என்னை புற்றுநோய் மையத்தில் பார்த்தாங்களா? ஏன் வதந்தி? கனகா வேதனை.. போட்டோ பகிர்ந்த பிரபலம் வருத்தம்
சென்னை: நடிகை கனகாவின் தற்போதைய புகைப்படம் சிலவற்றை பாலாஜி ராமசுவாமி என்ற பிரபலம் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர அது பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகிவிட்டது. அது குறித்து பாலாஜி ராமசுவாமி கனகாவை ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு பேட்டி எடுத்திருந்தேன். அந்த அறிமுகத்தை வைத்து சில தினங்களுக்கும் முன்பு அவரை ஷாப்பில் மாலில் பார்த்த போது அவரிடம் பேசினேன். அப்போது எடுத்த போட்டோவை நான் தான் பகிர்ந்தேன். அது இந்த அளவிற்கு வைரலாகும் என்று நான் நினைக்கவில்லை என்று அவர் போஸ்ட் போட்டு இருக்கிறார்.
கனகாவின் புகைப்படம் வைரல் ஆனதை தொடர்ந்து அவருடைய சில வீடியோக்களையும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பாலாஜி பகிர்ந்து இருக்கிறார். அதுவும் இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது. அதில் ஒரு வீடியோவில் கனகா கலகலப்பாக பேசியிருக்கிறார். அப்போது சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் இறந்து போய் விட்டீர்கள் என்று செய்திகள் பரவி வந்ததே என்று கேட்ட கேள்விக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதில் கனகா பேசுகையில், அந்த செய்தி ஆரம்பத்தில் வெளியான போது அது ஒரு சின்ன விஷயம் தான் பெரிய அளவில் அது பேசப்படாது என்று நினைத்தேன். எதற்காக என்னைப் பற்றி அப்படி தேவை இல்லாத வதந்தியை சிலர் பரப்பினாங்க என்று எனக்கே தெரியவில்லை. எனக்கு புற்றுநோய் பாதித்து நான் பரிதாபமாக கேரளாவில் இறந்து போய்விட்டேன் என்று சிலர் செய்திகள் போட்டு இருந்தார்கள். அது முற்றிலும் பொய்.

நான் ஏதாவது புற்றுநோய் மையத்தில் இருப்பதை யாராவது பார்த்து இருந்தால் அப்படி செய்திகள் வெளியே சொல்லி இருக்கலாம். ஆனால் நான் அப்படி எந்த இடத்திருக்கும் போகவில்லை. எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் எதற்காக தான் இப்படி எல்லாம் தேவையில்லாமல் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை என்று பேசி இருக்கிறார்.
அதுபோல கரகாட்டக்காரன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க உங்களை கூப்பிட்டால் நீங்க நடிக்க போவீர்களா என்று கேட்ட கேள்விக்கும் சிரித்துக்கொண்டே கனகா பதில் சொல்லியிருக்கிறார். அதாவது இரண்டாவது பாகம் எடுத்தால் கனகா பாட்டியாக கதை எடுப்பாங்களா? என்று கேட்டிருக்கிறார். அதுபோல கனகாவை சந்தித்தது குறித்து பாலாஜி பேசுகையில் நானும் என்னுடைய நண்பர்களும் ரப்பர் வந்து திரைப்படம் பார்க்க போயிருந்தோம்.

படம் பார்த்துவிட்டு மாலில் நிற்கும் போது தான் அங்கு கனகாவை பார்த்தேன். ஏற்கனவே கனகாவோடு நான் பேசி பழகி இருக்கிறேன் என்பதால் அவரிடம் நான் அறிமுகம் செய்து கொள்ளலாம் என்று போனேன். அப்போது கனகா போனில் பேசிக்கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் என்னை ஞாபகம் வச்சு பாலாஜி எப்படி இருக்கீங்க என்று கேட்ட பிறகு முக்கால் மணி நேரம் நாங்க பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போது கனகா இப்பொழுது உள்ள எல்லா சினிமாக்கள் பற்றியும், நடிகர்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். கனகா யாரோடும் சேர்ந்து வாழவில்லை விரும்பவில்லை என்றாலும் மக்களோடு மக்களாக அவர் பழகிக் கொண்டிருக்கிறார். யாருக்கும் தான் யார் என்று தெரிந்து தன்னிடம் பழக வேண்டும் என்று கனகா நினைக்கவில்லை. ஆனால் நான் அந்த நேரத்தில் எடுத்த புகைப்படத்தை என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தது தான் தப்பு என்று எனக்கு இப்போ தெரிகிறது.
அந்த புகைப்படத்தை வெளியிட்டதால் இப்போது உள்ள கனகாவின் நிலை பலருக்கும் தெரிந்திருக்கும். அதனால் கனகாவை இனி வெளியே பார்க்கும்போது கூட பலரும் அவரிடம் செல்ஃபி எடுப்பதற்காகவோ அல்லது அவரிடம் பேசுவதற்காகவோ ஆசைப்படலாம். கனகா அதை விரும்பவில்லை. அவர் எளிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதை நான் கொடுத்து விட்டேனா என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று பாலாஜி பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications