உன் மூஞ்சிக்கு வாய்ப்பானு அசிங்கப்படுத்தினாங்க! அதுவும் அந்த படத்துல! பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா எமோஷனல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா கேரக்டரில் நடிகை ஹேமா நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே முதல் பாகத்தில் நடித்தவர் தான். இந்த நிலையில் தான் சினிமாவில் கமிட்டான போது நடந்த அவமானங்கள் குறித்து எமோஷனலாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

பொதுவாக பல நடிகைகள் திரைப்படங்களில் அறிமுகமாகி அங்கு பெரிய அளவில் அவர்களுக்கு பிரபலம் கிடைக்காததால் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கிறார்கள். ஆனால் சின்னத்திரையில் அவர்களே எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் அவர்களை கொண்டாடுகிறார்கள்
அந்த வகையில் ஒருவர்தான் நடிகை ஹேமா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாகத்தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிரபலமான மீனா
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகத்தில் பாதியில் தான் மீனாவாக ஹேமா அறிமுகமானார். ஆனால் பிறகு மீனா மற்றும் ஜீவா கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. என்ன நினைத்தாலும் டக்கென்று பேசிவிடும் கேரக்டரில் மீனாவாக ஹேமா ரசிகர்களின் மனதில் பதிந்து இருந்தார். இந்த நிலையில் முதல் பாகம் முடிவடைந்ததும் இரண்டாவது பாகத்திலும் மீனா கேரக்டரில் ஹேமா நடித்துக் கொண்டிருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா
முதல் பாகத்தைப் போலவே இரண்டாவது பாகத்திலும் இவருடைய நடிப்பை ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஹேமா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது சினிமா துறையில் தான் பட்ட அவமானங்கள் குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார். அதில் நான் சின்னதம்பி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு திரைப்படத்தில் கமிட் ஆகி இருந்தேன்.

மறக்க முடியாத வார்த்தை
அப்போ சில வாரங்கள் கழித்து சம்பள விஷயத்தை மாற்றம் செய்திருந்தாங்க. அதை பார்த்ததும் எனக்கு இந்த சம்பளத்தில் நடிக்க முடியாது என்று தோன்றியது. அதனால் நான் அவர்களிடம் இந்த சம்பளம் கட்டுப்படி ஆகாது என்று சொல்லிவிட்டேன். அதற்கு அவங்க உன் மூஞ்சிக்கு வாய்ப்பு கொடுக்கிறதே பெருசு. இதுல சம்பளம் உனக்கு இந்த போதாது என்று சொல்லுவியா? என்று கேட்டார்கள்.

அவமானம்
எனக்கு கோபம் வந்துடுச்சு என் மூஞ்சிக்கு அந்த வாய்ப்பு பெருசுன்னு உங்களுக்கு தோணுச்சுன்னா வேற எந்த மூஞ்சிக்கும் அந்த வாய்ப்பு செட்டாகாது என்று நான் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதற்குப் பிறகு அந்த கேரக்டரில் வேற ஒரு நடிகை கமிட்டாகி விட்டதாக சொன்னார்கள். ஆனால் சில மாதங்களில் அந்த படம் டிராப் ஆகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். இதுபோல சில அவமானங்களும் நடந்து இருக்கிறது என்று ஹேமா பேசியிருக்கிறார்.

நிஜத்திலும் கர்ப்பம்
அதுபோல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதல் பாகத்தில் ஹேமா நடிக்கும் போது நிஜத்தில் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் சீரியலிலும் கர்ப்பமாக இருப்பது போன்று காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தது. அதுபோல ஹேமாவிற்கு குழந்தை பிறந்தபிறகு சீரியலில் இருந்து விலகி விட வேண்டும் என்று முடிவெடுத்தாராம்.

சக நடிகர்கள் ஒத்துழைப்பு
ஆனால் குடும்பத்தில் இருந்தவர்கள் கொடுத்த ஒத்துழைப்பால் தான் நான் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடிந்ததாம். அதுபோல சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் என்னிடம் நல்ல கேரிங்காக பழகி வந்தார்கள் அதனால் என்னால் தொடர்ந்து அந்த சீரியலில் நடிக்க முடிந்தது என்றும் ஹேமா பேசியிருக்கிறார்.

-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications