ஜெயம் கொண்டான் சூட்டிங்கில் அழுதுட்டே இருந்தேன்.. காரணம் இது! மறக்க முடியாத சம்பவம்.. பாவனா உருக்கம்
சென்னை: நடிகை பாவனா 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் தி டோர் (the door) என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கான ப்ரொமோஷனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தான் நடித்த ஜெயம் கொண்டான் திரைப்படத்தில் நடிக்கும் போது நடந்த சம்பவம் குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார்.
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகிகளில் ஒருவரான பாவனா அஜித் நடித்த அசல் திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதற்கு பிறகு தமிழில் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இவர் எங்கே போனார் என்று இவருடைய ரசிகர்கள் தேடிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

பாவனா பேட்டி
இது குறித்து பல பேட்டிகளிலும் பேசிக் கொண்டிருக்கிறார். அதில் தான் 16 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிக்காத காரணம் என்ன என்றும் கூறியிருக்கிறார். அதில், எனக்கு சில தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது ஆனால் படக்குழுவினருக்கும், எனக்கு சரியான தொடர்புகள் அமையாததால் பல படத்திற்கான வாய்ப்புகள் கை நழுவி விட்டது.
இன்ஸ்டா கமெண்ட்
ஆனாலும் இப்போதும் தமிழ் ரசிகர்கள் என்னை மறக்காமல் நினைவில் வைத்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.. நான் போடும் இன்ஸ்டாகிராம் போஸ்டர்களுக்கு நான் நடித்த திரைப்படங்களில் என்னுடைய கேரக்டர் சொல்லி அதிகமான ரசிகர்கள் எனக்கு கமெண்ட் போடுகிறார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

பாவனா நடித்த ஹிட் படங்கள்
அதுபோல பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலமாகத்தான் அறிமுகமானார். அதற்கு பிறகு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருந்தாலும் தமிழில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
மறக்க முடியாத சம்பவம்
இந்த நிலையில் தன்னுடைய சூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு மறக்க முடியாத சம்பவம் குறித்து பேசி இருக்கிறார். அதில் நான் ஜெயம் கொண்டான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது வீட்டில் இருந்து எனக்கு ஒரு போன் வந்தது. நான் ஆசையாக வளர்த்த நாய்க்குட்டி தவறிவிட்டது என்று சொன்னாங்க. அதைக் கேட்டதும் எனக்கு ரொம்பவும் வருத்தமா இருந்தது.

போனில் வந்த செய்தி
அந்த நாய் என் மீது ரொம்பவும் பாசமாக இருந்தது. அதனால் அது இல்லாமல் நான் எனக்கு எப்படி இருக்க போகிறேன் என்று ஒரு ஏக்கம் எனக்குள் வந்தது. சூட்டிங் ஸ்பாட்டில் நான் அழுது கொண்டிருந்தேன் அந்த நேரத்தில் ஜெயம் கொண்டான் திரைப்படத்திலும் எனக்கு ஒரு நாய் சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பார்த்துவிட்ட கேமராமேன்
கேமரா முன்பு நான் சிரித்த மாதிரி நிற்க வேண்டும் ஆனால் நான் நிஜத்தில் நான் அழுது கொண்டிருந்தேன். கண்ணீரை துடைத்துவிட்டு கேமரா முன்பு நின்றேன். என்னையும் அறியாமல் அந்த காட்சியில் நான் அழுததை கேமரா மேன் பார்த்துவிட்டார். அவர் எதற்காக அழுதுட்டு இருக்கீங்க என்று கேட்டார். நான் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் நடித்து முடித்தேன்.

மறைக்கப்பட்ட கண்ணீர்
நமக்கு ஒரு மன கஷ்டம் இருக்கிறது என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அதை காட்ட முடியாது. காரணம் நம்முடைய மனநிலைக்கு ஏற்ப நடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டால் அன்று பலருடைய சம்பளம் கட்டாகிவிடும். அது அவர்களுடைய குடும்பத்திற்கு ரொம்பவும் கஷ்டத்தை ஏற்படுத்தும். இதனால் நான் அந்த காட்சியில் நடித்து முடித்து விட்டேன். அந்த சூட்டிங் என்னால் மறக்க முடியாது.
பலருடைய கூட்டணி
அதுபோல ஜெயம் கொண்டான் திரைப்படத்தில் இடம்பெற்ற நான் வரைந்து வைத்த ஓவியம் பாடல் இப்போதும் பலருடைய ஃபேவரைட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும். அந்த படத்தில் நடிகர் வினய் தான் கதாநாயகனாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக பாவனா வருவார். அதுபோல சந்தானம், விவேக் என்று பலர் காமெடி கூட்டணியாகவும் இந்த திரைப்படம் இருக்கும்.
உங்கள் கருத்து
இந்த படத்தில் வினய் மற்றும் பாவனா அடிக்கடி சண்டை போடுவது போல காட்சிகள் தான் இருக்கும். ஜெயம் கொண்டான் திரைப்படத்தை நீங்க பார்த்திருக்கீங்களா? அந்த திரைப்படத்தில் பாவனாவின் நடிப்பு உங்களுக்கு பிடிக்குமா? இல்லை பிடிக்காதா? 16 வருஷம் கழிச்சு இப்போ பாவனா மீண்டும் தமிழில் நடிக்க வந்திருக்கிறார் இது பற்றி உங்கள் கருத்து என்ன பாஸ்?
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications