சினேகன் வீட்டில் விசேஷம்.. மாமனாரின் மனதை குளிர வைத்த கன்னிகா.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: பாடலாசிரியர் சினேகனின் தந்தையின் நூறாவது பிறந்த நாளை சினேகனின் மனைவி ஆன நடிகை கன்னிகா வெகு விமர்சனமாக கொண்டாடி இருக்கிறார் தன்னுடைய மாமனாரின் நூறாவது பிறந்த நாளில் கோவிலில் அவர் செய்த சிறப்பு வழிபாடு வீடியோவை வெளியிட்டு இருந்த நிலையில் இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
பாடலாசிரியர் சினேகன் என்று சொன்னதும் பலருக்கும் அவருடைய முகம் தெரியாமல் இருந்த காலகட்டத்திலேயே அவரை காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்ட கன்னிகா ரவி தான் தன்னுடைய காதலையும் கணவர் மீது வைத்திருக்கும் பாசத்தை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளிக்காட்டி கொண்டிருக்கிறார்.ரசிகர்கள் பெரும்பாலும் முணுமுணுக்கும் பாடல்களின் சொந்தக்காரராக இருக்கும் சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமாக பிரபலம் அடைந்து விட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகனை பார்த்த பிறகு தான் பலருக்கும் இவர் தான் நமக்கு பிடித்த பல பாடல்களை எழுதியவரா?? என்ற கேள்விதான் எழுந்தது. அதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் உடைய கட்டிப்பிடி வைத்தியம் பலரைக் கவர்ந்தது. அது மட்டுமல்லாமல் நெட்டிசன்களை கலாய்க்கவும் வைத்திருந்தது. அனைவரிடமும் இணக்கமாகவும் அதே நேரத்தில் தன்னுடைய காரியத்தில் கவனமாகவும் இருந்த சினேகன் பலருடைய கவனத்தை ஈர்த்திருந்தார். அதனால் தான் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சினேகன் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்து. அவருக்கு ரசிகர்களும் ஆதரவு கொடுத்து வந்தனர்.
திரைத்துறையில் இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது என்பது வழக்கமான ஒன்றுதான். அதுபோலத்தான் சினேகன் மற்றும் கன்னிகா ரவி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் இவர்களுடைய வயது வித்தியாசத்தை பற்றி பலர் கலாய்த்து வந்தாலும் போகப் போக இவர்கள் இருவரின் அன்பை பார்த்து வாழ்த்துக்களை கூறத் தொடங்கி இருக்கின்றனர். தங்களைப் பற்றி எவ்வளவோ நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாத இந்த ஜோடி தங்களுடைய துறையில் தற்போது பிஸியாகவே இருந்து வருகின்றனர்.

சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தற்போது சினேகனின் அப்பாவின் நூறாவது பிறந்த நாளை சினேகன் மற்றும் கன்னிகா ரவி இருவரும் சேர்ந்து கொண்டாடி இருக்கின்றனர். கோவில் ஒன்றில் தன்னுடைய தந்தையிடம் சினேகன் மற்றும் கன்னிகாவோடு அவர்களுடைய குடும்பத்தினர் என எல்லோரும் ஆசிர்வாதம் வாங்கியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து அங்கு பூஜையும் நடைபெற்று இருக்கிறது.
இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்த சினேகன் தன்னுடைய அப்பாவிற்கு நூறாவது வயது என்று சொல்லி இருக்கும் நிலையில் பலரும் அவருக்கு அவர் வாழ்த்துக்கள் கூறிய வருகிறார்கள். சினேகன் பல இடங்களில் தன்னுடைய தந்தை குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.
ஆரம்பத்தில் பல்வேறு அவமானங்களை கஷ்டங்களையும் தாண்டி தன்னுடைய தந்தையால் தான் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கேன் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட சினேகன் கூறியிருந்தார். அதுபோல தன்னுடைய சொந்த கிராமத்திற்கு தான் தன்னுடைய தந்தையை பார்ப்பதற்காக மட்டும்தான் போவேன் என்றும் கூட ஆரம்பத்தில் கூறியிருந்தார். அதற்கு பிறகு கன்னிகாவை திருமணம் செய்த பிறகு தான் அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று வரும் சினேகன் அங்கு பலரும் பொறாமைப்படும் அளவிற்கு சொந்த பந்தங்களோடு வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications