தன்னுடைய ரகசியத்தையே பிசினஸ் ஆக மாற்றிய நடிகை கன்னிகா ரவி.. அப்போ கஸ்டமர்களுக்கு கொண்டாட்டம்தான்?
சென்னை: நடிகை கன்னிகா ரவி தன்னுடைய கணவரோடு சேர்ந்து புது பிசினஸ் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.
நீண்ட தலைமுடிக்கான அழகி என்ற பட்டத்தை பெற்ற நடிகை கன்னிகா ரவி ஹேர் ஆயில் பிசினஸை தொடங்கி இருக்கிறார்.
அது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கன்னிகா தெரிவித்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.

கே பாலச்சந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான அமுதா ஒரு ஆச்சரிய குறி சீரியல் மூலமாக சின்னத்திரையில் நடிக்க வந்தவர்தான் கன்னிகா ரவி. தொடர்ந்து சித்திரம் பேசுதடி, சத்திரபதி, தேவராட்டம், அடுத்த சாட்டை என பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்ததால் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு தமது பயணத்தை தொடங்கினார்.
வெள்ளிதிரையில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருடைய திறமைக்கு தகுந்த மாதிரி பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்று கன்னிகாவின் ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர். அதனாலேயே மீண்டும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண வீடு என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

இந்த சீரியலில் ஏற்கனவே ஒரு நடிகை நடித்து வந்த நிலையில் அவர் விலகிய பிறகு கன்னிகா நடித்து வந்தார். திருமுருகன் இயக்கி வந்த கல்யாண வீடு சீரியலில் சூர்யா கேரக்டரில் நடித்திருந்தார். தொகுப்பாளராகவும், சீரியல், சினிமா, மீடியா எல்லா பக்கமும் இவர் தன்னுடைய பயணத்தை தொடங்க வேண்டும் என்று நினைத்து இருந்தாலும் அதற்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.
கன்னிகா நீண்ட தலை முடிக்கான அழகி பட்டமும் பெற்றிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அவருக்கு சிலம்பாட்டம், ஓவியக்கலை, சமையல்கலை, புத்தக எழுத்தாளர் என பன்முக திறமையும் இருக்கிறது. இந்த நிலையில் தான் தற்போது தன்னுடைய கணவர் சிநேகனுடன் சேர்ந்து புதியதாக ஹேர் ஆயில் பிசினஸ் செய்ய போவதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

இவரிடம் இவர் வெளியே செல்லும்போது எல்லாம் இவருடைய நீண்ட தலை முடிக்கான ரகசியத்தை ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் அதையே வைத்து ஒரு பிசினஸ் செய்து விடலாம் என்று யோசித்து இருக்கும் கன்னிகாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications