மிஸ்ஸான ஜோதிகா.. இங்கேயுமா? அதுவிடுங்க, சூர்யாவுக்கு சக்ஸஸ் தரும் "ரெட்ரோ".. ரசிகர்கள் குஷி: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் "ரெட்ரோ".. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது சென்னையில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றுள்ளது. இந்த படம் சூர்யாவுக்கு நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

கங்குவா பட தோல்வி நேரத்தின்போது, KING 24x7 என்ற சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அதில், "கங்குவா நல்லாயில்லை என்று அனைத்து விமர்சனங்களும் சொல்லிவிட்டன. அதனால் படத்தின் வசூலை பெறவில்லை.. சூர்யாவுக்கு ஏழரை சனி தொடங்கிவிட்டதாக சிலர் சொல்கிறார்கள்.. அதேபோல, சூர்யாவுக்கு 2 பெரிய நடிகர்கள் செய்வினை வைத்துவிட்டதாகவும், சிலர் சொல்கிறார்கள்..

Television Surya Retro

அரசியல் கட்சிகள்

சில அரசியல் கட்சிகளும் சூர்யாவுக்கு எதிராக சதி செய்வதாக படத்தின் தயாரிப்பாளரும், படத்தின் புரமோட்டருமான தனஞ்செயன் குற்றஞ்சாட்டியிருக்கிறார் இதையடுத்தே, சூர்யாவும், ஜோதிகாவும் "சண்டியாகம்" செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். யாராவது செய்வினை செய்துவிட்டால், எதிர்ப்புகளை முறியடிக்க செய்வதுதான் இந்த சண்டியாகம்" என்றெல்லாம் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரெட்ரோ ஆடியோ லான்ச், டிரெயிலர் தற்போது வெளியாகி சூர்யாவை பற்றி நிலவிவந்த எதிர்விமர்சனங்களை எல்லாம் நொறுக்கி துவம்சம் செய்துவிட்டதாம்.. அந்த அளவுக்கு ரெட்ரோ படம் வெற்றி பெறும் என்று சூர்யாவின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியிலும் நம்பிக்கையிலும் உள்ளனர்.

Media Circle யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "பட்டைய கிளப்பியிருக்கிறது ரெட்ரோ டிரெயிலர்.. ஜானி படத்தில் ரஜினி கெட்டப்பின் சாயல், இதில் சூர்யாவுக்கு இருக்கிறது..

கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும்.. சிறப்பான தரமான சம்பவம் காத்திருக்கிறது என்று டயலாக் பேசுகிறார் சூர்யா.. இதே டயலாக்கை பேட்ட படத்தில் ரஜினி பேசியிருப்பார்.

சூர்யாவும், பூஜா ஹெக்டவும் குளத்தங்கரையில் பேசுவதை பார்த்தால், ரஜினியும், ஷோபனாவும் தளபதி படத்தில் குளத்தங்கரையில் பேசுவது போலவே இருக்கிறது. கிட்டத்தட்ட கலர் டோன், சைலண்ட், மென்மையான வசன உச்சரிப்பு எலலாமே அதுபோலவே இருக்கிறது. சூர்யாவுக்கு வேற லெவலில் ஒரு படத்தை தர வேண்டும் என்ற முடிவில் இருந்து வந்தார் கார்த்திக் சுப்புராஜ்.. அதனால், சூர்யாவை ஒட்டுமொத்தமாக இந்த படத்தில் வேற மாதிரி காட்டியிருக்கிறார்.

என்னென்ன ஆட்டம்

"எல்லாருடைய பல்ஸையும் பிடிச்சிட்டாரு, இனி என்னென்ன ஆட்டம் போடப்போறாரோ?" என்ற டயலாக் இந்த டிரெயிலரில் இருக்கிறது.. அதாவது, பில்டப் செய்வதுகூட சரியாகவே, படத்துக்கு தேவையானதாகவே உள்ளது..

நாசர், பிரகாஷ்ராஜ், ஜெயராம், கருணாகரன் போன்றோர் இதில் நடித்துள்ளார்கள்..ஜெயராம் பொதுவாக எந்த கேரக்டர் தந்தாலும் சிறப்பாக செய்யக்கூடியவர்.. இந்த படத்தில் காமெடியும் செய்திருக்கிறார் ஜெயராமன்.. அதைவிட ஸ்பெஷலாக, ஸ்ரேயா ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார்.

சூர்யாவுக்கு கம்பேக் படம்

பிரேமம் படத்தின் டைரக்டர் அல்போன்ஸ் புத்திரன்தான், இந்த ரெட்ரோ படத்தின் டிரெயிலரை எடிட் செய்துள்ளார்.. கார்த்திக் சுப்புராஜ் டிவியில நாளைய இயக்குனர்கள் செய்த காலத்திலிருந்தே, அல்போன்ஸ் புத்திரன் நெருங்கிய நண்பர் ஆவார்.. இயல்பாகவே எடிட்டிங் திறமை மிக்கவர் என்பதால், அல்போன்ஸ் புத்திரனை டிரெயிலரை எடிட் செய்து தரும்படி கார்த்திக் சுபபுராஜ் கேட்டுக் கொண்டிருக்கலாம்.

சூர்யாவுக்கு கடைசியாக வெளிவந்த கங்குவா படம் மிகப்பெரிய தோல்வி.. பெரிய அளவில் டிரோல் செய்யப்பட்ட படம்.. இதனால் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார் சூர்யா.. அதிலிருந்து வெளியே வரவேண்டும் என்று சூர்யா ஆர்வமாக இருந்து வருகிறார்.. அதற்கு இந்த ரெட்ரோ படம் நிச்சயமாக கைகொடுக்கும். மொத்தத்தில், சூர்யாவுக்கு கம்பேக் போலவும், சூர்யா ரசிகர்களுக்கு ட்ரீட் போலவும் இந்த ரெட்ரோ படம் அமையும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, "என்னுடைய கண்ணாடிப்பூவுக்கும் நன்றி. அவர் இல்லையென்றால் என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. ஜோதிகாவுக்கு நன்றி" என்று சூர்யா நேற்றைய விழாவில் பேசியிருந்தார்.

அதாவது நேற்று விழாவில் ஜோதிகா பங்கேற்கவில்லை.. இது தற்போது பல கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கிறது.. ஜோதிகா வாயில் சிகரெட்டுடன் வெப்சீரிஸ் நடித்திருந்த நிலையில், அது சிவக்குமாருக்கு வருத்தம் தந்ததாகவும் செய்திகள் கசிந்தன.

அதுமட்டுமல்ல, ஏற்கனவே பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில், "மும்பையில் இருந்துட்டே, கங்குவா படத்தின் புரமோஷனுக்கு ஏன் வரல? கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா, நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தபோது ஏன் வரல? கஙகுவா படம் சரியாக போகல்விலை என்றதும் வானத்துக்கும், பூமிக்கும் எகிறி குதிப்பது ஏன்? என்று ஜோதிகா குறித்து கேள்வி எழுப்பியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+