வயிற்றில் குழந்தையோடு நடிகை திவ்யா பட்ட கஷ்டம்.. மடியில் குழந்தைக்கு பெயர் வைத்து.. சொன்ன வார்த்தை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகி திவ்யா ஸ்ரீதர் தன்னுடைய குழந்தைக்கு இன்று பெயர் வைத்திருக்கிறார்.
திவ்யா ஸ்ரீதர் அவருடைய கணவர் அர்ணவ்க்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை பலருக்கும் தெரிந்ததுதான்.

வயிற்றில் குழந்தையோடு திவ்யா ஸ்ரீதர் இருக்கும்போது அவருடைய கணவர் அர்ணவ் கருத்து வேறுபாடால் பிரிந்து இருந்த நிலையில் இப்போது தனியாகவே குழந்தையை வளர்த்து வரும் திவ்யா குழந்தைக்கு பெயர் வைத்திருப்பதற்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
சின்னத்திரையில் சில மாதங்களுக்கு முன்பு குடும்பப் பிரச்சனையின் காரணமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திவ்யா ஸ்ரீதர் மற்றும் அவருடைய கணவர் அர்ணவ் பலருக்கும் பரீட்சையம் ஆகிவிட்டனர். இவர்கள் இருவரும் முன்னணி சீரியல்களில் நடித்து வருகின்றனர். அதுவும் திவ்யா ஸ்ரீதர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி என்ற சீரியலில் நடிக்கும் போது தன்னோடு நடித்த அர்ணவை காதலித்து சில வருடங்களுக்குப் பிறகு ரகசியமாக திருமணமும் செய்து இருக்கிறார்.
அதே நேரத்தில் அர்ணவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தங்களுடைய திருமணத்தை பற்றி புகைப்படங்களை வெளியிட்டு திவ்யா ஸ்ரீதர் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து சில நாட்களில் தான் கர்ப்பமாக இருப்பதையும் தெரிவித்து இருந்தார். ஆனாலும் அதற்குப் பிறகு தான் இவர்கள் இருவருக்கும் இருக்கும் குடும்ப பிரச்சனை வெளி உலகத்திற்கு தெரிய ஆரம்பித்தது.

திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருக்கும் தன்னை அர்ணவ் அடித்து துன்புறுத்துவதாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தார். அதன் காரணமாக அர்ணவ் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து அர்ணவ் ஏற்கனவே பல பெண்களோடு தொடர்பில் இருப்பதாகவும் அவரைப் பற்றி பல ஆடியோக்களை திவ்யா வெளியிட்டு இருந்தார்.
அதுபோல திவ்யா ஸ்ரீதர் வேறு ஒரு நபரிடமும் பேசி இருக்கிறார் என்பது பற்றியான ஸ்கிரீன்ஷாட்களையும் பல குற்றச்சாட்டுகளையும் அர்ணவ் தரப்பிலிருந்து கூறப்பட்டு வந்தது. இப்படியாக இவர்கள் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் திவ்யாவிறக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகும் இவர்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.
இந்த நிலையில் சமீப காலமாகவே இவர்கள் இருவரும் எந்த விஷயங்களையும் இணையத்தில் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் திவ்யா ஸ்ரீதர் தன்னுடைய மகளுக்கு பெயர் வைக்கும் ஃபங்ஷனை நடத்தி இருக்கிறார். தன்னுடைய மகளுக்கு "பிரயுஷி" என்ற பெயர் வைத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து," என்னை ப்ரயுஷி என்று அழையுங்கள்" என்று பதிவு வெளியிட்டிருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி குழந்தையை ஆசீர்வாதம் செய்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications