“சூலம்” சீரியல் பிரபலத்தை காதலிச்சேன்.. 2 வருஷம் பழகிட்டு வேண்டாம்னு சொன்னாரு! நடிகை தாரணி ஓபன்
சென்னை: விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் என்று முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை தாரணி தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை குறிப்பு சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருந்தார். அதில் தான் "சூலம்" சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது காதல் ஏற்பட்டு, அதனால் வந்த பிரச்சனை குறித்தும் தாரணி பேசி இருந்தார்.
நடிகை தாரணி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி முக்கிய கேரக்டரில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் நடிகர் கமல்ஹாசன் உட்பட முன்னணி நடிகர்களின் தங்கையாகவும் நடித்திருக்கிறார். உன்னால் முடியும் தம்பி என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தாரணி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதற்கு பிறகு இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் வெளியாகவில்லை. அது இப்ப வரைக்கும் எனக்கு வருத்தம் ஏற்படுகிறது என்று தாரணி பேசி இருக்கிறார்.

வடிவேலு காமெடி
தாரணி வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். அதிலும் ஒரு திரைப்படத்தில் வடிவேலு தாரணியின் புடவை முந்தானையை பிடித்துக் கொண்டு "மாலா.. மாலா" என்று சுற்றிவரும் காமெடி இப்ப வரைக்கும் மீம்ஸ்களில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தாரணி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய காதல் திருமண வாழ்க்கை குறித்து பேசி இருந்தார்.
சூலம் சீரியல் பிரபலம்
அதில் தாரணி பேசும்போது, நான் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும் அதற்குப் பிறகு எனக்கு தங்கை கேரக்டரில் அதிகமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனால் நான் சீரியலில் நடிக்க தொடங்கி இருந்தேன். அந்த நேரத்தில் நான் பிஸியாக சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது "சூலம்" சீரியலிலும் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த சீரியல் முழுக்க குற்றாலம் பக்கத்தில் சூட்டிங் செய்யப்பட்டது. அந்த சீரியலை இயக்கியது நடிகர் இளவரசு தான்.
காதல் பிரச்சனை
அவர் துணையாக தான் என்னுடைய கணவர் வேலை பார்க்க வந்தார். என்னுடைய கணவர் இளவரசுவின் நண்பர். இளவரசு வேறு ஏதாவது சூட்டிங் அல்லது தவிர்க்க முடியாத இடங்களுக்கு போகும் போது என்னுடைய கணவர் இளவரசு வேலைகளை பார்ப்பார். அப்போது எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நான் பிராமின் குடும்பத்தை சேர்ந்தவர், அவர் வேறு வகுப்பை சார்ந்தவர். இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்துக் கொண்டிருந்தோம்.
கோபத்தில் எடுத்த முடிவு
ஆனால் எங்கள் காதலுக்கு இரண்டு குடும்பத்திலுமே எதிர்ப்பு வந்ததால் என்னுடைய கணவர் எங்க வீட்டில் வேண்டாம் என்று சொன்னால் என்னால் எதுவும் செய்ய முடியாது பிரிஞ்சுடலாம் என்று சொன்னாரு. எனக்கு கோபம் வந்து அவரை ரொம்ப திட்டிட்டேன். அப்போ இப்பவே பிரிஞ்சு போயிடலாம் என்று சொன்னேன் அதற்குப் பிறகு அவர் குடும்பத்திடம் பேசி பார்த்து பல போராட்டங்களுக்கு மத்தியில் தான் எங்களுடைய கல்யாணம் நடந்தது என்று அந்த பேட்டியில் தாரணி பேசி இருக்கிறார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications