“சுந்தரி” சீரியல் நடிகைக்கு பள்ளியில் நடந்த நிகழ்வு.. அது என்ன குடத்தில் மஞ்சளா..? மேடையில் செம..!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடிகை கேப்ரில்லா செல்லஸ் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அவர் தான் படித்த பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வீடியோ ஒன்றை தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் நிஜ சுந்தரிக்கு வாழ்த்துக்களும் குவிகிறது.

சினிமாவாக இருந்தாலும் சரி, சின்னத்திரையாக இருந்தாலும் சரி, நடிகைகள் அழகாக இருக்க வேண்டும் கலராக இருக்க வேண்டும் என்று ஒரு மாயை ரசிகர்களிடமும், நடிகர்களிடமும் தொற்றி இருக்கிறது .ஆனால் அதையெல்லாம் உடைத்து எறிந்தவர்களில் கேப்ரெல்லாவும் ஒருவராக இருந்து வருகிறார்.
தன்னுடைய கலர் என்னுடைய திறமையை எந்த விதத்திலும் குறைவு செய்யாது என்பதை கேப்ரெல்லா பலமுறை நிரூபித்து இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் டிக் டாக் மூலமாக சமூக வலைத்தளத்தில் பல்வேறு கவிதை மற்றும் தமிழ் உச்சரிப்பின் மூலமாக இவர் டிக்டாக்கில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

தற்போது சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் கேப்ரெல்லா தனது கணவருடன் கிறிஸ்மஸ் கொண்டாடி இருக்கும் புகைப்படத்தையும் வீட்டில் குடில் வைத்திருக்கும் வீடியோக்களையும் பகிர்ந்து இருக்கிறார். "எழுதியாச்சு படிச்சிடலாமா? என்று இவர் கவிதை எழுதி வெளியிடும் வீடியோக்கள் மிகவும் வைரலானது.
அதுமட்டுமல்லாமல் அப்பா -மகன், அம்மா -மகன், அக்கா -தங்கை, அண்ணன்- தங்கை போன்ற உறவுகளை தனது கவிதை மூலமாக அழகாகவும் தெள்ளத் தெளிவாக தமிழிலும் எடுத்துக் கூறி ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதனாலேயே இவரை அதிகமானோர் பின் தொடர்ந்து வந்தனர்.
கேப்ரெல்லாவிற்கு இன்ஸ்டாகிராமில் மட்டுமே சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கின்றனர். முதல் முறையாக இவருக்கு சன் டிவியில் சுந்தரி சீரியலில் கதாநாயகி ஆக நடித்த வாய்ப்பு கிடைத்ததும் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக ஆதரவு கொடுக்க தொடங்கி விட்டனர்.இந்த நிலையில் இவர் தான் படித்த பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது அங்கு எடுத்த வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். பொதுவாக வாழ்க்கையை நாம் ஆரம்பிக்கும் இடம் நம்முடைய பள்ளிக்கூடம் தான். அங்கேயே நாம் ஜெயித்த பிறகு கெத்தாக நிற்பது வேற லெவல் தான் என்று அனைவரும் பாராட்டுகின்றனர்.

அதே நேரத்தில் தான் படித்த பள்ளிக்கு கேப்ரெல்லா சிறப்பு விருந்தினராக போகும்போது குழந்தை போல சக குழந்தைகளோடு ஜாலியாக பேசி மகிழ்ந்து கொண்டிருக்கிறார். அதோடு மேடையில் அவர் ஏறும்போது அவருக்கு மஞ்சள் பூசப்பட்ட குடத்தில், மஞ்சள் பூசப்பட்ட தேங்காய் வைத்து ஆரத்தி எடுக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து மேடையில் பேசிய கேப்ரெல்லா, "எல்லாரும் பார்த்து ஏங்குற பருவம் பள்ளிக்கூட பருவம் மட்டும்தான். எல்லோரும் சொன்னாங்க நீங்க பயங்கரமான பட்டாம்பூச்சிகள் என்று, பியூச்சர்ல நீங்க எல்லாம் கழுகு மாதிரி இருக்கணும். பயங்கரமான உயரத்தில் பறக்கணும்" என்று அங்கிருக்கும் குழந்தைகளுக்கு மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவிற்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து கொண்டிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications