சிறகடிக்க ஆசை மீனா இந்த டாப் ஹீரோவை தான் கல்யாணம் பண்ண போறாரா? அவரே வெளியிட்ட பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கோமதி பிரியா பற்றிய செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கோமதி பிரியா சமீபத்தில் தனக்கு விரைவில் திருமணம் என்பது போன்று ஒரு போஸ்ட் போட்டு இருந்தார். அதோடு தன்னுடைய வருங்கால கணவர் யார் என்பது போன்று அவர் ஒரு ஹிண்டு கொடுத்து இருக்கிறார். அது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
உண்மையான உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் கண்டிப்பாக ஒரு நாள் வெற்றி கிடைக்கும் என்பதற்கு சாட்சியாக தான் நடிகை கோமதிப்பிரியா இருந்து வருகிறார். கோமதி பிரியாவின் சொந்த ஊர் மதுரை தான். மதுரையில் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த கோமதி பிரியா படிப்பிற்காக சென்னைக்கு சென்றுள்ளார். அதுவும் படிப்பதற்கு போதிய வசதி இல்லாமல் கஷ்டப்பட்ட கோமதி ப்ரியாவிற்கு ஒரு காலேஜில் ஃப்ரீ ஆகவே அட்மிஷன் கிடைத்திருந்தது.

அப்போது இதர செலவுக்காகவே பார்ட் டைமாக வேலை பார்த்துக் கொண்டிருந்த கோமதி பிரியா விஜய் டிவியில் ஆடியன்ஸாக சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் மூலம் அவருக்கு விஜய் டிவியில் சிலருடைய அறிமுகம் கிடைக்க, அதற்கு பிறகு விஜய் டிவி சீரியல்களுக்கு ஆடிஷன்களில் கலந்து கொண்டார். அப்போது சீரியலில் நடிக்க வேண்டும் என்றால் எப்படி உடை உடுத்த வேண்டும், மேக்கப் செய்ய வேண்டும் என்று எந்த விஷயமும் தெரியாமல் ஆடிஷனில் கலந்து கொண்டார். ஆனால் இவரை சில ஆடிஷனில் ரிஜெக்ட் செய்திருக்கிறார்கள்.
அப்போது தான் இவருக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ஓவியா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுபோல விஜய் டிவியில் பாவம் கணேசன் சீரியலிலும் நடித்திருந்தார். அந்த சீரியல் முடிவடைந்த நேரத்தில் தான் இவருக்கு சிறகடிக்க ஆசை சீரியலில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியல் மூலமாகத்தான் இப்போது சின்னத்திரையில் இளவரசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மீனா போல நம்ம வீட்டில் ஒரு பொண்ணு வேணும் என்று பலரது ஆசைப்பட்டாலும் கடந்த வார எபிசோடு பார்த்து மீனாவை பலர் திட்டி வருகிறார்கள். இது சீரியல் கதையாக இருந்தாலும் இவருடைய நிஜ வாழ்க்கையிலும் இவர் ஒரு போராட்டக்காரராகத்தான் இருந்து வருகிறார்.
தன்னுடைய தந்தையின் திடீர் மறைவால் குடும்பமே உடைந்து போய் இருந்த நிலையில் கோமதி பிரியா தான் அந்த குடும்பத்திற்கு மூத்த மகளாக மொத்த குடும்ப சுமையையும் தாங்கிக் கொண்டிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாம் சிறகடிக்க ஆசை சீரியலின் மலையாள வெர்ஷனில் இவர்தான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இப்போது தெலுங்கில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டப்பிங் சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் கோமதி பிரியா கடந்த வாரத்தில் மணப்பெண் அலங்காரத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அப்போது அந்த பதிவின் ஹேஷ் டேக்கில் விரைவில் திருமணம், லவ் என்றெல்லாம் கொடுத்திருந்தார். இதனால் இவருக்கு விரைவில் திருமணமா? என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. அடுத்த நாளிலேயே அதேபோல ஷூட் வீடியோக்கள் சிலவற்றை வெளியிட்டு அதில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் ஜெர்ஸி நான் ரெடி ஆகியாச்சு. கார்த்திகை தான் காணவில்லை. எனக்கு ஏற்ற கார்த்தி எங்கே இருக்கிறார்? என தெரியவில்லை. என்னை தேடி வந்துடுங்க என்று கோமதி பிரியா ஜாலியாக கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

இதை பார்த்ததும் கோமதி பிரியா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்த சிம்புவை தான் காதலிக்கிறாரா? இவரோட தான் திருமணமா? என்றெல்லாம் இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்? ஏற்கனவே இதே போல சீரியல் நடிகை ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு சிம்புவை தான் காதலிப்பதாக பேட்டிகளில் பேசியிருந்தார். அதுவும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இப்போது கோமதி பிரியாவுக்கு சிம்புவுடன் கல்யாணமா? என்று மீண்டும் ஒரு சர்ச்சை பரவி இருக்கிறது. இது குறித்து கோமதி பிரியா எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications