Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேன்சரோடு என் போராட்டம்! என் மகள் அனுபவித்த வலி.. வாழ்க்கையில் நடந்த சோதனை! ஓபனாக பேசிய கௌதமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கௌதமி கேன்சர் தனக்கு பாசிட்டிவ் என்று வந்த பிறகு தான் அனுபவித்த கஷ்டம், பிறகு தன்னுடைய மகள் பட்ட வேதனை பற்றி பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார். கௌதமி கடந்து வந்த போராட்டமான வாழ்க்கை பலருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும் வகையில் இருக்கிறது என்று பகிர்ந்து பாராட்டி வருகிறார்கள்.

80ஸ் காலகட்டத்தின் இறுதியிலும் 90ஸ் காலகட்டத்திலும் நடிகை கௌதமி கதாநாயகியாக கலக்கி கொண்டு இருந்தார். இப்ப வரைக்கும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு சீரியல்களிலும் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருந்த செய்தி பலருக்கும் தெரிந்திருக்கும்.

television gautami

தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டபோது தான் எப்படி அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்தேன் என்று பேட்டி ஒன்றில் கௌதமி பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், உண்மையில் கேன்சர் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த கேன்சர் நோய் எனக்கு வந்த போது இப்படிப்பட்ட உலகில் நமக்கு இப்படிப்பட்ட நோய் வந்துவிட்டதே! இனி எந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்று எண்ணம் எனக்கு வந்தது. ஆனாலும் அடுத்த நாளை எதிர் நோக்கி நான் காத்திருந்தேன். பொதுவாக ஒரு விஷயத்தை எல்லோரும் செய்ய தவறிவிடுகிறார்கள் நமக்கு இந்த நோய் வராது என்ற ஒரு நம்பிக்கை பலருக்கு இருக்கிறது.

அதே நேரத்தில் நோய் வந்தால் என்ன செய்யலாம் என்று யோசிக்க மறந்து விடுகிறார்கள். நான் எனக்கு சில பாதிப்புகள் வரும்போது நமக்கும் இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று உடனடியாக செக்கப் பண்ணினேன். அதில் எனக்கு பாசிட்டிவ் என்று வந்தபோது நான் உடைந்து போகாமல் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று ஓடிக்கொண்டிருந்தேன்.

புற்று நோய்க்கான முறையான சிகிச்சைகளை எடுத்தேன். ஒரு கட்டத்தில் எனக்கு நோயின் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான தைரியம் கிடைத்துவிட்டது. இதுவும் கடந்து போகும் என்ற உண்மை நிலை புரிய ஆரம்பித்துவிட்டது. நாம் கடந்து போகும் பொழுது நம்முடைய வாழ்க்கை நம் கையில் கிடைக்கும்.

நான் எதையும் நேருக்கு நேராக பேசி பழக்கப்பட்ட குடும்பத்தில் வளர்ந்தவர். ஒருவர் நல்லவர் என்றால் நல்லவர், அவர் கெட்டவர் என்றால் அவ்வளவுதான்.. எனக்கு தெரியும் ஆனால் இந்த உலகில் இரண்டு முகத்தோடு வாழ்கிற நபர்கள் இருக்கிறார்கள். அந்த நபர்களை நான் புரிந்து கொள்வதற்கு எனக்கு கொஞ்ச காலம் ஏற்பட்டது. நான் எப்போதும் கொஞ்சம் கொடுப்பவளாகவே இருந்திருக்கிறேன்.

உண்மையில் எனக்கு யாரிடமும் பெரிய எதிர்பார்ப்பு கிடையாது. என்னுடைய ஒரே எதிர்பார்ப்பு நீ நல்ல மனிதனாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். உங்களுக்கு என்னுடைய வட்டத்தில் இருக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தால் தாராளமாக இருந்து கொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டிய மரியாதையை நான் கொடுப்பேன். எனக்கு வேண்டிய மரியாதையை நீங்கள் கொடுங்கள்.

உங்களுக்கும், உங்களை சார்ந்தவளுக்கும் இடையே ஒரு மைய ரேகை இருக்கும். அந்த ரேகையை நீங்களும் தாண்ட வேண்டாம். அவர்களையும் தாண்ட விட வேண்டாம். ஆரம்ப காலத்தில் நான் அந்த ரேகையை அதிகமாக தாண்டி அதிகமாக என்னை கெடுத்துவிட்டேன். ஆனாலும் எனக்கு அது ஒரு வாழ்க்கை பாடமாக அமைந்தது.

பிறகு அதை சரி செய்து கொண்டேன். எனக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்ட போது என்னுடைய மகள் ரொம்பவும் பயந்து போனாள். நான் என்னுடைய மகளை சின்ன வயதிலிருந்து கொஞ்சி வளர்ப்பது கிடையாது. இதை இப்படி செய்ய வேண்டும், அதை அப்படி செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பேன்.

பிறகு என்னுடைய மகளோடு நான் மனம் விட்டு பேசுவேன். எனக்கு புற்றுநோய் பாதித்த போது நீ இப்படித்தான் அடுத்த கட்டத்தில் வாழ வேண்டும் என்று அவருக்கு அறிவுரைகளை சொன்னேன். ஒரு பெண் எந்த விஷயத்திலும் தனக்கானதை தானே செய்ய வேண்டும் என்ற சிந்தனை எனக்கு உண்டு. அதனால் தான் நானே கார் ஓட்டி படித்து விட்டேன்.

ஒரு கட்டத்தில் எனக்கு என்று யாரும் இல்லாமல் நான் தனியாக வாழ்க்கையை தொடங்கிய போது எனக்கு அது துணையாக இருந்தது. தனியாக இருக்கும் பெண்கள் கண்டிப்பாக கார் ஓட்டி படித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வேன். அது அவர்களுக்கு பல விதத்திலும் உதவியாக இருக்கும். நான் இப்போது என்னுடைய மகள்களை என்னை விடவும் தைரியமாக வளர்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் என்னுடைய வாழ்க்கையில் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டார்கள் என்று அந்த பேட்டியில் கௌதமி பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+