எதிர்நீச்சல் சீரியலில் அறிமுகமாகும் நடிகை தேவயானி.. இனி கதை இப்படித்தான் மாறப்போகிறதாம்..?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகை தேவயானி அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கெஸ்ட் ரோலில் நடிகை தேவயானி அறிமுகமாக இருக்கிறாராம்.
இந்த சீரியலின் கதை ஸ்லோவாக சென்று கொண்டிருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியல் பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக இருந்து வரும் சீரியலாகவே பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஆனாலும் சில மாதங்களாக இந்த சீரியலில் தொடர்ந்து ஆதிரை திருமண எபிசோடுகள் மட்டுமே காட்டப்பட்டு வருவது பலருக்கும் அலுப்பாக இருப்பதாக கருத்து கூறி வருகின்றனர்.
எதிர்நீச்சல் சீரியலில் பெண்கள் அடக்கி ஆளும் ஆண்களுக்கு எதிராக சுயமாக முடிவெடுத்து எதிர்நீச்சல் போட போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு இந்த சீரியலுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இந்த சீரியலில் ஜனனி கேரக்டர் குணசேகரனை எதிர்த்து பேசி பல அதிரடியான முடிவுகளை எடுத்து வந்தார். ஆனால் தற்போது தொடர்ந்து இந்த சீரியலில் கல்யாண எபிசோடுகளும் அதற்காக வரும் தடங்கல்கள் மட்டுமே இருந்து வருவது பலருக்கும் வெறுப்பாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதுபோல அப்பத்தாவின் 40% ஷேர் வைத்து புதியதாக ஏதாவது முயற்சி செய்வார்கள் என நினைத்துக் கொண்டிருந்தால் இதை சுற்றியே கதை இழுத்துக் கொண்டு இருப்பது பலருக்கும் பிடிக்கவில்லை என்று கூறிவரும் நிலையில் தற்போது இந்த சீரியலில் நடிகை தேவயானி கெஸ்ட் ரோலில் அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே அப்பதான் மருத்துவமனையில் இருக்கும் நிலையில் டாக்டராக ஒரு வேலை அறிமுகமாகலாம் என எதிர்பார்ப்பு இருக்கின்றது.

அதுமட்டுமல்லாமல் பலருடைய ரோல் மாடலாக இந்த சீரியலில் கேரக்டர்கள் இருந்து வருகின்றனர். அவர்களில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் இவர்கள் சண்டை போடுவதை பார்த்து நிஜ வாழ்க்கையிலும் இதையே தொடர்ந்து விடக்கூடாது என்றும் பொது இடத்தில் இப்படி எல்லாம் அநாகரிகமாக நடக்கக்கூடாது என்றும், என்ன தான் பிரச்சனையாக இருந்தாலும் இப்படியா கதாநாயகிகளே பொது இடத்தில் அதுவும் மருத்துவமனையில் சண்டையிட்டுக் கொண்டு இருப்பார்கள் என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதுபோல அப்பத்தா கோமா நிலைக்கு சென்றதை ஏற்றுக்கொள்ள முடியாத ஜனனி மருத்துவமனையில் செய்யும் செயல்கள் பார்ப்பதற்கு நடிப்பு தன்மையாக தெரிகிறது என்றும்,இந்த சீரியலில் இதுவரைக்கும் இந்த அளவு நடிப்பாக எந்த கேரக்டரும் தெரிந்தது இல்லை. இப்போது கேரக்டர் வித்தியாசமாக இருக்கிறது என்று சிலர் பீல் பண்ணி வரும் நிலையில் இனி நடிகை தேவயானி அறிமுகமான பிறகு இதுவெல்லாம் மாற வாய்ப்பு இருக்குமா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications