வெளியே கவர்ச்சி, உள்ளே அழுகை.. தவறான ஊசியால் நடந்த கொடுமை .. காரணம் இவங்கதான்.. டிஸ்கோ சாந்தி எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை டிஸ்கோ சாந்தி பல வருடங்கள் கழித்து தன்னுடைய வாழ்க்கையில் தனக்கு நடந்த சோகங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதில் தன்னுடைய முதல் கணவர் நடிகர் ஸ்ரீஹரி எப்படி இறந்தார் என்பது பற்றியும் கண்ணீர் மல்க பேசி இருக்கிறார்.

Actress Disco Shanthi Tragedy in Life

அதோடு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சோகங்கள் அதில் தான் பட்ட வேதனைகள் பற்றியும் டிஸ்கோ சாந்தி பேசியிருக்கிறார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் டிஸ்கோ சாந்தியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இவருடைய உண்மையான பெயர் சாந்தகுமாரி தான். இவர் 1985 ஆம் ஆண்டு தமிழில் வெளியான வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவிற்கு அறிமுகமானாராம். அதற்குப் பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் இவருடைய டான்ஸ் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆகி இருந்தது.

ஆனாலும் பெரும்பாலும் திரைப்படங்களில் கவர்ச்சியான பாடல்களுக்கு இவர் டான்ஸ் ஆடி இருக்கிறார். அதோடு பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் இவர் நடித்திருக்கிறார். அதோடு பாலிவுட்டிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தான் டிஸ்கோ சாந்தி நடிகர் ஸ்ரீஹரி என்பவரை 1996 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.

ஆனால் உடல் நல குறைவால் ஸ்ரீஹரி 2013 ஆம் ஆண்டில் இறந்துவிட்டார். ஸ்ரீஹரி நடிகர் விஜய் போன்ற முன்னணி நடிகர்களோடு பல திரைப்படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்தவர் தான். இந்த நிலையில் தன்னுடைய குடும்ப வாழ்க்கை குறித்தும் சினிமா பயணம் குறித்தும் டிஸ்கோ சாந்தி ஒரு வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில் குடும்ப வறுமைக்காகத்தான் நான் சினிமாவில் விருப்பம் இல்லாமல் நடிக்க தொடங்கினேன். ஆரம்பத்தில நான் கதாநாயகியாக தான் சினிமாவில் நடிக்க போயிருந்தேன். ஆனால் என்னை கவர்ச்சி நடிகையாக திரையுலகம் மாற்றி விட்டது. இதனை நினைத்து நான் ஆரம்ப காலகட்டத்தில் அதிகமாக அழுது புலம்பி இருக்கிறேன்.

ஒரு சில நேரங்களில் சினிமா வேண்டாம் என்று கூட முடிவெடுத்திருக்கிறேன். ஆனால் அப்போ இருந்த வறுமை குடும்ப சூழ்நிலைக்கு காரணமாக வேறு வழி இல்லாமல் தான் நான் சினிமாவில் நடித்தேன். அதோடு என்னுடைய நடனத்தை பார்த்து நானே பல முறை முகம் சுளித்து போய் இருக்கிறேன். அதனால் என் மீது எனக்கு கோபமும் வேதனையும் வந்திருக்கிறது.

அப்போதெல்லாம் என்னுடைய படங்களை பார்க்க வேண்டாம் என்று என்னுடைய குடும்பத்தினரிடம் நானே சொல்லி இருந்தேன். நாங்கள் எங்கள் குடும்பத்தோடு சேர்ந்து அதனால் படமும் பார்ப்பதே இல்லை. அதுபோல ஸ்ரீஹரியும் நானும் நல்ல நண்பர்களாக இருந்தோம். ஒருமுறை கோவிலில் நான் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஸ்ரீஹரி எனக்கு தெரியாமலேயே என் காலத்தில் தாலியை கட்டிவிட்டார்.

நான் ஏற்கனவே எனக்கு கல்யாணம் ஆனால் தாலியை உண்டியலில் போடுவதாக வேண்டி இருந்தேன். அதனால் அவர் கட்டிய தாலியை உண்டியலில் போட்டுவிட்டு பிறகு என்னோடு பிறந்தவர்களுக்கு எல்லாம் திருமணம் செய்து வைத்து குடும்பத்தை ஒரு நிலைக்கு கொண்டு வந்த பிறகு பெற்றோர் சம்மதத்தோடு எங்களுடைய திருமணம் நடந்தது.

எங்களுடைய திருமண வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் ஸ்ரீஹரிக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போயிருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்திருந்தோம். அப்போது அவர் உடல்நிலை தேறி நன்றாக மீண்டு வந்தார். ஆனால் மருத்துவர்கள் அவருக்கு போட்ட ஊசியால் மூக்கு வாயெல்லாம் இரத்தம் வாந்தி எடுத்து என்னுடைய கணவர் உயிரிழந்து விட்டார்.

இது பற்றி நான் மருத்துவமனையில் விசாரித்த போது அவர்கள் எங்களுடைய தவறால் இது நடந்து விட்டது எங்களை மன்னித்து விடுங்கள் என்றும் உங்களுக்கு தேவையான பணத்தை தருகிறோம் என்றும் சொன்னார்கள். எனக்கு எவ்வளவு பணம் தந்தாலும் என்னுடைய கணவரை திருப்பித் தர முடியாது என்று சொல்லி மருத்துவ செலவு மட்டும் கட்டிவிட்டு என் கணவரை தூக்கிக்கொண்டு வந்தோம்.

என் கணவர் இறப்பதற்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்னுடைய மகளும் இறந்துவிட்டார். அவருடைய பெயரில் என் கணவர் ஒரு அறக்கட்டளையை நடத்தி வந்தார். தற்போது அந்த அறக்கட்டளையை நான் தான் கவனித்து வருகிறேன். அது போல இப்போது என்னுடைய மகன்கள் தான் எனக்கு பக்க பலமாக இருக்கிறார்கள் என்று அந்த பேட்டியில் டிஸ்கோ சாந்தி பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+