மீண்டும் சீரியலில் என்ட்ரி ஆகும் நடிகை பாவனி.. அதுவும் பிரபல 2வது பாகம் சீரியலா? இதை கவனிச்சீங்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்த நடிகை பாவனி மீண்டும் தான் நடிக்க தொடங்கி இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பாவனி சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வந்திருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டு கடைசி நாள் வரைக்கும் அந்த நிகழ்ச்சியில் இருந்தார்.

இந்த நிலையில் அவர் விஜய் டிவியில் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வரும் சீரியலின் இரண்டாவது பாகத்தின் கதையில் நடிக்க இருக்கிறாரா? என்ற கேள்விகள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் பாவனி ரெட்டிக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. இவர் இணையதளத்தை பயன்படுத்தும் பலருக்கும் பரிட்சயமானவராக தான் இருக்கிறார். சின்னத்திரையிலும் பல வீட்டு பெண்கள் இப்படி ஒரு மருமகள் வேண்டும் என்று நினைத்திருந்த நிலையில் இளைஞர்கள் மத்தியிலும் இவர் போட்டோ சூட் மூலமாக பிரபலமாகவே இருந்து வருகிறார்.

தமிழில் முதல்முறையாக சின்னதம்பி சீரியலில் நடிக்க தொடங்கிய பாவனி அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல சீரியல் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் இவருக்கு இளைஞர்களின் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் தன்னுடைய காதல் கணவரின் மரணம், அதற்கு பிறகு தான் படும் கஷ்டங்கள் குறித்து பேசி இவர் பலருடைய அனுதாபங்களை பெற்றிருந்தார்.
ஆனாலும் போகப்போக பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் பிரியங்காவோடு சேர்ந்து விளையாடுவது, ஆரம்பத்தில் தாமரையுடன் நட்பாக இருந்து பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மோதல்கள் என்று அந்த நேரத்தில் அதிகமான ரசிகர்கள் இவரை பாராட்டியும் திட்டியும் வந்தனர்.
புது வீட்டை விடுங்க.. பிக் பாஸ் பாவனி, அமீர் சொன்ன குட் நியூஸ்..அந்தப் புகைப்படத்தில் கவனிச்சீங்களா?
அதே நேரத்தில் அந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியான அமீர் இவரை காதலிக்கிறேன் என்று பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்ததார். அப்போது பாவனி அவரை தம்பி என்று அழைத்து வந்தார். ஆனால் அதற்கு பிறகு பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து கலந்து கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் டைட்டில் ஜெயித்ததும் அந்த நாளில் தன்னுடைய காதலை instagram மூலம் அனைத்து ரசிகர்களுக்கும் தெரியப்படுத்திருந்தார்.

அதற்குப் பிறகு இருவரும் ஜோடியாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் காதலர்களாகவே நடித்திருந்தனர். அதைத் தொடர்ந்து இப்போது இருவரும் ஒரு சில ஷார்ட் பிலிம் களிலும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பாவனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மீண்டும் திரும்பி விட்டேன் என்று சொல்கிற மாதிரி ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது இவர் சீரியலில் மீண்டும் நடிக்க போகிறாரா? அல்லது சினிமாவில் நடிக்கப் போகிறாரா? என்ற கேள்விகளை குவித்து வருகிறது.

அதே நேரத்தில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் முதல் பாகம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வரும் இந்நிலையில் இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அந்த சீரியலில் தான் பாவனி நடித்துக் கொண்டிருக்கிறாரா? என்ற கேள்விகளும் அதிகமாக குவிந்து வருகிறது. அதே நேரத்தில் இவர் பாவாடை தாவணியில் கஷ்டப்பட்ட பெண் போல இருக்கும் நிலையில் எந்த மாதிரி கேரக்டரில் இவர் நடிக்கப் போகிறார் என்ற கேள்விகள் குவிக்கிறது. ஆனால் அது குறித்து பாவனி எந்த விளக்கமும் கொடுக்காமல் இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
பிரதமர் நடித்த ஒரே படம் அமைதிப்படை தான்.. அதுவும் இந்த காட்சியை மறக்க முடியுமா? சத்யராஜ் சர்ச்சை பேச்சு -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
Happy Raj Review: ஹேப்பி ராஜ் கதை இதுதான்.. ஆனால் இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ -
பட விழாவில் ஜனநாயகன் மற்றும் துரந்தர் படத்தை விமர்சித்த வெற்றிமாறன்.. இவ்வளவு ஓபனா பேசிட்டாரே! -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
சிறகடிக்க ஆசை: கொடூரத்தின் உச்சத்துக்கு சென்ற விஜயா.. மயங்கி விழுந்த ரோகிணி! முத்து வீட்டுக்கு வந்த நபர் -
இந்தியன் பாகிஸ்தானில் உளவாளியானால் ஹீரோ.. அவங்க இங்க வந்தா தீவிரவாதியா? துரந்தர் பற்றி அமீர் சர்ச்சை பேச்சு -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications