ரிதன்யா விஷயத்தில் எனக்கு கோபம் வர காரணமே இதுதான்.. அவங்க ரத்தம் சிந்துனாங்க! காயத்ரி ரகுராம் உருக்கம்
சென்னை: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணை கொடுமையில் இறந்த ரிதன்யாவின் மரணம் பற்றி நடிகையும் அரசியல் பிரமுகருமான காயத்ரி ரகுராம் உருக்கமாக பேசியிருக்கிறார். தன்னுடைய வாழ்க்கையிலும் இதே போல துயர சம்பவங்கள் நடந்ததாக அவர் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த ரிதன்யா என்ற 27 பெண்ணின் தற்கொலை சம்பவம் தான் நாட்டையே உலுக்கி இருக்கிறது. அந்த பெண் இறப்பதற்கு முன்பு பேசிய ஆடியோக்கள் கல் நெஞ்சையும் கரைய வைக்க அளவிற்கு வலி நிறைந்ததாக இருக்கிறது. திருமணம் முடிந்து இரண்டு மாதம் கூட ஆகாத நிலையில் அந்தப் பெண் பல கஷ்டங்களையும் வேதனைகளையும் அடைந்ததாக அதில் கண்ணீரோடு பேசி இருக்கிறார்கள்.

ரிதன்யாவின் தற்கொலை குறித்து பல பிரபலங்களும் சாதாரண மக்களும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். 27 வயது ஆன ரிதன்யாவிற்கு கடந்த ஏப்ரல் 11, 2025 ஆம் தேதி தான் கவின் என்பவருடம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ரிதன்யாவிற்கு பெற்றோர் 300 சவர நகையும் சுமார் 70 லட்சம் மதிப்புள்ள ஒரு காரையும் வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கூடுதலாக 200 சவர நகையும் பணத்தையும் கேட்டு தொடர்ச்சியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
வரதட்சனை கொடுமையால் மட்டும் அல்லாமல் உடல் மற்றும் மன ரீதியாக பல கொடுமைகளையும் துன்புறுத்துக்களையும் சகித்துக்கொண்டிருந்தேன் ஆனால் இனி இந்த உலகத்தில் என்னால் வாழ முடியாது என்று சொல்லிவிட்டு அந்த பெண் தற்கொலை செய்து இருக்கிறார். இது குறித்து நடிகையும், அரசியல் பிரமுகருமான காயத்திரி ரகுராம் பேசும் போது என்னுடைய வாழ்க்கையிலும் இதேபோல தானே துயர சம்பவம் நடந்தது.
நானும் திருமண வாழ்க்கையில் என்னால் சகிக்க முடியாத சூழ்நிலை வரும் போதுதான் அதிலிருந்து வெளியே வந்தேன். ஒரு கட்டத்தில் இந்த நரகத்தில் வாழ முடியாது என்று புரிந்த பிறகு தான் நான் விவாகரத்து செய்வதற்காக முடிவெடுத்தேன். அதற்கு முன்பு எப்படியாவது இந்த வாழ்க்கையை சகித்துக் கொண்டு போக வேண்டும், எப்படியாவது வாழ்க்கையில் பிரச்சனைகளை மாற்றலாம் என்றெல்லாம் நினைத்து அட்ஜஸ்ட் பண்ணி பார்த்தேன் ஆனால் எதற்கும் வாய்ப்பில்லை என்ற போதுதான் விவாகரத்து முடிவு எடுத்தேன்.
நான் விவாகரத்து முடிவு எடுத்தது என்னுடைய அப்பாவை ரொம்பவும் வருத்தம் அடையச் செய்தது. நான் விவாகரத்தாகி ஒரு வருடத்திற்குள் என்னுடைய அப்பா இறந்து விட்டார். அதற்கு அவர் இறப்பதற்கு முன்பு என்னுடைய விவாகரத்து செய்தியை கேட்டதுமே அவர் உடைந்து போய் உடல்நல குறைபாடு வந்துவிட்டது. என்னுடைய அப்பா ரத்த கண்ணீர் தான் சிந்துனாங்க. அதனால் தான் நான் ரிதன்யா வழக்கு பற்றி அதிகமா பேசிக்கிட்டே இருக்கிறேன்.
ரிதன்யா தற்கொலை செய்து கொண்டது குறித்து நான் மீண்டும் மீண்டும் பேசுவதற்கு காரணம் அதேபோல சம்பவங்கள் என்னுடைய வாழ்க்கையிலும் நடந்தது நான் வெளியே வந்து இன்றும் இந்த உலகத்தில் போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இனி யாருடைய வாழ்க்கையிலும் அப்படி நடக்க கூடாது என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் காயத்தில் ரகுராம் உருக்கமாக பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications