவர் அடிமையாகிவிட்டால், தன்னையே மறக்க வேண்டிய, தன்னையே இழக்க வேண்டிய சூழல் வந்துவிடும். அந்தவகையில் கார்த்திக் சார் அப்பழக்கவழக்கத்துக்கு அடிமையாகி போயிட்டாரு.

குழந்தைத்தனம்: இயல்பாகவே கார்த்திக் குழந்தைத்தனமானவர்.. லவ்வபிள் கேரக்டர்.. ரொம்ப ஜாலியா இருப்பார். ஆனால், இந்த ஜாலியே கொஞ்சம் ஓவராகிவிட்டால் ஜோலியை முடிச்சிவிடும். இதுல ஹீரோயினை வேற தூண்டிவிட்ருவார்.. அல்லது தன்னுடைய படத்தில் நடிக்கும் முக்கியமான காமெடி நடிகரை தூண்டிவிட்டு, ஷூட்டிங்குக்கு போக வேண்டாம் என்று சொல்லுவார். இதை கார்த்திக்கிடம் மறுத்து பேசும் நடிகைகள், காமெடியன்கள் அப்போது மிகவும் குறைவு.

அப்படித்தான் அந்த படத்தில் பானுப்பிரியாவை தூண்டிவிட்டாரு.. 5 லட்சம் ரூபாய் பானுப்பிரியாவுக்கு அந்த படத்தில் சம்பளம் பேசப்பட்டது. அட்வான்ஸ் 1 லட்சம், முதல் ஷெட்யூல் 1 லட்சம் தந்தாச்சு. 2வது ஷெட்யூலுக்கு 1 லட்சம் ரூபாய்க்கான செக் என் அப்பா தந்தார்.. ஆனால், அதை வாங்க மறுத்தார் பானுப்பிரியா. "உங்க மேல எனக்கு நம்பிக்கையில்லை சார், முழு பேமண்ட்டையும் தந்தால்தான் நடிக்க வருவேன், அதனால நாளைக்கு ஷூட்டிங் வரமாட்டேன்" என்றார்.

பானுப்பிரியா:
உடனே என் அப்பா நேராக வங்கிக்கு சென்று, மீதி பாக்கி 3 லட்சம் ரூபாய்க்கு DD எடுத்து கொண்டார். பிறகு தமிழ் தயாரிப்பாளர் சங்கத்துக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதினார்.

"பணம் கொடுக்கும் முதலாளிகளை, தொழிலாளிகள் நம்பாதபோது, தொழிலாளிகளை எப்படி முதலாளிகள் நம்புவது? முழு பணம் தந்தும் பானுப்பிரியா என்னுடைய படத்தில் நடிப்பார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதனால் அவர் நடித்து, டப்பிங் வரை முடிக்கணும். நான் NOC சர்ட்டிபிகேட் தந்தபிறகுதான், இந்த டிடி-யை பானுப்பிரியாவிடம் தரவேண்டும்" என்று புகார் தந்தார்.

உடனே தயாரிப்பாளர்கள் சங்கம் பானுப்பிரியாவுக்கு போன்செய்து, "உங்கள் முழு சம்பளமும் எங்களுக்கு வந்துவிடடது, சக்கரவர்த்தி படம் நடித்து முடித்ததும் வாங்கி கொள்ளுங்கள்" என்றார்கள்.

மன்னிப்பு: இதனால் பதறிப்போன பானுப்பிரியா, என் அப்பாக்கு போன் செய்து, "சார் தெரியாம பேசிட்டேன், என்னை மன்னிச்சிடுங்க, புகாரை வாபஸ் வாங்குங்க" என்றார். ஆனால் என் அப்பா அதை கேட்கவில்லை. நடித்துவிட்டு பணத்தை பெற்றுக் கொள்ள சொன்னார். இப்படி நடிகைகளையும் தூண்டிவிடுவார் கார்த்திக்" என்று அந்த பேட்டியில் நொந்து போய் சொல்லி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+