திருமண வாழ்க்கையில் வந்த கஷ்டம்.. இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல! நடிகை சாந்தினி உருக்கம்
சென்னை: சீரியல் மற்றும் சினிமாக்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சாந்தினி டான்ஸ் மாஸ்டர் நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
என்னதான் திறமையும், உழைப்பும் இருந்தாலும் ஒரு சிலருக்கு தான் அதற்கு சரியான வாய்ப்பும் அங்கீகாரமும் கிடைக்கிறது. அதுபோல சினிமாவில் எப்படியாவது தன்னுடைய பெயரை நிலை நாட்ட வேண்டும் என்று பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை சாந்தினி. இவர் கல்லூரி பருவத்திலேயே சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்.

பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படங்கள் பெரிய அளவில் அவருக்கு வெற்றி கொடுக்கவில்லை. அதுபோல ஜீ தமிழில் ஒளிபரப்பான சீரியல்களிலும் நடித்திருந்தார். அதுபோல நடிகர் நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நந்தா வேறு யாரும் இல்லை டான்ஸ் மாஸ்டர் மட்டுமல்லாமல் ஜீ தமிழில் பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் ரச்சிதா மகாலட்சுமி மற்றும் பாலாஜி முருகதாஸ் நடித்த ஃபயர் திரைப்படத்தில் சாந்தினி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து பேசும்போது தன்னுடைய குடும்ப வாழ்க்கை குறித்தும் சாந்தினி பேசியிருக்கிறார்.

அதில் எங்களுக்கு 2018 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. ஆனால் ஒன்றரை வருஷம் முன்னாடியே எங்க கல்யாணத்திற்கு எல்லாம் நாங்க பிளான் பண்ணி செட் பண்ணினோம். அந்த டைம்ல நான் நடிச்ச படங்கள் ரிலீஸ் ஆச்சு. படம் ஒருவேளை அதற்கு முன்பு ரிலீசாகி இருந்தால் நான் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு போவது பற்றி ஏதாவது யோசித்து இருப்பேன்.
ஆனால் கடவுளோட திட்டம் வேற மாதிரியாக இருந்தது. இப்போ அடுத்தடுத்து படம் ரிலீஸ் ஆச்சுன்னா நமக்கான எதிர்பார்ப்பு ஒரு மாதிரி இருக்கும். ஆனா கல்யாணமான டைமில் படம் ரிலீஸ் ஆச்சுன்னா நம்மள பார்க்கிற விதமே வேறு மாதிரியா இருக்கும். இதனால் என்னுடைய கேரியர் பாதிக்முன்னு நினைச்சேன். இந்த காரணத்தால என் கல்யாணத்தை நான் இன் செக்யூரா ஃபீல் பண்ணுனேன்.

ஆனாலும் நான் என்னுடைய கல்யாணத்தை ரொம்ப என்ஜாய் பண்ணுனேன். ஏன்னா அது எனக்கு திடீர்னு எல்லாம் நடக்கல, ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த வாழ்க்கை நாம ஒரு விஷயத்தை லவ் பண்ணா இந்த உலகம் நமக்கு நிறைய விஷயங்களை திருப்பி கொடுக்கும் அப்படி எனக்கு கொடுத்தது தான் நந்தா. அவர் என் கேரியருக்கு ரொம்ப சப்போர்ட் பண்றாரு.
நானும் என் கணவர் நந்தாவும் எங்க தொழில் பற்றி அதிகமா பேசிக்க மாட்டோம். ஆனாலும் அவர் என் கேரியர்காக நிறைய சப்போர்ட் பண்றாரு. நான் இன்ஸ்டாகிராமில் ரொம்ப கிளாமரா போட்டோ சூட் நடத்துறேன் என்று அதிகமான கமெண்ட் வரும். ஆனால் அதற்கெல்லாம் நந்தா கோபப்பட்டது கிடையாது.

நான் நடிச்ச படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. இது எனக்கு வருத்தமா இருக்கு. என்னதான் நாம திறமையை காட்ட வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது என்று அந்த பேட்டியில் உருக்கமாக சாந்தினி பேசியிருக்கிறார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications