சினேகனை ஒருதலையா நிறைய பேரு காதலிச்சாங்க.. நான் அவர்களிடம் சொன்னது இதுதான்.. கன்னிகா ஓபன்
சென்னை: நடிகை கன்னிகா ரவி தான் சினேகனை காதலித்தபோது அவரை சிலர் ஒருதலையாக காதலித்தார்கள், அவர்கள் வீட்டிற்கு மளிகை சாமான்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தார்கள். ஆனால் அப்போது நான் இதை தான் செய்தேன் என்று சில ரகசியங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
சினிமா திரையில் ஒரு ஒரு சில தம்பதிகள் பலரையும் வியக்க வைக்கும் அளவிற்கு வாழ்ந்து வருகிறார்கள். அதில் ஒருவர் தான் சினேகன் மற்றும் கன்னிகா தம்பதி. இவர்கள் இருவரும் சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று தங்களுடைய ஏழு வருட காதலை மறைத்து வைத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் இவர்கள் காதல் செய்தது சினிமா வட்டாரத்தில் பலருக்கும் தெரியாது.

கன்னிகா விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த கிராமத்தில் இருந்து சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்திருந்த நிலையில் அவருக்கு ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாணப் பரிசு சீரியலிலும் கதாநாயகியாக நடித்திருந்தார். திரைப்படத்தில் கதாநாயகியாக வேண்டும் என்று இவர்களுடைய காதலை வெளியே சொல்லாமல் இருந்தனர்.
அந்த நேரத்தில் சினேகன் பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் இருக்கும் போது தான் ஒரு பெண்ணை பல வருடங்களாக காதலித்து வருவதாக சொல்லி இருந்தார். ஆனால் அப்போது கூட யார் அவர் என்பது பற்றி சொல்லவில்லை. ஆரம்பத்தில் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து பிறகு பல ஹிட் பாடல்களுக்கு சினேகன் வரிகள் எழுதி இருக்கிறார். 90ஸ் கிட்ஸ்களிலிருந்து இப்ப வரைக்கும் நாம் முணுமுணுக்கும் பல பாடல்களை எழுதியது சினேகனாக தான் இருக்கும்.
ஆனாலும் அது இவர்தான் எழுதியது என்றே பலருக்கும் தெரியாது. அதை தெரிய வைக்கும் விதமாகத்தான் கன்னிகா தன்னுடைய திருமணத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் போடும் ரீல்ஸ் வீடியோக்களில் இந்த பாடலை எழுதியது சினேகன் என்று குறிப்பிட்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் சினேகன் மற்றும் கன்னிகாவின் காதல் விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்ததுமே இணையத்தில் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளானார்கள்.
சினேகனை விட கன்னிகா வயதில் குறைந்தவர் இதனால் பலரும் இவர்களுடைய திருமண வாழ்க்கை பல வருடங்கள் நிலைக்காது, வயதானவரை கன்னிகா திருமணம் செய்யப் போகிறார் என்றெல்லாம் கலாய்த்து வந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு பெரிய அளவில் சினேகன் வெளியே தெரியாமல் இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரிடமும் இணக்கமாக பேசியது.. பிறகு அவருடைய கட்டிப்பிடி வைத்தியம் பெரிய அளவில் இவரை பிரபலமாக்கியது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் கமல்ஹாசன் தலைமையில் பிரம்மாண்டமாக இவர்களுடைய திருமணம் முடிந்தது. அது குறித்து கன்னிகா மற்றும் சினேகன் தெரிவிக்கையில் நாங்கள் ஏழு வருடங்களாக காதலித்து வந்தோம். ஆனால் ஒருமுறை கூட நாங்கள் இருவரும் வெளியே ஒன்றாக சுற்றியது கிடையாது. ஏதாவது பேச வேண்டும் என்றால் கூட ஐந்து நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள் காரில் பயணித்தபடியே தான் பேசிக் கொள்ளுவோம்.
பிறகு யாருக்கும் தெரியாமல் நாங்கள் பிரிந்து சென்று விடுவோம். அதனால் எங்களுடைய காதல் வெளியே தெரியாமல் இருந்தது என்று கூறியிருக்கிறார்கள். அது போல திருமணம் முடிந்து இவர்கள் மூன்றாவது திருமண நாளை கொண்டாடி இருக்கும் நிலையில் பலரும் குழந்தை எப்போது என்று கேள்விகளை எழுப்பி வருவதால் இது இவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் கன்னிகா சில பேட்டிகளில் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பு சினேகனை பல பேர் சைட் அடித்திருக்கிறார்கள், ஒரு தலையாகவும் காதலித்திருக்கிறார்கள் என்று சில ரகசியங்களை கன்னிகா பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் நான் சினேகனை காதலித்த நேரத்தில் அவருடைய வீட்டிற்கு சென்று இருக்கிறேன். அப்போது சினேகனை நிறைய பேர் ஒன் சைடு ஆக காதலித்திருக்கிறார்கள்.
எங்களுடைய காதல் விஷயம் அவர்களுக்கு தெரியாததால் அவர்கள் மளிகை சாமான்கள், ஸ்னாக்ஸ் போன்றவற்றை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வருவார்கள். சினேகன் தனியாக இருக்கிறார் என்று அவருக்காக பார்த்து பார்த்து செய்வார்கள். அப்போது வீட்டிற்கு வந்தவர்களிடம் நான் நைசாக பேச்சு கொடுத்து நாங்கள் இருவரும் எடுத்த புகைப்படங்களை அவர்களிடம் காட்டி நாங்கள் இருவரும் காதலித்துக் கொண்டிருக்கிறோம், விரைவில் எங்களுக்கு கல்யாணம் நடக்க இருக்கிறது.
எங்களுடைய கல்யாணத்திற்கு நீங்கதான் முன் நின்று எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருப்பேன். அப்போது அவர்களுடைய ரியாக்ஷனை ஓர கண்ணால் நானே பார்த்துக் கொண்டிருப்பேன். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் அந்த இடத்தில் நான் ஒரு வில்லி போல நடந்திருக்கிறேன். அதை இப்ப நினைத்தாலும் எனக்கு சிரிப்பா இருக்கிறது.
பிறகு அவர்கள் வீட்டை விட்டு வெளியே போன பிறகு அவர்கள் வாங்கிக் கொண்டு வந்த ஸ்னாக்ஸை நான் தான் சாப்பிட்டுக் கொண்டு இருப்பேன் என்று அந்த பேட்டியில் சிரித்தபடியே கன்னிகா சொல்லி இருக்கிறார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications